ஆயிரம் காலத்து பயிர்

சக வெளிநாட்டு நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி நீ மேரேஜ் பண்ணிட்டியா? நான் இல்லன்னு பதில் சொன்னதும். ஏன் உங்க நாட்டுகாரங்க பொதுவா லேட் ஏஜ்ல மேரேஜ் பண்ணுறீங்கனு? அடுத்த கேள்வி. நேபாளம், இந்தியா போன்ற நாட்டவர்கள் முப்பது வயது வரை காத்திருப்பது இல்லை. பொதுவா நாம அப்போதான் திருமண வாழ்கைக்கு தயாராகுறோம். அந்த சமயத்தில் கூட பொருளாதார ரீதியாக இஸ்திரமான நிலையிருக்காது. திருமண வயதை தீர்மானிப்பதில் பணத்திற்கும் முக்கியப்பங்குண்டு. 


மலைபோல் உயர்ந்து நிற்கும் வாழ்கை சிலவுகளுக்கு மத்தியில் சுமுகமாக திருமணத்தை நடத்தி முடிக்க பலவருட உழைப்பும், சரியான திட்டமிடலும் தேவை எடுத்தோம், கவுத்தோமுனு பண்ணுற காரியாமில்லை. இதை வெளிநாட்டு தோழர்களுக்கு புரியவைப்பது கடினம். கவுண்டமணி சொல்லுறமாதிரி "நானாடா மாட்டேன்றேனு" மனசுக்குள்ள சொல்லிக்கிட்டு அந்த இடத்தை விட்டு நகர்த்துருவேன்.

யோசிச்சு பாருங்க கொஞ்சம் சுமாரா திருமணத்தை நடத்த குறைந்தது பத்து லட்சம் ரூபா சரி வேணும். பணக்காரங்களுக்கு இது பிரச்சனையே இல்லை. வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கவங்க பெருசா அலட்டிக்கிறது கிடையாது
கைல இருப்பதை வைத்து எளிமையா முடிச்சிடுவாங்க. ஆனால் இந்த மத்திய வர்க்கம் இருக்கே பணக்காரனாவும் வாழ முடியாம, ஏழ்மையும் வெளிக்காட்டிக்க முடியாம! "ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு காலுன்னு" தடுமாற வேண்டியிருக்கு.

உங்க கிட்ட இருபது லட்சம் ரூபா சேமிப்பாயிருந்தா பத்து லட்சம் ரூபா செலவு பண்ணி திருமண பண்ணுறது பரவால்லை. சரி பத்து லட்சம் மட்டும் தான் சேமிப்புல இருக்கு அந்த பத்தையும் திருமணத்துக்கு செலவு பண்ணுறது ஆரோக்கியமான விஷயமில்லை இருந்தாலும் விட்டுருவோம்.
உங்க கிட்ட சேமிப்பே இல்லை மொத்தமும் கடனை வாங்கி கல்யாணத்துக்கு செலவு பண்ணுறிங்கனு வச்சிக்கிருங்க! திருமணத்துக்கு பிறகு கடனை கட்டிமுடிக்குறதுலயே மணவாழ்க்கை கசந்து போயிடாதா?

மிடில் கிளாஸ் குடும்பங்களில் சேமிப்பு பண்ணுறத கனவுல கூட நினைச்சு பார்க்க முடியாது வரவும், சிலவும் கணக்காயிருக்கும். சராசரியா 50% பேருக்கும் சொந்த வீடுயிருக்காது. நிச்சயமா சேமிப்புனு ஒன்னுயிருந்தா எல்லாம் வீட்டை கட்டுறதுலயே போயிடும். பிறகு இதர பொறுப்புகள், கடமைகள். இப்படி ஒன்னு ஒன்னா முடிச்சி முக்கி, தக்கி கல்யாணத்துக்கு தயாராகும் போது முப்பது வயசு தாண்டிடும். அதுக்கு பிறகு வயசுக்கு வந்தா என்ன, வராட்டிதான் என்ன?

