பச்சைதமிழனின் மனக்குமுறல்


தமிழன்டானு சொல்லும் போதே எவ்வளவு பெருமையாயிருக்கு உலகத்திலேயே தமிழ் மொழிதான் தொன்மையானது. ஆயிரக்கணக்கான மொழிகள் இருக்கும் உலகத்துல சாதாரண விஷயமல்ல. தமிழ் என்பது வேறும் உணர்வு சார்ந்த விடயம் மட்டுமில்லை. அது நம் அடையாளம், கலாச்சாரம், வாழ்வுமுறை.


பள்ளி வாழ்கை முடிந்து ஏதாச்சும் ஒரு வேலைக்கு போன பிறகு தமிழ்ல எழுத, புத்தகங்களை படிக்க அல்லது இலக்கிய உரையாடல்களில் பங்குபெற கூடிய சந்தர்ப்பம் நாம் வாழும் சூழலில் எந்த அளவுக்கு இருக்கு? முதல்ல நமக்கு 
ஆர்வம் இருக்கா? (புத்தக) வாசிப்பு பழக்கம் பாதிப்பேருக்கு சுத்தமா 
கிடையாது! வாழ்க்கையில நாம எல்லாம் ரெண்டு விஷயத்துக்கு நேரம் ஒதுக்குவோம். ஒன்னு பணம் தரக்கூடிய வழிமுறைகள். மற்றையது பொழுதுபோக்கு அம்சங்கள். ஆனால் வாசிப்புக்கு நேரம் ஒதுக்குவது இல்லை. 

பள்ளி படிப்பு பணம் எப்படி சம்பாத்திக்குறதுனு மட்டும் கத்துகொடுக்கும், வாசிப்பு பழக்கம் எப்படி வாழனும் என்ற ஞானத்தை கொடுக்கும். எல்லாருக்கும் வீட்டுல, நாட்டுல, வேலை செய்யும் இடத்துலன்னு எதாச்சும் 
பிரச்சனை இருந்துகிட்டேயிருக்கும். வெளியே சொல்லமுடியாதவற்றை மனசுக்குள்ள பூட்டி வைச்சி புலம்பிகிட்டுயிருப்போம். ஒரு கட்டத்துல இவை எல்லாம் சேர்த்து மனஅழுத்தத்தை கொடுக்கும். என் அனுபவத்துல சொல்லுறேன் புத்தக வாசிப்பு பழக்கம் இதற்கு அருமருந்து.


வாழ்க்கைக்கு காசு முக்கியம் மறுக்கமுடியாது அதே நேரம் நம் தாய்மொழிக்கு என்ன பண்ணுறோம் என்பதும் முக்கியம் இல்லையா? 
தமிழை படிக்காம "பச்சை தமிழன்டானு" பொங்கி என்ன பயன்?
ஒரு விஷயத்தை பற்றி தமிழில் கட்டுரை எழுத சொன்னால் நம்மில் எத்தனை பேருக்கு எழுத்து பிழையில்லாம செழுமையா எழுதவோ அல்லது ஒரு தலைப்பின் கீழ் உரையாடவோ முடியும்? எல்லோரும் சிறந்த எழுத்தாளர்களாகவோ, பேச்சாளராகவோ மாறிட முடியாது தான். 
குறைந்தது வாசகனாக சரி இருக்கக்கூடாதா? தமிழன்டானு 
சொல்லுறதோட மட்டும் நிறுத்திக்காம தமிழ் இலக்கியங்களையும், 
நல்ல நூல்ளையும் வாசிப்போம். அதே நேரம் (ஈழத்து) சமகால எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்துவோம். அவர்கள் மொழியின் காவலர்கள்.நான் எல்லாம் ஒரு பந்தி எழுதும் போதே நாக்கு தள்ளி நுரை வந்துருது. நூற்றுக்கணக்கான பக்கம் உள்ள புத்தகம் எழுதுறதுனா சாதாரண விஷயமா? இந்த மாதிரி ஒரு பதிவு எழுதும் போதுதான் அவர்களின் அருமை புரியுது!


எதோ சொல்லணுமேன்னு தோணுச்சி சொன்னேன். ம்ம்ம்ம் சரி இத்தோட முடிச்சுகிறேன் இன்னும் நீட்டிக்கிட்டு போனா படிக்க மாட்டீங்க. இது வரை பொறுமையாக வாசித்தவர்களுக்கு நன்றி !

நரேஷ் 06-14-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I