கை குலுக்கும் பழக்கத்தின் வரலாறு



கொரோனாவின் தீவிர பரம்பலை தொடர்ந்து பல உலக நாடுகள் கை குலுக்குவதை தவிர்த்து கொள்ளும்படி மக்களை அறிவுறுத்தியுள்ளன, சீன அரசாங்கம் கை குலுக்குவதை தவிர்க்கும் சமிஞ்சகைகள் அடங்கிய பதாதைகளை நாடு முழுவதும் காட்சிப்படுத்தியுள்ளது. நகரங்களில் கடமையில் ஈடுபடுத்தபட்டுள்ள ஆர்ட்டிபிஸல் இன்டலிஜெண்ட் ட்ரோன்களும் வானத்தில் வட்டமிட்டபடி கை குலுக்குவதை தவிர்க்கும் படி 
குரல்வழி ஏச்சரிக்கை செய்கிறது. 

95% கை குலுக்குவதன் மூலம் வைரஸ் பரவல் சாத்தியமாகிறது என்பதே 
இதற்கு காரணம். 

கை குலுக்குவதற்கு பதிலாக தமிழரின் கை கூப்பி கும்பிடும் முறையை சொல்லி சிலர்  பெருமைபட்டுக்கொள்ள, ஒரு சாரார்  முன்னோர்களின் தீண்டாமையின் ஒரு அங்கம் தான் அது வேறு எந்த  காரணமும் இல்லை. எல்லாம் சாதிவெறி பிடிச்ச பயலுங்கனு திட்டிக்கொண்டு திரிகிறார்கள். 
இது எந்த அளவுக்கு உண்மையென்று தெரியவில்லை. ஆனால் கை கூப்பி வணங்கும் முறை தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, ஆசிய நாடுகளில் பலவற்றில் பழக்கத்தில் உள்ளது. 

இதெல்லாம் ஒரு பக்கமிருக்க கை குலுக்கும் பழக்கத்தின் வரலாற்றை தேடிப்பார்த்தேன், சுவாரசியமாக இருக்கு. 

இப்பழக்கம் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் கிரீஷில் முதன்முதலாக தோன்றியதாக வரலாற்று சான்றுகள் நிரூபிக்கின்றன. மத்திய காலத்தில் மன்னர்களும், வீரர்களும், சில சமயங்களில் குடியானவர்கள்கூட  இடுப்பின் இடது பக்கத்தில் வாளை உறைனுள் தொங்க விட்டிருப்பார்கள். எதிரியை தாக்கவேண்டி வந்தால் வலது கையை வாளையுருவ பயன்படுத்துவார்கள்.
பெரிதும் பரிட்சயம் இல்லாத ஒருவருடன் நெருங்கி சென்று கை குலுக்கும் 
சமயத்தில் வலது கையை வாளை உருவ பயன்படுத்தமுடியாது அதனால் உன்னை நான் தாக்கமாட்டேன். உன்னுடன் நட்புடன்தான் உள்ளேன். நீயும் என்னை நம்பலாம் என்பதை உணர்த்தும் பழக்கமே நாளடைவில் கை குலுக்கும் பழக்கமாக மாறியது.

ரோமானியர்கள் ஒருவரை ஒருவர் வரவேற்கும் பொழுது முழங்கை வரை கையை பிடித்து குலுக்குவார்கள். அப்பொழுதுதான் முழங்கையின் ஆடை மறைவில் ஏதேனும் ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்தால்கூட கண்டுக் கொள்ளலாம். 

இன்றும் கூட கை கொடுக்கும் தருணத்தில் கவனித்து உள்ளீர்களா?  சில கணம் வரை கையை  உயர்த்தி மேலும் கிழும் ஆட்டி கொண்டிருப்பார்கள் அப்படி செய்வதன் மூலம் ஏதெனும் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தால் எப்படியும் கீழே விழுந்துவிடும் என்ற காரணம்தான். அதை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

மொத்தத்தில் ஒருத்தனை ஒருத்தன் நம்பாத போது உருவான பழக்கம் இன்று நம்பிக்கையையும், மரியாதையையும் உணர்த்தும் கலாசாரமாக மருவிவிட்டது.

நரேஷ்

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I