96 ராமும் சுமார் மூஞ்சி குமாரும்



பள்ளி காலத்து முதல் காதலை மிக அழகா காட்டிய படம் 96. அந்த வயசுல வருவது காதல் இல்லை அது எதிர்பால் மேல் ஏற்படும் ஈர்ப்புனு சொல்லுவாங்க எனக்கு என்னமோ அது சந்தேகமாதான் இருக்கு அந்த காதலின் அழகும், ஆழமும்  வளர்த்த பிறகு வரும் பக்குவப்பட்ட காதலில் இருப்பதில்லை இங்கு சில எதிர்பார்ப்புகள், தேவைகள் இருக்கும் ஆனால் பள்ளி காதல் அப்பிடி இல்ல கடைக்கண் பார்வை போதும் பட்டாம்பூச்சி மனசுல பறக்க, அவள் சுண்டு விரல் ஸ்பரிஸம் போதும் ஆயிரம்  பேரழகிகளுடன் காமுற்றாலும் அந்த இன்பத்துக்கு இணையாகாது. 
கண்டால் பேச்சு வராது. காணவிட்டால் தூக்கம் வராது. காதலை உணரும் தருணங்கள் சுகமாவும். ரணமாகவும் மொத்தத்தில் வாழ்வின் மிக அற்புதமான நாட்கள் ! தேவதை என்ற வெறும் வார்த்தைக்கு உயிர் கொடுப்பாள். ஒரு ஆண், பெண்னை கொண்டாடும் காலம் வார்த்தை கொண்டு உயிர்ப்பிக்க முடியாது. அவள் மட்டும் யாதும்மாகி நிற்பாள். பிரியாமல் கூடவே இருந்தா போதும் அது மட்டுமே தேவையாக இருக்கும். காமத்திற்கு அங்கு வேலை இருக்காது காதல் மட்டுமே.96 அந்த உணர்வ மென்மையா, அழகா பதிவு செஞ்சு இருக்கு. 
இந்த படத்தை ஆண்கள் கொண்டாடியதின் காரணமும் இதுவாதான் இருக்க முடியும். அந்த சின்ன வயசு ராம் ஒவ்வொரு முறையும் ஜானுக்கிட்ட பேசமுடியாம தவிப்பான். அவகிட்ட நெருக்கும் போது நெஞ்சு பட, படன்னு அடிச்சுக்கும் இல்லையா? Girls நம்புங்க, அது உண்மை  அந்த அனுபவம் எனக்கும் இருக்கு. இந்த மாதிரி காட்சிகள் தான் படத்தின் அழகே. விஜய்சேதுபதி & த்ரிஷா ஜோடி செம்ம ரெண்டு பேரோட நடிப்பும் 
ஆர்ப்பாட்டம் இல்லாம இயல்பா இருக்கு. படத்தோட பின்னணி இசையும்.
முழு ஆல்பமும் படத்துக்கு பெரிய பலம். படம் பார்த்து முடிஞ்சதும் மனசுல 
சுகமான நெருடல் இருக்கும் அது தான் இயக்குனரோட வெற்றி. feel good movie பார்க்கத்தவங்க கட்டாயம் பாருங்க.

கல்லுரியில் ஜானுக்கிட்ட பேச வரும் ராம் ஒருவேளை நேர்ல சந்திச்சு பேசிருந்தா  அவளை இழந்துருக்க மாட்டான். அவன் விட்ட தூது சரியா போய்சேர்ந்து இருக்காது. அது தெரியாம திருப்ப முயற்சிக்காமல் போயிடுவான். நிஜத்திலும் பல காதல்கள் சேராமல் போக இதுவும் ஒரு  காரணம். பிரிந்த உறவை புதுப்பிக்க நினைத்தால் பேசி புரியவைக்கனும். Await பண்ணுனாலும் உடனே விட்டுற கூடாது  சில attempt பிறகு ஓரு வேலை உங்க அன்பு புரிச்சு திருப்பி வரலாம். அதுக்குனு வேணான்னு சொல்லுறவங்ளை disturb பண்ணவும் கூடாது ஓரு கட்டம் வரை போராடி பார்க்கலாம். இத ஏன் சொல்லுறனா  காலம் கடந்து யோசிச்சு எந்த பயனும் இல்லை. வாழுறது ஓரு வாழ்கை அத பிடிச்சவங்ககுட வாழமுடிச்சா அத விட இன்பம் வேற என்ன இருக்கு !?

