புறக்கணிப்பும் அவமானமும்



சுருதி யூ டியூப் இலக்கிய சேனலில் 'யாவரும் பதிப்பகத்தின்' நூல் வெளியீட்டு விழாவில்  "புதிதாக எழுத வருபவர்கள் கவனத்திற்கு" என்ற தலைப்பில் 
கவரப்பட்டு எஸ். ரா  நிகழ்த்திய உரையை கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் அவர் குறிப்பிட்ட சில விடயங்கள் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

அவர் எழுதுவதற்கு வந்த புதிதில் கையெழுத்து புத்தக பிரதியை எடுத்து கொண்டு ஒவ்வொரு அச்சகமாக ஏறி இறங்குவாராம். ஒரு தடவை பெரிய பதிப்பக எழுத்தாளர் ஒருவர் " ஆ.. வுன்னா ஊர்ல இருந்து கிளம்பி எழுத்தாளனாக போறேன், இல்லனா சினிமால சாதிக்க போறேன்னு இங்க வந்து நம்ம உயிரை வாங்க  வேண்டியது, ஊர்ல உங்களுக்கு எல்லாம் வேற வேலைவெட்டியே  கிடையாதா ? " என்று திட்டினாராம். அதற்கு எஸ். ரா " நீ முதல் வந்தே, நான்  உனக்கு பிறகு வந்தேன். அவ்வளவு தான் வித்தியாசம். " என்று பதிலுக்கு திட்டிவிட்டு திரும்பி வந்துவிட்டாராம். தான் இளம் வயதில் சரியான கோபக்காரறாம். எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதே எஸ். ரா தனக்கு முன்பு கோபம் வரும்மென்று  சொன்னதுதான். எப்பொழுது பார்த்தாலும் ஜென் துறவி போல சாந்தமாகவே இருப்பார். அவர் கோபத்தை எழுத்தில்கூட மிகமென்மையாகவே வெளிக்காட்டுவார். நான் தங்கையிடம் கூட "நீ எழுத ஆரம்பித்த பிறகு எஸ். ரா வை போல மனதை சாந்தமாக வைத்துக்கொள்ள பழகிவிடு. பித்து நிலைக்கு சென்று விடாதே " என்றேன். காரணம்  எழுத்தாளர்களுக்கு இந்த இரண்டில் ஒரு இயல்பு தானாகவே ஆட்கொண்டுவிடும்.

எஸ். ராவின் எழுத்தை புறக்கணித்ததை என்னால் நம்பவே முடியவில்லை. 
எஸ். ராவும் இதையெல்லாம் தாண்டித்தான் வந்துள்ளார். சாருவிற்கும் ஆரம்பம் காலகட்டத்தில் இதேநிலைமை தான். அவரின் பிரபலமான பல நாவல்களை அவரே தான் வெளியீட்டு இருக்கிறார். இன்றைய சாதனையாளர்கள் பலர் ஆரம்பத்தில் பல தோல்விகளை சந்தித்தவர்கள்தான் போல !

புறக்கணிப்பும், அவமானமும்தான் நமக்கு வெற்றியை தேடித்தரும். 

நரேஷ் 
02-26-2020

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I