The Family Man 2019



எதேட்ச்சையாகதான் இந்த வெப்சீரிஸ் கண்ணுலபட்டுச்சி. நமக்கு பிடிச்ச Genre வேற, ரேட்டிங்கும் நல்லா இருக்க சரி பார்க்கலாமுன்னு முடிவு பண்ணுனேன். முதல் எபிசொட்லையே விறுவிறுப்பு தொற்றிக்கொண்டது. முடிவுவரை 
தொய்வே இல்லை.  

கதையோட ஒன்லைன் இதுதான் மிடில் கிளாஸ் குடும்பஸ்தன் ஆன ஸ்ரீகாந்த், நேஷனல் இன்டெலிஜென்ஸ் ஏஜென்சில (NIA) ஏஜென்டா இருக்கும் தீவிர நாட்டுப்பற்றுடைய குடிமகனும் கூட. குடும்பத்தையும் கவனிச்சுக்கிட்டு, 
தன்வேலையையும் எப்படி சமாளிச்சு கொண்டு போறாங்குறதுதான் கதை.
இவங்க அமைப்பின் நோக்கம்  என்னன்னா? நாட்டில் தீவிரவாதிகளினால் ஏற்படப்போகும்  அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்து நிறுத்துறது. அதற்காக நேரம் காலம் பார்க்காமல் உயிரைப்பணையம் வைத்து கடுமையாக வேலைப்பாக்குறாங்க. 

Manoj Bajpai நடிப்பை பற்றி சொல்லியே ஆகணும். Gangs Of Wasseypur படத்துல மனுஷன் என்னமா நடிச்சு இருப்பாருனு தெரியும். பக்கா வில்லத்தனம். சிரிப்பை பார்த்தாலே எவன் தலையை அறுக்க போறானோன்னு பயமாயிருக்கும். இந்த சீரிஸ்ல வேறு ஓரு முகத்தை பார்க்கலாம். வீட்டுல பசங்ககிட்ட பேசும் போது முழிச்சுகிட்டு பார்க்கும் பார்வையிலே நமக்கு சிரிப்பு வந்துரும். நல்ல டார்க் ஹியூமர் இருக்கு சிரிச்சிகிட்டே பார்க்கலாம். பிள்ளைகளாகவரும் குட்டி பசங்கட நடிப்பும் வெகுநேர்த்தி. மேலும் நமக்கு பரிட்சயமான முகங்கலான  பிரியாமணி, கிசோர் எல்லாம் முக்கிமான ரோல் பண்ணிருக்காங்க.கதை வசனத்தை பற்றியும் சொல்லி ஆகணும். ஒவ்வொரு வார்த்தையும் வெகுநேர்த்தி எங்குமே தேவையில்லாமல் சொருகப்பட்டிருக்கவில்லை. பிறகு வெப்சீரிஸ்க்கே உரிய "அடிங்க கோத்தா" என்னும் வார்த்தையை தொடர்முழுவதும் தீவிரவாதி முதற்கொண்டு டீ கடைக்காரன் வரைக்கும் பேசுறான். அதுவும் நல்லாதான் இருக்கு.    

ஓரு காலத்துல தீவிரவாதினா அந்திய மொழியை பேசுபவனாக இருந்த காலம் போயிட்டு இப்போதேல்லாம் தமிழ், மலையாளம் பேச ஆரம்பிச்சிட்டாங்க. 
அயல் தேசத்துலையும், மாநிலத்துலையும்மாக இருந்த தீவிரவாதம் இப்பே நம்ம பக்கத்து வீட்டுக்கே வந்துருச்சி. 2019ல இலங்கையில் நடந்த உதிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் இதற்கு சிறந்த எடுத்து காட்டு. தீவிரவாதம் உருவாக அடிப்படை காரணிகள். ஒன்று பெரும்பான்மை சமூகத்தால் ஆளப்படும் அரசாங்கம் கடுமையான அடக்குமுறைகளை தாழ்த்தபட்ட அல்லது சிறுபான்மை இன/மதத்தினரின் மேல் தொடர்ச்சியாக பிரயோகித்தல். இரண்டு தீவிர மதபற்று. இக்காரணிகள் எப்படி தாக்கத்தை உண்டாக்கும் என்றால். என் குடும்பத்தை சிதைத்தவனையும் அவன் சார்ந்தவர்களையும் பழிக்குப்பழி தீர்த்தேயாகணும் என்ற வெறியும். மதத்துக்குகாக உயிரை கொடுத்தால் சொர்க்கத்துக்கு போகலாம் என்ற பைத்திக்காரத்தனமும் சேர்ந்து தீவிரவாதிகளை உருவாக்குகின்றது. மூன்றாவதாகவும் ஓரு காரணம் உண்டு வல்லாதிக்க நாடுகளின் உளவுத்துறையும் இதற்கு ஓரு பிரதான காரணம். இவர்கள் தங்களின் சுயநலத்துக்காக மறைமுகமாக தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் எல்லாம் சமாசாரங்களை செய்து கொண்டே வெளியில் தங்களை உத்தமர்களாக காட்டிக்கொள்வார்கள்.

இந்த தொடரின் இன்னோரு சிறப்பு பக்கச்சார்பற்று எல்லோருடை தரப்பில் இருக்கும் நியாங்களையும் தவறுகளையும் நடுநிலையாக பேசுவது. இந்திய அரசாங்கம் முதற்கொண்டு , காஷ்மீரிகள், பாக்கிஸ்தான் அரசாங்கம், தீவிரவாதிகள், தேசியவாதிகள், மதவாதிகள், அரசியல்வாதிகள் வரைக்கும் விமர்சனம் செய்வதில்  தெளிவான புரிதலைக்காணலாம்.

ஓரு விஷயத்தை கதையாக்க முன்பு அது தொடர்பான தெளிவான புரிதல் அவசியம். அந்த வகையில் தொடரின் தயாரிப்பு குழு இக்கதையினை படமாக்கமுன்னர் சமகால தீவிரவாதம் தொடர்பான முழுமையான களஆய்வில் ஈடுப்பட்டு தகவல்களை திரட்டி காட்சி கோர்வைகளாக சுவாரசியம் குறையாத வகையில் சிறப்பாக தொகுத்து உள்ளார்கள் என்பது 
தெளிவாக புலன்படுகின்றது. எங்கும் மிகைபடுத்தல்கள் இல்லை.

"அவங்க ஓரு தடவை ஜெயிச்சா போதும், ஆனால் நாமே ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கனும்"

மேல உள்ள வசனம் ஸ்ரீகாந்த் திவாரிகிட்ட அவர் மேல் அதிகாரி சொல்லுறது. 
எவ்வளவு அர்த்தம் உள்ளதுனு யோசிச்சுபாருங்க!? தீவிரவாதிங்க ஓருமிசனை சரியா பண்ணிட்டா பல நூறு அப்பாவி பொதுமக்கள் செத்து போயிடுவாங்க இதுல இருந்து நம்மள தினமும் காப்பாத்துறது ஸ்ரீகாந்த் திவாரி மாதிரி எங்களுடனே மறைந்து வாழும் அந்த முகம் இல்லாத துப்பறிவாளர்கள்தான். கடமையை செஞ்சிட்டு அவங்கபாட்டுக்கு எந்த பெயர் புகழையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்துட்டு இருப்பாங்க. I Salute Them !

Amazon Prime ல கிடைக்கும் 
நரேஷ்-35©

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I