இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்



No Spoilers
எதிர்பாரா சந்திப்பு - ஊடல் - கூடல் - ஊடல் - கூடல் - பிரிவு - கூடல் = ?

காதலை மட்டும் எத்தனை தடவை படமா எடுத்தாலும் புதுசா பார்க்குற மாதிரியே இருக்கும்,சலிப்பே தட்டாது. மனுசனா பிறந்து காதலிக்காம சாகுறது எல்லாம் பேரும் கொடுமை. அந்த சுகத்தை ஒரு முறையேனும் வாழ்க்கையில் அனுபவிச்சிடனும்.

சண்டை, பொறாமை, கோபம், தவிப்பு, காத்திருப்பு, பரிதவிப்பு, வெறுப்பு, பிரிவு, ஏக்கம், இப்படி எதுவுமே இல்லாம ஓரு காதல் இருக்க முடியாது. அப்பிடி இருந்தா அது காதலே இல்லை. இதை படிக்கற யாராச்சும் No எங்க love matured ரொம்ப smooth தா போய்ட்டு இருக்குனு சொன்னா தயவு செஞ்சு நீங்க பண்ணுறது காதலானு சரி பார்த்துக்கிருங்க ! ஊடலும், கூடலும் இல்லாத காதல் சுகப்படாது.

ஒரு நல்ல காதல் படத்திற்கான எல்லா அம்சங்களும் கூடிவந்து கைநழுவிப்போகிறது ! கௌதம், தரா இந்த ரெண்டு கதாபாத்திரம் தான் படத்தினை கடைசிவரை தாங்கி பிடிக்கும் தூண்கள். ரொம்ப கச்சிதமா, நேர்த்தியா உருவாங்கப்பட்டிருக்கு. ஹரிஷ்கல்யாண சொக்லெட் பையனா பார்த்துட்டு இதுல முரட்டு காதலனா பார்க்கும் போது ஆரம்பத்துல இது இவருக்கு சரியாகுமானு தோணுச்சி. ஆனால் எந்த குறையும் இல்லை கனகச்சிதமா பொருந்தி போறாரு. ரசிக்கும்படியான சிறப்பான நடிப்பு.
(நம்ம GVM இவரை வைத்து விண்ணை தாண்டி வருவாயா part 2 அல்லது ஏதே ஒரு படம் அவர் style பண்ணுனா செம்மயா இருக்கும்)

ஒரு பொண்ண உயிருக்கு, உயிரா காதலிச்சிட்டு பிறகு விட்டு போனதும் அவளை காயப்படுத்த அல்லது கொல்லுமளவுக்கு வெறி எப்பிடி ஒருத்தனுக்குள்ள உருவாகும்? ஜீரணிக்க முடியாதுதான் வன்மம் ஏற்படுவது இயல்பு, உண்மையா காதலிச்சு தொலைச்சிட்டேன் போ சனியனே... விட்டுத்தள்ளாம! உயிர பறிக்க எப்படி முடியுது? என்ன இருந்தாலும் நம்ம நேசித்த பொண்ணு தானே. அந்த மாதிரி ஆண்கள் எந்த மாதிரியான சமூக,குடும்ப பின்னணியில் இருந்து வராங்க அவர்களின் மன நிலையை இயக்குனர் புரியவைக்க முயற்சி பண்ணிருக்காரு. காதல் தோல்விக்காக கொலைபண்ணுற அளவுக்கு போகாதீங்க அது தீர்வு இல்லைனு சமூக கருத்தும் சொல்லிருக்காரு. இதை பார்த்து எல்லாம் மாறிடுனு இல்லை,
நல்ல விஷயம் ஒருத்தனை சிந்திக்கவச்சாலும் ஆரோக்கியம் தானே ? 
(முழு படமும் இத பற்றி பேசல இதுவும் கதையில் ஒரு அம்சம் மட்டுமே)

இந்த படத்துல கௌதம், தாரா ரெண்டு பேரையும் ரொம்ப ரசிச்சு பார்த்தேன்
I love it !, well established correctors. கதாபாத்திரங்களை சிறப்பா வடிவமைச்சு மனசுல நிறுத்திட்டு, கதையிலே கோட்டை விட்டுட்டாரு இயக்குனர். 2 - 1/2 மணிநேரம் ஓடும் படத்துல இன்னும் 1/2 மணிநேரம் அதிகமா எடுத்து சரி தாராவின் விலகளுக்கும், கௌதமின் தவறான புரிதலுக்கும் சில காட்சிகளின் ஊடாக வலு சேர்த்து நியாயம் கற்பித்து இருந்தால் ரசிகனுக்கும் அவங்க இருவருக்கும் இடையில் உள்ள உறவு சிக்கலை புரிந்துகொள்ள முடிந்து இருக்கும். படம் முழுவதும் இவங்க ரெண்டு பேர்மட்டும் அதிகமா வந்தும் அது கைகூடாமல் போனது துரதிஷ்டமே.
Sam C.S மியூசிக்ல முழு ஆல்பமும் சூப்பரா வந்து இருக்கு! இந்த படத்தை பார்க்கும் ஆர்வத்த தூண்டியதே பாடல்கள் தான்.
ஒரு பக்கம் ரொம்ப பழைய அரைத்த மாஸ் ஹீரோக்களின் மசாலாக்களுக்கு மத்தியில் இந்த படம் சிறப்பு ! படம் தொடங்கி 15 நிமிசத்துல நிறுத்த தோணல. 2 - 1/2 மணி நேரம் நீண்டும் தூக்கம் வரல..., இது போதும் எனக்கு.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I