Arctic (2019)



No Spoilers
அது என்னமோ தெரியல சர்வைவல் படங்களின் மீது எனக்கு தீராக்காதல் ! கிட்டதட்ட Imdb ல நல்ல ரேட்டிங் உள்ள சர்வைவல் படம் எல்லாத்தையும் பார்த்துட்டேன். இப்போ புதுசா ஒன்னு வந்தாலும் விடுறது இல்லை.

ஒரு 4 வருசத்துக்கு முன்னாடி ரேட்டிங் பார்த்து படம் பாக்குற பழக்கம் எல்லாம் கிடையாது. இல்லை அப்பிடி ஒன்னு இருக்கதே தெரியாதுனு சொல்லலாம். அந்த நேரத்துல நல்ல உலக சினிமா ரசனையுள்ள ஒரு மலையாளி நண்பன் இருந்தான். (பின் நாட்களில் அவன் மூலமாகதான் Imdb அறிமுகம் கிடைச்சுது) அவன்கிட்ட நல்ல சர்வைவல் படமா சொல்லுடானு கேட்டேன்
"அடர்ந்த காட்டுல மாட்டிகிட்டு சாப்பாடு, தண்ணி இல்லாம இயற்கையோட போராடி தப்பி பிழைச்சு வார மாதிரி இருக்கனும்னு விவரணையா சொன்னேன்"

சிரிச்சுகிட்டே  "அந்த அளவுக்கு ஒருத்தன் கஷ்டப்படுறத பார்க்கும் அளவுக்கு உனக்கு ஏன்டா இப்படி ஒரு கொலவெறினு விளையாட்ட கேட்டான் !"

ஒரு நிமிஷம் இந்த மாதிரி படம் பாக்குறதுக்கு இப்பிடியும் ஒரு காரணம் இருக்குமானு யோசிச்சு பார்த்தேன். எனக்கு அப்பிடி தோணல, மாறாக எனக்கு தன்னம்பிக்கையை தந்துச்சி. கடைசி மூச்சு வரை போராடனும், எந்த சந்தர்ப்பத்திலும் மனம் தளரக்கூடாது என்ற படிப்பினை தான் கிடைச்சுது. நிஜ வாழ்க்கையிலும் எனக்கு சர்வைவல் பிடிக்கும்.

காட்டுலயோ, பாலைவனத்துலயோ அல்லது சமுத்திரத்திலேயோ மாட்டிகிட்டு தவிக்குறது மட்டும் இல்லை சர்வைவல் மாறாக வீட்டுல, வேலைதளத்துலனு, எல்லாம் இடத்துலயும் சர்வைவல் இருக்கு. அத எப்படி பண்ணுறம் என்றது தான் கேள்வியே, அது தான் வெற்றியும், தோல்வியையும் தீர்மானிக்குது. இயற்கை விதி படி  "வலியது தான் உயிர் பிழைக்கும்." நாமே எந்த அளவுக்கு தாக்கு பிடிச்சு முன்னுக்கு போறொன்றது நம்ம சர்வைவல் திறனை பொறுத்தது.
2019 வந்த தரமான ஒரு சர்வைவல் படம் தான் ஆர்டிக் (Arctic)
விமான விபத்துல சிக்கி ஆர்டிக் பகுதியில் தன்னம்தனியாக மாட்டிக்கிற ஹீரோ. சுற்றி வர எங்கு பார்த்தாலும் பனிமலைகள், உறைந்து போன நீரோடைகள். புல்லு, செடி, கொடி, மரம் இப்படி எதுவுமே இல்லை. ரத்தமே உறைந்து போகும்மளவு கடும்குளிர். திடீருன்னு தாக்கும் பனிப்புயல் வேற.

இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில மீட்பு குழு வந்து தன்னை காப்பாற்றி கொண்டு போவாங்கனு காத்துகிட்டு இருந்து ஒரு கட்டத்துல, பொறுமையிழந்து அந்த இடத்தை விட்டு கிளம்ப முடிவுபண்ணுறாரு. விஷப்பரீச்சை தான் ஆனால் வேறு வழியில்லை. அந்த மரணபயணத்துல உயிர்தப்பி போனாரா, இல்லையா ? என்பது தான் கதை. கடைசிவரை சஸ்பென்ஸ்சாவே இருந்துச்சி.

சுருங்க சொல்லணுமுன்னா அடிப்படை வாழ்வாதாரங்கள் இல்லாமல் உயிர்பிழைக்க போராடும் கதைதான் இந்த படம். அதிக உரையாடல்கள் இல்லை, படம் முழுக்க பிரதான பாத்திரங்களாக ரெண்டே பேர் தான். கதை சொன்னவிதம் அருமை !, காமெராவும், இசையும், சிறப்பு சப்தமும். நாயகனின் நடிப்புடன் சேர்ந்து கடைசி நொடிவரை விறுவிறுப்பு குறையாமல் நம்மை நகர்த்தி போகுது. சர்வைவல் சினிமா விரும்பிகளுக்கு நல்ல விருந்து.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I