நோய்கிருமிகளுக்கு எதிரான யுத்தம்


நாடுகள் எல்லைகளை மூடுவதும், நகரங்களை முடக்குவதும். சமூகங்கள், தனிநபர்கள் குவாரண்டைன் நிலைக்கு உட்படுத்தபடுவதும். கொரோனா போன்ற கொள்ளை நோய்கள் பரவலை தடுப்பதற்கு குறுகிய காலத்தில் பயனளிக்கலாம் ஆனால் நீண்ட நாட்களுக்கு இதை தொடர்ந்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையா பாதிக்கப்படும். உலகமயமாக்களின் பின்பு ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டின் பொருளாதாரதோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ பிணைக்கபட்டுள்ளது. உலக நாடுகளை விடுங்கள் நாம் வாழும் நகரங்களையும், கிராமங்களிலும் இன்றைய நிலைமையை கவனித்து பாருங்கள். முதற்கட்டமாக தினக்கூலிகள் மோசமாக பாதிக்கப்படுவார்கள். ஒரு வேலை சாப்பாட்டிற்கே பேரும் திண்டாட்டமாய் போகும். மிடில் கிளாஸ் மக்களிடத்தில் பணமிருந்தாலும் பொருட்களும், சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் அங்கும்  சிக்கலான நிலைமைதான். செல்வந்தர்கள் சில மாதங்கள் தாக்கு பிடிப்பார்கள். பிறகு அவர்களின் பாடும் திண்டாட்டம்தான். 

வரலாற்றில் உலகமயமாக்கலுக்கு முன்பு, 14ம் நூற்றாண்டில் கொள்ளை நோயான பிளாக் டெத் (Black death) மூலம், ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலக்கட்டத்தில் மேற்கு ஐரோப்பாவிலும், கிழக்கு ஆசியாவிலும் 75 மில்லியன் தொடக்கம் 200 மில்லியன் வரையான மக்கள் கொல்லப்பட்டனர். இதில் ஒன்றை நீங்கள் கவனிக்கவேண்டும். இப்பொழுது போல விமான சேவையோ, துரித கப்பல் அல்லது தரைவழி  போக்குவரத்தோ 
அக்காலகட்டத்தில் இருக்கவில்லை. உலகின் எங்கோ தொடர்பில்லாத மூலைமுடிச்சுக்கலாம் காட்டு தீ போல பரவியது. அப்போதைய சமூகம் பிளாக் டெத்தின் பரவலை கட்டுக்குள் கொண்டு வரமுடியாமால் தடுமாறியது.

நோய் கிருமிகளை பற்றி அவர்கள் எதுவும் அறிந்திருக்கவில்லை. ஒரு துளி நீரில் வேறும் கண்ணுக்கு புலப்படாத கோடிக்கணக்கான கொலைகார உயிரிகள் இருக்குமென்பதை அவர்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடிவில்லை. மாறாக கடவுளின், தேவதைகளின் சீற்றமும்  சாத்தானின், கெட்ட ஆவிகளின் சாபங்கலும்தான் இதற்கு காரணமென்று மதகுருமார்கள் மக்கள் எல்லோரையும் கூட்டு பிராத்தனைக்கு அழைத்தனர். அதன் மூலமாக நோயின் பரவல் இன்னும் தீவிரமடைந்து மக்கள் கொத்து கொத்தாக மடிந்து போனார்கள். அவர்களுக்கு எந்த கடவுளும், தேவதையும் உதவிக்கு வரவில்லை. மத்திய காலத்து மக்களுக்கு பிளாக் டெத்துகான உண்மையான காரணம் கடைசிமட்டும் தெரியாமலே போனது.

இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு கொரோனாவிற்கு காரணமான 
கோவிட்-19 கண்டுப்பிடிக்க வேறும் இரண்டு வாரங்களே தேவைப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டிற்கு பிறகு மனித வரலாற்றிலே என்றுமில்லாத அளவுக்கு நோய்கிருமிகளுக்கு எதிரான யுத்தத்தில் மிக வலுவான நிலையில் நமது மருத்துவமும், மருத்துவர்களும், அறிவியலும், தொழிநுட்பமும் சிறப்பாக வளர்ச்சியடைந்து உள்ளது. 

வரலாற்றில் நாம் கடந்து வந்த காலங்களில் 1520 ல் பரவிய சின்னம்மை (Smallpox) 1918 ல் பரவிய இன்புளுவென்சா (Virulent strains of flu) போன்ற மோசமான கொள்ளை நோய்களுக்கு எதிராக இன்று சிறப்பாக வெற்றிக்கண்டுள்ளோம். இந்த கட்டுரை எழுதும் இக்கணம் வரை கொரோனாவினால் 9,600 மரணங்கள் பதிவாகியுள்ளது. மேற்குறிப்பிட்ட கொள்ளைநோய்கள் பல லட்சம் மக்களை கொன்றொழித்தது. கொரோனாவினை அந்நிலையை அடையவிடமாட்டோமென்று நம்பலாம்.

இன்று சின்னம்மை, இன்புளுவென்சா எல்லாம் நமக்கு ஒரு பொருட்டேயில்லை. கொரோனாவிற்கும், இனி வரப்போகும் நுற்றாண்டுகளில் தாக்க போகும் மோசமான நோய்கிருமிகளுக்கும் எதிராக போராட மனித இனம் தன்னை தயார்படுத்தி கொள்ளவேண்டும். அதற்கு ஒவ்வொரு நாடும் உண்மையான தகவல்களை பரிமாறிக்கொண்டு ஒத்துழைப்புடன் பங்காற்றுவது அவசியம். சீனாகாரனுக்கு வந்தால் எனக்கு என்னவென்று அமெரிக்காவோ, ஈரானோ கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. வைரஸுக்கு எல்லா மனித உடலும் வாழ்விடம்தான். முறையாக தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளாத, சுகாதார நடவடிக்கைகளை 
மேற்கொள்ளாத ஒரு நாட்டிலிருந்து புதிய மரபணு மாற்றத்துடன் இன்னும் வீரியமாக மீண்டும் உலகம் பூராவும் பரவும் ஆற்றல் நோய்கிருமிகளுக்கு 
உண்டு. மனித குலத்தின் ஒற்றுமையால் மட்டும்தான் அதனை எதிர்த்து போராடமுடியும். எதிர்காலத்தில் இன்னும் பல கொரோனாகளை நாம் சந்திக்கவேண்டியுள்ளது என்பதை மறந்து விடக்கூடாது.

நரேஷ் 03-20-2020 ©

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I