விக்ரமாதித்தனின் பாஸ்வேர்ட்




குறுங்கதை
மீண்டும் மனம் தளராத விக்ரமாதித்தன் முருங்கை மரத்தின் மேல் ஏறி அங்கே தொங்கி கொண்டிருந்த வேதாளத்தை பிடித்து தொளில் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். சரியான தருணம் பார்த்து வேதாளம் வழமை போல ஒரு கதையை கூறி குழப்பிவிட்டு பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி கொண்டது. இதில் விக்ரமாதித்தன் தான் சொக்கன் அவனுடைய காதல்(கள்) தான் வேதாளம். பல முறை பல்ப் வாங்கியும் அவன் திருந்தியபாடு இல்லை. இம்முறை மிகுந்த நம்பிக்கையுடன் காணப்பட்டான். சரியாக முடிவு எடுத்து இருப்பதாகவும் எக்காரணம் கொண்டும் அவளை இழக்க போவது இல்லை என்று அடிக்கடி என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தான். 

அவன் ரகசியங்களை என்னிடம் மறைப்பது இல்லை. என்மேல் மிகுந்த நம்பிக்கை உடையவன் அவனின் டயரி குறிப்புகளை கூட படித்து இருக்கின்றேன் அவனின் அனுமதியுடன். ஒரு வேலை நாங்கள் Gay யாக பிறந்து இருந்தால் லிவிங் டு கத்தேரில் இருந்திருப்போமெ என்னவோ? இருவருக்குமிடையில் அந்த அளவுக்கு அன்னியோன்யம். அவனின் டயரி குறிப்புகள் சுவாரசியமானவை அதை போலவே என்னிடம் பகிரும் விஷயங்களும். 

சொக்கன் கொஞ்ச காலமாக
ஒருத்தியிடம் உறவில் இருந்தானாம் திடீரென பேசுவதை நிறுத்தி விட்டாளாம். அவன் அழைப்புகளை கண்டுகொள்வதில்லையாம்
குறும்செய்திகளுக்கும் பதில் இல்லையாம். இந்த திடீர் தாக்குதலுக்கும் ஒரு நாளைக்கு முன்பு வரை இருவரும் கொஞ்சி குலாவி கொண்டு இருந்தார்களாம். அன்று இரவுக்கூட காதல் ரசம் சொட்ட, சொட்ட அவள் அவனுக்கு எழுதிய ஒரு கவிதையை வாசித்து காட்டியதாகவும் அதில் மானே, தேனே, உசுரே, மசுறுரே, இத்யாதி...! உன்னை நீங்க மாட்டேன் என்பதை நிறுவும் அலங்கார வார்த்தைகள் நிறைந்து இருந்ததாகவும் இவை எல்லாம் கேட்டு திளைத்து, திக்குமுக்காடி போயிருந்த சமயத்தில் இந்த அசம்பாவிதம் நடந்து விட்டதாக நொந்து கொண்டான்.

நான் சொக்கனிடம் "ஏண்டா பெரிய மயிரான்டியாட்டம் வாய் கிழிய பேசுவ" எல்லா தடவையும் இப்படி ஏமாந்து போய்டுறியேனு? கடித்து கொண்டேன். இல்ல மச்சி ரொம்ப நம்பி இருந்தேன். பல வருடங்களுக்கு பிறகு என் இமெயில் பாஸ் வெர்டை கூட முன்னால் காதலியின் பெயரை மாற்றி இவளின் பெயரை போட்டேன் இப்போ இவளும் முன்னால் காதலியாகி போய்விட்டாள். (பாவத்தே!) இப்பொழுது (பாஸ் வேர்டை) திரும்ப மாற்றுவதை நினைத்தால் அவனுகே அசிங்கமா இருக்காம். சரி அப்படி என்ன தான் உங்கள் பிரிவுக்கு காரணம்? என்று கேட்டேன். தனக்கும் தெரியாதாம்
கொடுமையான விஷயம் அதை கூட சொல்லாமல் போய்விட்டாலாம்.
அவள் விஜயின் தீவிர விசிறியாம் துப்பாக்கி படத்தை கடந்த வாரத்தில் இரண்டு தடவை பார்த்தாலாம். இவனையும் பார்க்க சொல்லி நச்சரித்து வேறு இருக்கின்றாள். சொக்கனுக்கு மசாலா படங்களின் வாடையே பிடிக்காது என்பது அவளுக்கு தெரியாது. இப்போ அதற்கு அவசியமும் கிடையாது. பிரிவிற்கு காரணத்தை அவள் சொல்லாட்டியும் துப்பாக்கி படத்தில் கிளைமாக்ஸ்ல் விஜய் சொல்லக்கூடும் என்றேன். புரியலடா!? சரி அதை விடு..., உன் இழப்பை என்னால் உணர முடிகிறது மேற்கொண்டு என்ன செய்வதாக உத்தேசம்?

ஒவ்வொரு முறை காதல் வயப்படும் போதும் எனக்கானவள் என்று நம்பி மனைவியாக கற்பனையில் நினைத்து......, நினைத்து....., டயர்டா! இருக்கு, நீயே சொல்லு எத்தனை பெயரைதான் நானும் மனைவியாக நினைத்து பார்ப்பது? போதாக்குறைக்கு குழந்தைகள் பெற்று கொள்வது முதற் கொண்டு என்ன பெயர் வைப்பது வரை எல்லாம் பேசி தீர்ந்துவிடும் பொழுது சிட்டாக பறந்து போயிடுறாளுங்க. அடுத்து வருபவளிடம் எதுவுமே பேச போவது இல்லையாம் இன்னும் சூதனமாக நடந்து கொள்ளப்போவதாக சொன்னான். உனக்கு கஷ்டமாக இல்லையா என்றேன்? இருக்குதான் ஆனால் போக, போக பழகிவிடும் இவளுக்கு முன்னால், அவள் விட்டு போனபோதுகூட அப்படித்தான் இருந்தது சரி உன்கிட்ட ஒன்னு கேக்கணும் மச்சி? ம்ம்ம் கேளு. நீ மட்டும் எப்படிடா காதலிச்சவலையே கட்டிக்கிட்ட? அதுவும் பத்து வருஷமா ஒருத்தியவே? இந்த அசாத்தியத்தை எப்பிடி நிகழ்த்த முடிஞ்சிது? 
சொக்கா நானும் அவளும் காதலித்தோம் ஒரு உறவுக்குள் வந்த பிறகு அதற்கு பெயரிடவில்லை மாறாக எங்கள் நேசத்துக்கு விடை தேடிய பொழுது அதன் பெயர் காதலென்று உணர்ந்து கொண்டோம், ஆயிரம் ஊடல்கள் வந்தாலும் காரணம் சொல்லி பிரிந்து போகும் எண்ணம் என்னவோ இருவருக்கும் தோன்றவேயில்லை. இவையெல்லாம் அதுவாக நிகழ்ந்தவை உனக்கானவளை நீ காணும் போது உனக்கும் நிகழும். பெரிதாக உன்னை வருத்திக்கொள்ள அவசியம் இருக்காது. இதையும் மனதில் வைத்துகொள் சில தருணங்களில் உன்வாழ்நாளில் நீ அவளை கண்டடைய முடியாமலும் போகலாம்.

நரேஷ் 
05-07-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I