பள்ளி படிப்பை எல்லாம் முடிச்சி பொதுவா இருபது வயசுல வெளியுலகத்துக்கு வந்து வேலைக்கு போனால் ஆரம்பகட்ட சம்பளம்
ரொம்ப மோசமாயிருக்கும். தொடர்ச்சியாக ஒரு ஐந்து வருடம் சரியான வருமானத்தை தரக்கூடிய தொழிலை தேடி அலையுறதுலையே போயிடும்.
அவன் நேரம் நல்லாயிருந்தா இருபத்தைதாவது வயதில் ஒரு அளவுக்கு நல்ல வருமானம் வரக்கூடிய தொழிலில் இருக்கலாம். அதுவும் ஒரு முப்பது ஆயிரத்தில் ஆரம்பித்து ஐம்பது ஆயிரம் வரைக்கும் தான். இந்த வருவாயை
வைத்து இதர சிலவுகளுக்கு மத்தியில் ஐந்து வருடத்திற்குள் பத்து லட்சம் ரூபா சேமிப்பது இலகுவான காரியமா?

பொதுவா நண்பர்களிடம்  பேசும்போது கேட்பேன்  "மச்சி எப்படா கல்யாணமுன்னு?" அதுக்கு ஒருத்தன் சிரிச்சுகிட்டே அப்பிடி ஒரு சம்பவம் நடக்குமான்னு சந்தேகமாயிருக்குடானு சொல்லுவான் சும்மா தமாஷா
பேசுறமாதிரி இருந்தாலும் அந்த வார்த்தைகள் வலிமிகுந்தவை.
பணம் இங்கு முக்கிய காரணி அதை மறக்கக்கூடாது. சில நண்பர்கள்
வாழ்கையே வெறுத்து போனமாதிரி இப்படியே இருந்துட்டா நிம்மதிடானு சொல்லுறானுக. மேலே நான் குறிப்பிட்ட நண்பர்கள் எல்லாம் யாரையும் தங்கி வாழாமல் அவர்களே உழைத்து தங்களின் திருமணத்தை நடத்த
வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்கள்.

மிடில் கிளாஸ் ஆண்களை நினைச்சு பார்த்தா பரிதாபமாயிருக்கு!
ஏன் சொல்லுறன்னா? முதல் வீட்டை கட்டுவான், பிறகு கல்யாணத்தை பண்ணுவான் அப்புறம் செத்து போயிடுவான்.

வசதி இருந்தா ஆடம்பரமா கல்யாணம் பண்ணலாம் பாதகம் கிடையாது.
ஆனால் ஐந்தாறு வருடம் கஷ்டப்பட்டு சேமிச்சு ஒரே நாளில் சிலவு செய்வது மோசமான யோசனை. அதேநேரம் முழுதும் கடன் வாங்கி பெருசா திருமணத்தை நடத்துறது விஷப்பரிட்சை. அதுக்கு பதில் கையில் இருப்பதை வைத்து எளிமையான முறையில் நடத்துறது மேல். கடன்பட்டு மனஉளைச்சல்ல கிறுக்கு பிடிச்சு அலையுறதுக்கு பதில், சோபனை இல்லாமல் எளிமையா இருந்துட்டு போகலாமே! பொய்யான பிம்பத்தை கட்டமைப்பதை விட, சுயத்துடன் வாழ்வதற்கு லஞ்சை அடைய தேவையில்லை.

பின்குறிப்பு: இந்த பதிவை வாசிக்கும் தோழிகள் யாரும், சரியான பிச்சைகார பயலாயிருப்பான் போல மறந்தும் இவன் பக்கம் திரும்பி விடக்கூடாதென்று நினைக்க வேண்டாம். என்கிட்ட பத்து லட்சம் ரூபா பணம் ரொக்கமாவும், சவூதி அரேபியாவில் சொந்தமா எண்ணெய்கிணறும் இருக்கு. மஞ்ச கயிறும் போக்கடில ரெடியாயிருக்கு.


நரேஷ் 21-06-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I