மஜ்னூன் குறுங்கதைகள்

நண்பர்களுக்கு வணக்கம்!

இன்று என் வாழ்வில் மிக முக்கியமான நாள், கிண்டிலில் "மஜ்னூன்" என்னும் என் குறுங்கதை புத்தகத்தை வெளியிட்டு உள்ளேன்.

இது என் முதல் புத்தகம். கிட்டத்தட்ட
ஒரு வருடக் கால இடைவெளியில்
நான் எழுதிய குறுங்கதைகளை இதில் தொகுத்துள்ளேன். வெறும் கிண்டில் புத்தகம் தானே என்று எண்ணி ஒப்பேற்றாமல் அட்டைப்படம் தொடங்கி உள்ளடக்கம் வரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நேர்த்தியாக வடிவமைத்துள்ளேன். எதைச் செய்தாலும் முழுமையாக குறைகள் இன்றி நிறைவாக செய்வது என் பழக்கம். புத்தகம் என்று வரும் பொழுது ஒரு படி மேலேயே! மஜ்னூனை படித்து முடிந்தவுடன் அதில் ஏதோ ஒரு படைப்பு உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். "Pleasure of Text"
என்று சொல்வார்களே அந்த இன்பத்தை என்னால் உங்களுக்குத் தரமுடியும் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். ஒர் எழுத்தாளனாக இதை விட வேறு சிறப்பான ஒன்றை வாசகனுக்கு கொடுக்க முடியாது.

பரந்துபட்ட வாசிப்பு பழக்கம், எனக்கு இந்நூலை மனதிருப்தியுடன் எழுதி முடிப்பதில் உதவியது. என் ரசனை கலவையானது. அராத்துவையும் வாசிப்பேன், தல்ஸ்தோயையும்
வாசிப்பேன். இருவரின் எழுத்தையும் என்னால் ரசிக்க முடியும். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் நிறைய
உண்டு. அதே போல என் எழுத்தும் கலவையாகதான் இருக்கும்.
இக் கூற்றை புத்தகத்தை வாசிக்கும்
போது உணர்வீர்கள். படித்து விட்டு
உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
காத்திரமான விமர்சனத்திற்கு காத்திருக்கிறேன்.

தயக்கத்துடன் "அணிந்துரை எழுதித் தர முடியுமா ஸார்" என்று கேட்ட பொழுது மறுப்பின்றி எழுதித்தந்த மதிப்பிற்குரிய எழுத்தாளர் Kulashekar T அவர்களுக்கும். புத்தகத்தை மெய்ப்பு நோக்கிய அன்பு சகோதரி Rushanthapriya Selvarajah விற்கும் அற்புதமான ஓவியத்தை வரைந்து
அழகான அட்டைப் படத்தை வடிவமைத்து தந்த பிரியமான தோழி இயல் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இவர்களை பற்றி மற்றுமொரு பதிவில் விரிவாக பேச வேண்டும். 

வெறும் "வாழ்த்துக்கள்" என்றுச் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடாமல் புத்தகம் வாசிக்கும் (நல்ல) பழக்கம்
உள்ள நண்பர்கள் வாசித்து விட்டு
"இதெல்லாம் புத்தகமாடா?'"
என்று திட்டி விட்டுச் சரி போங்கள்,
இலக்கிய சண்டை போட ஆவலாக உள்ளேன்.

அன்புடன்
நரேஷ்

புத்தகம் வாங்குவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I