கரைந்த கைரேகை

ஆபீஸ்ல் அரேபிய நண்பனின் கம்ப்யூட்டரில் எதோ சின்ன பிரச்சனை ஜன்னல் திறக்கவில்லை அதுதான் 'விண்டோஸ் ஓபன்' ஆகல, நெடுநேரம் தடுமாறிக்கொண்டிருந்தான்.பிறகு என்னை கொஞ்சம் என்னவென்று பார்க்க சொன்னான். நான் பார்த்து சரி செய்து கொடுத்தேன். பயல் குதூகலமாகி 
 "சுக்ரான் ஹபீபி" சொல்லிவிட்டு ('நன்றி நண்பானு' தமிழில் அர்த்தப்படும்) "உனக்கு ஒன்னு தெரியுமா? சவூதி அரேபியால ஒருத்தர் உதவி பண்ணுனா, உன் கல்யாணத்துல உனக்கு நான் திருப்பி பண்ணிடுவேன்னு சொல்லுவோம், இது எங்களின் மரபு, நீ பண்ணுன உதவிக்கு, உன் கல்யாணத்துல நான் திருப்பி பண்ணுறேன்னு " சிரித்தபடி சொன்னான். நான் "கல்யாணத்துல உதவி பண்ணவேணாம், முதல் கல்யாணம் நடக்க எதாச்சும் உதவி பண்ணு  அப்படி ஒரு சம்பவம் நடக்குமானே சந்தேகமா இருக்குடானு "என் சோகபுராணத்தை பாட ஆரம்பிக்க  

அவன்  " நானே எங்க அப்பன்கிட்ட கல்யாணம் பண்ணிவைக்க சொல்லி கெஞ்சிட்டு இருக்கேன் நீ வேறனு " புலம்பினான். உலகம் பூராவும் நைன்டி கிட்ஸ்சின் நிலைமை பரிதாபமாகி கிடக்குதேயேன்ற சமூக அக்கறையில் 
நான் மேலும் துருவி கேட்கஆரம்பித்தேன். 

"சரி உனக்கு என்ன பிரச்சனை? நாங்கதான் பிச்சைகார நாட்டுல பிறந்துட்டு பொழப்புக்காக இங்கே வந்து கஷ்டப்பட்டுட்டு இருக்கோம். நீ இந்த நாட்டுகாரன், எண்னை விளையும் பூமி சம்பாதிக்கதான் இங்க உங்களுக்கு ஆயிரம் வழியிருக்கேனு"  காரணத்தை கேட்டேன். அதற்கு அவன் சொன்னான் சவூதி கலாசாரப்படி திருமணத்தின் போது மாப்பிளை தான் பொண்ணுக்கு சீதனம் கொடுக்கணும். குறைந்தது ஐந்து லட்சம் சவூதி ரியால் ரொக்கமாவும், தனியாக தங்க நகையெல்லாம் போடணும். நகை பொண்ணுட அம்மாக்கும் சேர்த்து வேற வாங்கணும். தகுதியை பொறுத்து தொகை கூடி குறையும். அதுனால நீ நினைக்கிற மாதிரி ஈஸியில்லை  என்றான். உண்மைதான் பெரும் தொகையது. 

நான் அதிர்ச்சியில் வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன். இதற்கு முன்பு ஊரில் இதை பற்றி அறிந்திருந்த போதிலும் நான் பெரிதாக சட்டை செய்யவில்லை. இந்த நாட்டுகாரனே சொல்லும் போது நம்பாமல் இருக்க முடியவில்லை. 

இப்பொழுது அவன் புலம்பலின் காரணம் எனக்கு தெளிவாக புரிந்தது. அவனொ உல்லாசி ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டு திரிபவன். அவ்வளவு பெரிய தொகையை அவன் தயார் செய்ய பலவருஷம் ஆகும். அதனால் அவன் அப்பாவே பார்த்து கட்டிவைத்தாலே தவிர வேறு வாய்ப்பில்லை.

நான் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல். அவன் கூறிய விவரங்களை மனதில்மீட்டபடியிருந்தேன் ஐந்து லட்சம் சவூதி ரியால் இன்றைய இலங்கை நாணயப் பெறுமதிபடி கோடியை தாண்டும். நல்ல வேலை நம் நாட்டில் இந்த வழக்கமில்லை, ஒருவேளை இருந்திருந்தால் காலம் முழுவதும் கரமைதுனம் செய்துகொண்டே வாழ்ந்து மடிந்திருக்க வேண்டியதுதான். 
சரி உங்க அப்பா ஏன் கல்யாணம் பண்ணிவைக்க மாட்டேன்னு சொல்லுறாருனு கேட்டேன். அதற்கு அவன், " என்ன ஒரே வாரத்துல மூணு தடவை வேற, வேற பொண்ணுககூட கார்ல சுத்துறத பாத்துட்டாரு, ஒரு நாள் கார்ல விரட்டி வேற வந்தாரு, ஒரு மாதிரி கஷ்டப்பட்டு சமாளிச்சிட்டேன்.
 "நீ முதல்ல ஒழுங்கா இந்த விளையாட்டுதனத்தெல்லாம் விட்டுட்டு பொறுப்பா நடந்துக்கோ பிறகு பார்க்கலாமுன்னு " கறாரா சொல்லிட்டாரு, நான் நீங்க பண்ணிவைங்க பிறகு  மாறிடுவேன்னு சொன்னேன் வேலைக்கு ஆகல..., நேத்து நைட்கூட  "நீங்க இப்போ  கல்யாணம் செஞ்சு வைக்காட்டி 
நா சூசைட் பண்ணிக்க போறேன்னு " மிரட்டிப்பார்த்தேன். அந்த மனுசன், 
"தாராளமா பண்ணிக்கோ, எப்படி பண்ணனுமுனு எதும் உதவி வேணும்னா கேளுன்னு " சொல்லிட்டது, எதோ கைவசம் இருக்க கேர்ள் ப்ரண்ட்ஸ்னாலே குளிர்காலத்தை சமாளிச்சி வாழ்ந்துட்டு இருக்கேனு சொன்னான். 

நான் நீண்ட பெருமூச்சு விட்டபடி, என் ரேகை தேய்ந்து போயிருந்த கையை வெறித்து பார்த்தேன், கை முறைத்து என்னை பார்த்துக்கொண்டிருந்தது. 

நரேஷ் 
02-23-2020

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I