Badla (2019)



No Spoilers
இந்த படத்தை பார்க்க Pink படம் தான் காரணம். அதுல அமிதாப் பச்சனும், டாப்ஸியும் செம்மயா பண்ணிருப்பாங்க. இதுலயும் அதே ஜோடி நிச்சயமா நல்லா இருக்குன்னு நம்பினேன் வீண் போகல. இன்னொரு ஒற்றுமை வேற ரெண்டு படத்துலையும் அமிதாப் வக்கீல், டாப்ஸி அவரோட கிளைன்ட். ஆனால் Pink படம் கோட் ட்ராமா வகை. Badla திரில்லர், மிஸ்ட்ரி வகை.

Who is the killer !? 
இது தான் படத்தின் ஒரு வரி கதை.
ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்துல பார்வையாளனை ஊகிக்க விடாம அவனை எந்த அளவுக்கு குழப்பமுடியுமோ அது வரை குழப்பி, படத்தின் கடைசி கட்டம் வரைக்கும் ஒரு முடிவுக்கு வரவிடாம குழப்பத்தில் வைத்து இருப்பதில் தான் இயக்குனரின் திறமை இருக்கு அதை Sujoy Ghosh சிறப்பாக பண்ணிருக்காரு. திரில்லர் விரும்பிகளுக்கு இதை விட பெரிய விருந்து என்ன இருந்திட போகுது!

நெய்னா (Taapsee) கல்யாணமான இளம்பெண் தொழிலதிபர்.
ஒரு நாள் (கள்ள)காதலனுடன் ஓட்டல் அறையில் தனியா இருக்கும் போது திட்டம்மிட்டு கொலைவழக்குல மாட்டிவிடப்படுறா, எப்படின்னா ?
அறை உள்பக்கமா பூட்டி இருக்கு. அவளையும் காதலனை தவிர வேறுயாரும் உள்நுழைய வாய்ப்பில்லை. அறையில் யாரோ அவளை பின்னாடி இருந்து பலமா தாக்க மயங்கி விழுந்துடுறா பிறகு, மயக்கம் தெளிஞ்சு பார்க்கும் போது காதலன் பிணமா கிடக்குறான்! அப்போ கதவை உடைச்சு உள்ள வரும் போலீஸ் அவளை சந்தேகத்தின் பேரில் கைது செய்யுறாங்க. சாட்சிகள் எல்லாம் அவளுக்கு எதிரா பலமா இருக்கு தப்பிக்க வழியில்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் Badal Gupta (Amitaph Bachan) திறமையான வக்கீல்ட உதவியை நாட அவர் தன்னோட பாணியில் வழக்கில் இருக்கும் சிக்கலுக்கு விடையை தேட ஆரம்பிக்குறாரு. அதுக்கு நெய்னாகிட்ட கொலை நிகழ்ந்த தினத்தில் நடந்த சம்பவங்களையும் அதற்கு முன்பும், பின்பும் நடந்தவற்றையும் ஒன்னு விடாம தெளிவா விபரிக்க சொல்ல, அவளும் பேச ஆரம்பிக்க கதை சூடு பிடிக்குது. நெய்னா கொலை நடந்த அன்று என்ன நடந்துச்சினு சொல்ல, குப்த்தாவுக்கு(Amitaph) அதில் நம்பிக்கை இல்லாம எனக்கிட்ட நடந்த எல்லா விஷயத்தை மறைக்காம தெளிவா சொன்னாத்தான் இந்த சிக்கல்ல இருந்து உன்னை விடுவிக்க முடியுனு சொல்ல,
சில மாற்றங்களுடன் திருப்ப அவள் நடந்தத்தை விபரிக்க, இப்படியும் நடந்துருக்க வாய்ப்பு இருக்கலாமோனு இவர் ஒரு கதை சொல்ல. இப்படி கதைகுள்ள கதை ! குழப்பத்துக்கு மேல குழப்பம்.
படத்தின் ஆரம்பத்தில் நமக்கு சில அனுமானங்கள் இருந்தாலும் அதில் ஒன்றிவிடாதப்படி திரில்லா படம் நகருது.

பிரதான கதாபாத்திரங்கள் கடைசி நொடி வரை மர்மமாவே இருக்கனாலே யாரு சொல்லுறது உண்மையா இருக்குன்னு ஒரு கேள்வி மனசுல இருந்துகிட்டே இருக்கு. Non-linear முறையில் கதை சொல்லப்படுது. கதை வசனமும் அமிதாப், டாப்ஸிட நடிப்பும் மேலும் படத்தை சிறப்பாக்கிருக்கு.
Invisible Guest ஸ்பானிஷ் படத்தோட Remake தான் Badla ன்னு சொல்லுறாங்க. நான் இன்னும் அந்த படம் பார்க்கல. என்னத்தான் தழுவபட்ட திரைக்கதையா இருந்தாலும் தரமா மீள் படைப்பு செய்றதும் தனி கலைதான் ! 

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I