முதல் நெருப்பு

இன்று நினைத்த மாத்திரத்தில் நெருப்பை உண்டாக்கி விதவிதமான உணவுகளை சமைத்து ருசித்து உண்கிறோம். முதன் முதலில் சமைத்து உண்ணும் யோசனை ஆதிமனிதனுக்கு எப்படி வந்திருக்கும் என்று சிந்தித்து பார்த்ததுண்டா?

எட்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 
எம் சகோதர மூதாதைய சில மனித 
இனத்தினர் நெருப்பை அப்பப்போது 
மட்டும் பயன்படுத்தியிருக்க கூடும். 
மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு 
முன்புதான் நெருப்பினை அன்றாட தேவைகளுக்காக நம்முன்னோர்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.  தொடக்கத்தில் நெருப்பை வெளிச்சத்திற்கும், குளிர்காய்வதற்கும், தங்களை தாக்க வந்த வேட்டை விலங்குகளை விரட்டவும் மட்டுமே  பயன்படுத்தினார்கள். 

இயற்கையின் மாபெரும் சக்தியான நெருப்பை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த முதல் உயிரினம் மனிதனே, எந்த உயிரினத்துக்கும் கிடைக்காத மாபெரும் ஆற்றலை தன்வசப்படுத்தினான். ஒரு மனித குரங்கினைவிட உடல்பலம் குறைந்த ஆதிவாசி பெண்ணால் சிறு தீ பொறியை கொண்டு பேரும் காட்டையே சாம்பலாக்க முடிந்தது. நெருப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மனிதனின் வளர்ச்சி பாதையில் பேரும் மாற்றத்தை உண்டாக்கியது.

உணவை சமைக்க நெருப்பை பயன்படுத்தியது ஒரு விபத்தாகதான் நிகழ்ந்திருக்க கூடும். புதிதாய் எரிந்தணைந்து போன காட்டின் வழியே நடந்து சென்ற பொழுது அங்கே கருகி 
கிடந்த விலங்கு மாமிசத்தை சாப்பிட 
நேர்ந்த மனிதன் நெருப்பில் சுடப்பட்ட 
பின்பு அதற்கு சுவை கூடியிருப்பதை கண்டுபிடித்தான். அதற்கு பிறகு 
பச்சையாக உண்று சமிபாடடைய முடியாத தானியங்கள், கிழங்கு வகைகள் போன்றவற்றை சமைத்து உண்ண பழகிக்கொண்டான். 
அதன் மூலம் அதிக அளவான உணவுவைகளை பட்டியலில் 
சேர்த்து கொள்ளமுடிந்தது. தீயில் சுடும் பொழுது  மாமிசத்திலிருந்த நோயை ஏற்படுத்தும் கிருமிகள், ஒட்டுண்ணிகள் போன்றவை கொல்லப்படுவதால் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது சாத்தியமாயிற்று. அதனால் நோய் தொற்றுகள் குறைந்து ஆயுட்காலம் அதிகரித்தது. சமைக்கபடாத உணவை சமிபாடடைய செய்யவேன நமக்கு அமைந்திருந்த நீண்ட குடல் தேவையற்று பரிணாமத்தில் அதன் நீளம் குறைந்தது. அதன் செயற்பாட்டிற்கு சிலவு செய்யப்பட்ட பேரும் அளவு சக்தி இடமாற்றப்பட்டு மனித மூளையின் வளர்ச்சிக்கும் சிறப்பான செயற்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டது.
பற்களும் அளவில் சிறியதா மாற்றம் அடைந்தது. நம் மூதாதையர்களான சிம்பஞ்சிகள் தினமும் சமைக்கபடாத  உணவை உண்ண ஐந்து மணிநேரத்தை விரயம் செய்யும் போது நாம் சமைத்த உணவை உண்பதற்கு தினமும் வேறும் ஒரு மணிநேரத்தை மட்டுமே சிலவிடுகிறோம். 

சேப்பியன்ஸ் - பதிவு 1

நரேஷ் 03-22-2020

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I