Dia (தியா) / 2020

கன்னடம் / 2020

தொடர்ச்சியாக இந்த படம் தொடர்பான 
சில பதிவுகளை பார்க்க முடிந்தது. 
அதில் சிலர் "ரொம்ப பீல் பண்ண வச்சிடுச்சினு" எல்லாம் பதிவிட்டிருந்தாங்க. படம் கைவசம் இருந்தும். அழுவாச்சி படம் என்பதாலேயே பார்ப்பதை தவிர்த்து கொண்டிருந்தேன். சில படங்கள் நிஜமாவே தூக்கத்தை கெடுத்துவிடும். எனக்கு அந்த மனநிலையில் மாட்டிக்கொள்ள விருப்பமில்லை. ஆனால் இப்படியே இருந்தால் அருமையான படங்களை எல்லா பார்க்கவே முடியாது. அதனால் நேற்று ஒருவாறு பார்த்துவிட்டேன்.

காதல் அழகான உணர்வு. அப்பொழுது எம் மனதில் நிகழும் ரசவாதத்தில்  சொர்க்கத்திற்கும் மேலான இன்பமயமான உலகில் சஞ்சரித்து கொண்டிருப்போம். இவையெல்லாம் சரியா போகும் மட்டும்தான். எதோ ஒரு காரணத்தால் அது உடையும் பொழுது  வாழ்கையே புரட்டிப் போற்றுவிடும்.
அதுவரை சொர்க்கமா தெரிந்த உலகம் 
ஒரு நொடியில் நரகமாகிடும். அதிலிருந்து மீண்டு வருபவர்கள் ஒரு சிலரே. 
சிலர் வாழ்கையே முடித்துக்கொள்வார்கள். 
வாழ்வை மிக பக்குவமாக அணுகுபவர்கள் கூட சுக்குநூறாக உடைந்து போய்விடுவார்கள். எப்பேர்ப்பட்டவனையும் கிறுக்கனாக்கிடும் சக்தி காதலுக்கு உண்டு.

இந்த படத்தின் கதை நமக்கு தெரிந்த 
பழைய டெம்ளேட் தான். தமிழில் வந்த 
ஒரு பிரபலமான தமிழ் படத்தின் பெயரை சொன்னாலே உங்களுக்கு கதை முழுதும் புரிந்துவிடும். (அதனை சொல்லி ஸ்பாய்லர் பண்ண விரும்பவில்லை.)
ஆனால் இங்கு கதை புதிய நிலத்தில், 
வேறு ஒரு காலகட்டத்தில் நிகழ்கிறது. 
2.15 மணிநேரம் ஓடும் படத்தில் எங்கேயும் சலிப்பு தட்டவில்லை. இத்தனைக்கும் டூயட், சண்டை காட்சி என எதுவும் இல்லை. (ரெண்டு, மூணு பாட்டு சரி வச்சிக்கலாம் செம்ம பீல்லா இருந்திருக்கும்) ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்   கதையம்சம் இருக்கும் சொற்ப படங்களில் ஒன்று. பெரிதாக வசனமெல்லாம் பேசாமல், உடல்மொழியிலும், முகபாவத்திலும்  அழகாக நடித்துள்ளார். ஹீரோவின்  (ஆதி) நடிப்பும் ரசிக்கும் படியாக உள்ளது.

ஆனால் கடைசி 10 நிமிஷம் தான் 
கதையை கிழிச்சு தொங்க போட்டுறாரு டைரக்டர். அநேகமா அவர் சாடிஸ்ட்டா தான் இருக்கனும். இந்த உலகத்தில் தோல்வியையும், துயரத்தையும் மட்டுமே அனுபவிக்கும் ஒரு ஜீவனுக்கு கடைசி
மட்டும் நல்லதே நடக்காதா ஐயா !? 
அவர் உருவாக்கிய எல்லா பாத்திரங்களுக்கும் அழகான உலகத்தை காட்டி வாழ்வின் மீதான நம்பிக்கையை கொடுத்து கடைசியில், அதை பறித்து  கொடுமைபடுத்திருக்காரு. 
Life is full of surprise and miracle னு சொல்லிட்டு செம்ம பொசிட்டிவா இருந்தவனையும் பிடிச்சு 
Life is full of pain and suffer னு சொல்லவச்சிடாரு. அந்த கடைசி 10 நிமிஷத்தை மட்டும் வெட்டி வீசியிருந்தா 'தியா' நல்ல பீல்குட் மூவியா வந்திருக்கும். 

சில முக்கியமான இடத்தில் லாஜிக் மீறல் இருந்தாலும். கதையின் போக்கில் பெரிது படுத்த தோன்றவில்லை. சுஜாதாவின் ரொமேன்டிக் நாவலை படிப்பதற்கு ஒப்பான அனுபவம்தான்.

தியாவுக்கா கட்டாயம் பார்க்கலாம்.

நரேஷ் - 39

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I