Ishq / 2019





No Spoilers
Ishq / 2019 / மொழி: மலையாளம் 

பீல் குட் மூவினு சொல்லுவம்மில்லையா 
அது மாதிரி இது பீல் பேட் மூவினு சொல்லலாம். 
அதுக்குன்னு பார்க்க சகிக்காத மோசமான படமுன்னு அர்த்தப்படுத்திகிறாதிங்க, வாய்ப்பு கிடைச்சா அடுத்தவன் அந்தரங்கத்துல புகுந்து விளையாடும் சேடிஸ்ட் கலாச்சார காவலர்களினால் நிகழும் சமூக அவலத்தை தோலுரித்து 
காட்டி நம்மை குமுற செய்வதால் அப்படி சொன்னேன். 
முதல் பாதியில் எனக்கு பிரஷர் தலைக்கு ஏறி நாடி , நாளம்
எல்லா வேடிச்சுடும்போல இருந்திச்சி! கையாலாகாத ஹீரோ, அப்படிபட்ட ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கிய 
இயக்குனர் மேல செம்ம கடுப்பாவும் இருந்துச்சு! மனசுல மோசமான கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டிக்கிட்டே இருந்தன். கையில கிடைக்கிறத தூக்கி அடிச்சு டிவிய உடைக்காமயிருந்தது பெரிய விஷயம்! மெய் மறந்து போகும் அளவுக்கு சேட்டன் படத்தை சிறப்பாக பண்ணிட்டாரு! 
ஒரு கட்டத்துல படம் தானே பாக்குறம் கூல், ச்சீல், ஓம் சாந்தி, சொல்லி மனதை சாந்தப்படுத்தி கொண்டேன். பாவம் இத்தனைக்கும் நாயகன் சூழ்நிலை கைதி, ஒரு குத்தில் எதிரியை பறக்க வைக்க அவன் ஒன்னும் சூப்பர் ஹீரோ கிடையாதே!?

பாக்குறது சினிமா என்பது தெரிந்தும் 
ஏன் இவ்வளவு பதற்றத்துக்கு உள்ளாகி மனசங்கடம்படனும் ? காரணம்முண்டு பல படங்களில் இவ்வகையான காட்சிகளை பார்த்தாயிற்று ஆனால் இந்த அளவுக்கு என் பொறுமையை சோதித்தது இல்லை! இரண்டு மணிநேரத்துக்கு என்னையும் கதாபாத்திரங்களோடு பயணிக்க வைத்துவிடுகிறார். திருப்பவும் 
சொல்கிறேன் முதல் ஒரு மணிநேரத்தை உங்களால் இலகுவாக கடந்து விடமுடியாது.

வில்லனும், ஹீரோவும் வெறித்தனமாக நடித்து இருக்கின்றார்கள்! ம்ம்ம் இல்லை கதைத்தான் ஹீரோ, மற்றும்படி மேற்குறிப்பிட இருவரும் சிறப்பாக நடித்து இருக்கின்றார்கள். படம் முழுவதும் எங்குமே மசாலா தூவப்படவில்லை அதுதான் பலமே. புதுவிதமான அனுபவம் காத்திருக்கிறது பார்க்காமல் தவறவிட்டு விடாதீர்கள் !

படத்தின் இரண்டாம் பாதியில் 
ஏறுன பிரஷர் எல்லாம் அப்படியே 
மெதுவா இறங்கி வந்து ! மனசு குளிரும்படியா காட்சி அமைத்து 
இருக்காரு இயக்குனர். ஹீரோ மேலேயும் கரிசனம் வருது. 

"பழிவாங்குதல் உன்னதமான உணர்வு" 

வஞ்சிக்கபட்டத என்றுமே மறக்க கூடாது நேரம் வரும் போது இரண்டு மடங்கா திருப்பி கொடுத்துறணும்.

நல்ல படமுன்னு சொல்லுறாங்க என்ன மாதிரியான கதையாயிருக்கும் என்று ஆர்வத்தில் பார்த்தேன், 
எனக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்து விட்டது. சத்தியமா 
இத எதிர்பார்க்கள புதுசா இருந்துச்சி. ஒரு வழியா படம் முடிவுக்கு 
வந்துச்சு அப்பாடா இனி ஹாப்பி எவர் எண்டிங்னு நினைச்சுட்டு இருக்கும் பொழுது இஷ்க் நமக்கு நடுவிரலை தூக்கி காட்டிட்டு போகுது. 

பின் குறிப்பு: இது காதல் கதையில்லை 

நரேஷ்

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I