BIGG BOSS பார்க்கலாமா வேண்டாமா?


பிக்பாஸ் சீசன் மூணு ஆரம்பிச்சிடுச்சு, எங்க பார்த்தாலும் அது சார்ந்த பேச்சுக்கள்தான். சமூக வலைத்தளங்களில் ரெண்டு குரூப் வெறியோட சுத்திட்டு இருக்கானுங்க! ஒன்னு ஆதரவா ரொம்ப எதிர்பார்ப்பில் 
இந்த முறை என்னவெல்லாம் நடக்க போகுதுனு. மத்தவனுக கழுவி ஊத்திட்டு திரியுறானுக என்னமோ பிக்பாஸ் பாக்குறவன் எல்லாம் ஐ.எஸ் தீவிரவாதிக மாதிரியும்! இவங்க எல்லாம் ஜென்மததுறவிகள் மாதிரியும். 
எதுக்கு இவ்வளவு கொலவெறினு கேட்டா? அடுத்தவன் வீட்டுல என்ன நடக்குதுன்னு எட்டிப்பாக்குற பழக்கம் வயுரிசம்,(voyeurism) அங்க அவுத்து போட்டுட்டு ஆடுவாலுங்க, சண்டை போடுவாய்ங்க இதை பார்த்தா குடும்பம் கெட்டு போயிடும், புள்ள குட்டிங்க விளங்காம போயிடும், உன் பரம்பரையே நாசமா போயிடும்! ஆனால் இவனுக விமர்சிக்கற அளவுக்கு ஒன்னும் மோசம் கிடையாது. பக்கத்து வீட்டுல என்ன பேசுறாங்கனு கேக்குறது தப்பில்ல, அவன் வீட்டுல பிரச்சனை நடக்க நீ காரணமா இருந்து விட கூடாது. அங்க என்ன நடக்குதுன்னு தெரிச்சா தானே ஒரு நல்லது கேட்டதுக்கு போய்ட்டு நிற்க முடியும்.



நமக்கு பல விஷயத்தை கற்று குடுக்குறதே நாம் வாழும் சமூகம் தானே? உதாரணத்துக்கு பக்கத்து வீட்டுக்காரன் அவன் பொண்டாட்டிய கோத்தா, கொம்மாளனு பேசுறான்.அது நமக்கு கேக்குது. வெளியில இருந்து பாக்குற நமக்கு தெரியும் அவன் பண்ணுறது எவ்வளவு அசிங்கமுன்னு. அந்த கணம் நம்ம மனசுல நினைப்பம் இந்த தப்ப மறந்தும் நம்ம பண்ணிடக்கூடாதுனு. இந்த படிப்பினை எங்க இருந்து வரும்?அக்கம், பக்கம் என்ன நடக்குதுன்னு பார்த்தா தானே?


டிவில போற ஒரு ஐட்டம் சோங்க குடும்பத்தோட உக்காந்து பார்க்குறோம் அதுல இல்லாத கவர்ச்சியா பிக் பாஸ்ல இருக்கு?
பிக்பாஸ் நிகழ்ச்சியை நமக்கு பிடிச்சு இருந்தா பார்க்கலாம். இல்லாட்டி தவிர்க்கலாம். சாதாரண பொழுது போக்கு நிகழ்ச்சி தானே? ஒரேடியா தலையில தூக்கிவச்சி ஆடவும் தேவையில்லை. நமக்கு பிடிக்கலனு காரிதுப்பவும் தேவையில்லை.

எனக்கு தெரிஞ்சு பத்து வருசத்துக்கு முன்னுக்கு facebookல இருக்குறவங்க எல்லாத்தையும் எதோ விபச்சாரம் பண்ணுறவங்க மாதிரி பார்த்தவனுக எல்லாம் இப்போ இங்கயே பாயபோட்டு படுத்து கிடக்குறானுங்க! 
இன்னும் ஐந்து, ஆறு வருஷம் கழிச்சு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் அதே தான் நடக்க போகுது. நிறைய படிப்பினை இருக்கு இந்த நிகழ்ச்சில. நம்ம வாழ்க்கைல மனுசங்க மனச எப்பிடி வாசிக்கிறதுனு கத்துக்கறது மிக முக்கியமான சர்வைவல் ஸ்கீல். பிக் பாஸ்ல அதை நான் கத்துக்கிறேன்.


சரி புதுசா பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கலாமா, வேணாமானு யோசிச்சுகிட்டு ஒரு கூட்டம் இருப்பிங்க. உங்களுக்கு ஒரு யோசனை சொல்லுறேன். இந்த நிகழ்ச்சிய கழுவி ஊத்துற பத்து பேர், இதுக்கு ஆதரவா பேசுற பத்து பேர்னு தெரிவு செஞ்சு அவங்க முகநூல் பக்கத்துல போய்ட்டு பாருங்க அவர்களின் பதிவுகளின் மூலம் சமூக புரிதல் தெரியவரும். எதுல கிறுக்குபயலுக குறைவா இருக்கானுகனு பார்த்து பிக் பாஸ் பாக்குறது ஆரோக்கியமா இல்லையானு ஒரு முடிவுக்கு வரலாம். 

நரேஷ் 06-24-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I