Rome

 2005 / series / drama 

No Spoilers 

நாம் ரோமின் வரலாற்றை முழுமையாக படித்திருக்காவிட்டாலும். சீஸர், கிளியோபாட்ரா, மார்க் ஆண்டனி போன்ற பெயர்களும். கிளாடியேற்றர்ஸ், ஏரினா, செனட், போன்ற வார்த்தைகளும் நமக்கு பரீட்சயமானவை. சிறுவயது முதல் எதோ ஒருவகையில் இவை நம்மை வந்தடைந்து கொண்டிருக்கிறது. 
"All roads lead to rome" என்ற
பிரபலமான சொல்லாடல் கூட அப்படிபட்ட ஒன்றுதான்.

ரோம் இரண்டு சீசன், 22 எபிசொட்களை கொண்ட தொடராகும். ஒவ்வொரு எபிசொட்டும் ஒரு மணிநேரம் ஓடக்கூடியது. சுருக்கமாக ரொம் இராச்சியத்தின் வரலாற்றை சிறப்பாக படைத்துள்ளார்கள். 
கி.மு 52 ஆண்டிற்கு நம்மை அழைத்து சென்று, மத்தியகால ரோமில் வாழ்ந்த நகரவாசிகளின் அரசியல், கலாசாரம், வாழ்வினை கண்முன்னே காட்டி நமக்கும்  காலப்பயணம் செய்த உணர்வினை ஏற்படுத்திவிடுகிறது.

கி.மு 52 பிறகு ஜூலியஸ் சீஸரின் எழுச்சியும், அவர் காலத்தில் நிகழ்ந்த முக்கியமான அரசியல் நிகழ்வுகளும் 
வீழ்ச்சிக்கு பின்னார் ஆட்சியிலும் அரசியலிலும் நிகழும் திடிர் மாற்றங்களும், குழப்பங்களும் தான் கதைகளம். மொத்தமும் புனைவு கிடையாது. முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் எல்லாம் நிஜம். 

இத்தொடரில் நான் பார்த்து  வியந்தவொன்று என்னவென்றால், கிறிஸ்துவுக்கு முன்பே ரோமில் நடைமுறையில் இருந்த ஜனநாயகத்தின் கூறுகலான செனட் சபை, செனட்டர்கள், நீதிமன்றம், வழக்கறிஞசர்கள், செய்தி வாசிப்பாளர்கள். மற்றும் சீரான சட்டதிட்டங்கள் தான். சீஸரின் காலத்தில் மன்னர் ஆட்சி கிடையாது. செனட் சபையினால்  ஏற்றுக்கொள்ளப்பட்டால் 
தான் அதிகாரத்தில் உள்ளவருக்கு கூட முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றமுடியும். சீஸர் தன் ஆட்சியின் இறுதி காலங்களில் சென்ட்டின் அனுமதியுடனே தன்னை சர்வாதிகாரியாக மூடி சூடிக் கொள்கிறார். 

இந்த தொடரில் யுத்தக்காட்சிகள் பெரிதாக காட்டப்படுவதில்லை. எனக்கு அது ஏமாற்றம்தான். அரசியல் நிகழ்வுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். அதே போல ஐந்து வருட, பத்து வருடம் காலத்தை எல்லாம் ஒரே எப்பிசோட்டில் தாவி விடுவதும் மிகப்பெரிய குறை. நின்று  நிதானித்து பொறுமையாக நகர்த்திருந்தால் குறைந்தது ஐந்து சீசன்கள் சரி வந்திருக்கும். தயாரிப்பு நிறுவனத்திற்கு என்ன பிரச்சனையோ !? இரண்டு சீசனில் மொத்தகதையும் முடிந்து விடுகிறது. பொதுவாக நிஜவரலாற்றின் முடிவு எல்லோருக்கும் தெரிந்தபடியால் நீட்டி  இழுத்து கொண்டு போவது வீண்வேலை என்று கூட நினைத்திருக்கலாம். அதுவும் வாஸ்தவம்தான்.

தொடரில் ஒரு டஜனுக்கு மேற்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் இருந்தாலும், ஓர் கட்டத்திற்கு பிறகு எல்லோரும் தெளிவாக மனதில் பதிந்து விடுகிறார்கள். வரலாற்று அரசியல் நிகழ்வுகள் சாமானிய ரொம் போர் வீரர்கலான வோரினஸ் மற்றும் புல்லோ இருவரின் வாழ்வுடன் சேர்ந்து புனைந்து தொடர் சுவாரசியமா நகர்ந்து செல்லும்.

சீஸரின் வரலாற்றை படிக்காமல் இத் தொடரை பாருங்கள். அப்பொழுதுதான் நன்றாக ரசிக்கமுடியும். தொடரை முடித்தவுடன் விரும்பினால் பிறகு தேடி படித்துக்கொள்ளலாம். 

கீழே முக்கியமான ஒரு சில கதாபாத்திரங்களின் குணவியல்புகளை மட்டும் விபரிக்கிறேன். 

#அட்டியா (Atia) 
சீஸரின் சகோதரியின் மகள், ஆண்டனியின் காதலி. அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள எதுவும் செய்ய கூடியவள். தந்திரகாரி.

#மார்க்_ஆண்டனி (Mark Antony)  
சீஸரின் கட்டளை தளபதி மற்றும் நெருங்கிய நண்பன். சுத்த வீரன், விசுவாசமானவன். 

#ஒக்டேவியன் (Octavian)
அட்டியாவின் மகன், புத்திசாலி, அதிகாரத்தில் விருப்பம் உடையவன். 
தொடரின் மிக முக்கிய கதாபாத்திரம்.

#ஒக்டேவியா (Octavia)
அடியாவின் மகள், அப்பிராணி. தாயின் அரசியல் ஆட்டத்தில் பகடைகாயாக உருட்டப்படுபவள்.

#வோரினஸ் (Vorenus) 
ஆண்டனியின் கட்டளையின் கீழ்  
13வது லிஜென் படைபிரிவில் உயர் பதவியில் இருப்பவன். சிறந்த வீரன். நேர்மையானவன். முன்கோபி. 
குடும்பத்தின் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டவன்.

#புல்லோ (Pullo)
வோரினஸ் கீழே பணி புரியும் போர் வீரன். முரடன், பலசாலி. நட்பில் விசுவாசம் மிக்கவன். வோரினஸீன் உற்ற நண்பனும் கூட.

மேலும் பல முக்கியமான கதாபாத்திரங்கள் தொடரில் உண்டு. இருந்தாலும் ஆரம்பத்தில் இவர்களை தெரிந்து கொண்டால் கதையினுள் உள்நுழைய இலகுவாக இருக்கும். மொத்தத்தில் சிறப்பான வரலாற்று தொடர், தவறவிடவேண்டாம்.

நரேஷ் - 45

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I