இப்போ மேல படிச்சத மறந்துட்டு கீழே வாசிக்க ஆரம்பிங்க👇

பள்ளிக்காலம் முடிந்து வெளி உலகத்துக்கு  வந்து 5000 ரூபா சம்பளத்கை 50,000 
உயர்த்த போராடும் போராட்டத்தில் காதலும் கடந்து போகும் என்னும் 
நிதர்சனம் புரியும் வரை. வெறும் அன்பை கொண்டு அரிசி வாங்க முடியாது 
இன்னும் நீ வளரனும்டா என்று ஜானுக்கள் புரியவைக்கும் வரை. பிறகு லைப்ல செட்டில் ஆகும் அந்த சாகசப்பயணத்தில் அடிபட்டு, அவமானம்பட்டு, அனுபவப்பட்டு, நொந்து நூலாகி  ஒரு வழியா மேல ஏறி வரும் போது ஜானுக்களுக்கு  கல்யாணம்மாகி குழந்தையும் கிடைச்சிடும். அப்போ தான் ராம்களுக்கு உலகம் புரிய ஆரம்பிக்கும்! இந்த பயணத்தின் முடிவில் சில ராம்கள் காண்டாகி ஆளவந்தான் நந்துவாகவும், மன்மதன் சிம்வுவாகவும் மாறிவிடுவதும்  உண்டு. மிச்ச ராம்களுக்கு யாரோ ஒருவனின் ஜானு மனைவியாக கிடைத்து விடுவாள். கடைசி வரை ராம்மாகவே இருக்கவனுக single லாவே  இருந்து செத்து போகவேண்டியது தான் !

இந்த படத்துல வார ராம் கதாபாத்திரத்தை  நினைச்சாதான் பாவமா இருக்கு. ஜானுக்கிட்ட கடைசிவர பேச தைரியம் இல்லாம அவளுக்கு தெரியாம பின்னால சுத்தி,  கல்யாணத்துல வேற போய்ட்டு நின்னு. நினைச்சி பார்க்கவே 
கொடுமையா  இருக்கு கிறுக்குபய இத விடமோசமான வலியை யாரும் அவனுக்கு குடுக்க முடியாது.  37 வயசு வர வெர்ஜின் வேற....! எந்த ஆண்மை குறைபாடும் இல்லாத ஒருத்தன் இத்தனை வருஷமா வெர்ஜினா இருக்கானா எவ்வளவு கொடுமை தெரியுமா? இயற்கைகே விரோதமான செயல். (இதுக்கு மேல கல்யாணம் கட்ட நினைச்சா கிழட்டு வயசுல பொண்ணு கிடைக்குறது வேற கஷ்டம்) ராம்ட ஸ்டுடன்ட்ஸ்ல ஓரு பொண்ணு அவனை விரும்பும் 
இல்லையா இந்த ஜானு அவகிட்ட வேற புருஷன், பொண்டாட்டினு தன்னோடே ஆசைக்கு பொய் சொல்லி கடைசில அதும் செட் ஆகாம பண்ணிடுவா. இருந்தாலும் ஜானுவும் ராமுக்கு எதோ அட்வைஸ் எல்லாம் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ இப்படி தனியா இருக்காதனு சொல்லிட்டு போகும் போது அந்த சுடிதார் வச்சிட்டு போயிற்றா நம்ம ஹீரோ அதை எடுத்து மடிச்சு தன்னோட நினைவு பெட்டகத்தில் வைக்குறத பார்த்தா இன்னும் 10 வருஷத்த இதவச்சே ஓட்டிருவானு தெரியுது. எனக்கு கவலை ஏன்னா? பெண்மைய நேசிச்சு காதலை கொண்டாட தெரிஞ்ச  ராம் single வே 
இருந்து சாக போறானேனுதான். கடைசிவர பேச தைரியம் இல்லாம 
ஜானுவ மிஸ் பண்ண ராம்மா இருக்கத விட. தைரியமா நம்பிக்கையா குமுதாவை உஷார் பண்ண சுமார் மூஞ்சி குமரா இருக்கது ஆரோக்கியம்னு தோணுது.

நரேஷ் 11-21-2018

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I