கொரோனா தடுப்பு மருந்து

பிரிட்டனை சேர்ந்த லண்டன் 
இம்பிரியல் கல்லூரி ஆய்வாளர்களால் கொரோனாவுக்கு கண்டுபிடிக்கபட்ட 
தடுப்பு மருந்து விலங்குகளின் 
மீது செய்யபட்ட பரிசோதனையில் பாதுகாப்பானதும் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியதால் அடுத்தகட்டமாக மனிதர்களின் மீது சோதனையை தொடங்கபட்டுள்ளது.
ஆக்ஸ்போர்ட் கல்லுரி ஆய்வாளர்கள் ஏற்கனவே மனிதர்கள் மீதான பரிசோதனையை தொடங்கி விட்டார்கள். இதே போல உலக  நாடுகளை சேர்ந்த 
120 வெவ்வேறான பரிசோதனை கூடங்களில் தனித்தனியான 
ஆய்வுகள் நடத்து கொண்டிருக்கிறது. 

முதல் கட்டமாக முந்நூறு தன்ஆர்வலர்களுக்கு புதிய 
தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. 
இரண்டாம் கட்டமாக அக்டோபர் மாதம் மேலும் 6000 பேருக்கு மீண்டும் இந்த 
தடுப்பு மருந்தை செலுத்தி 
பக்கவிளைவுகள் இல்லாமல்  
நோயெதிர்ப்பு சக்தியை சிறப்பாக தூண்டுகிறதா என்று உறுதிப்படுத்தி கொள்வார்கள்.  அந்த சோதனை 
முடிவுகளும் சரியாக வரும் பட்சத்தில் உற்பத்தி தொடங்கப்பட்டு 2021 ஆண்டின் ஆரம்பத்தில் பிரிட்டன் மற்றும் செல்வந்த நாடுகளுக்கும், பிறகு வளர்த்து வரும் நாடுகள், ஏழ்மை நாடுகளுக்கும் 
கிடைக்கும். இந்த மருந்தில் உள்ள 
விசேஷம் என்னவென்றால் ஒரு லிட்டர் மருந்தில் இருபது லட்சம் பேருக்கு தேவையான தடுப்பு மருந்தை தயார் செய்துவிட முடியும். அதனால் 
உற்பத்தி விரைவாக நடக்கும் 
என்பது ஆறுதல் செய்தி.

எப்படியும் இன்னும் ஒரு வருடத்திற்கு 
தடுப்பு மருந்து நமக்கு கிடைக்க போவதில்லை. அதுவரை முன்னெச்சரிக்கையும், ஆரோக்கியமான வாழ்வு முறையும் தான் நம்மை 
காப்பாற்றும். இதை கேட்டு பீதி அடைய தேவையில்லை. அடுத்து கணம் மரணம் எந்த ரூபத்திலும் வரலாம். 
டீ குடிக்கும் போது விக்கியோ அல்லது வாழைப்பழத்தோலில் வழுக்கி 
விழுந்ததோ கூட சாகலாம். 
அதனால் கொரோனா நம்மை கொன்று விடும் என்று பயத்துடனேயே வாழாமல் மீண்டு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருங்கள். 

பொதுவாக ஒரு தடுப்பு மருந்து குற்றுயிராக்கபட்ட  அல்லது 
மாற்றியமைத்த வைரஸை
கொண்டு தயாரிக்கபடும். 
அதனை நம் உடலில் செலுத்தும் 
போது நம் ரத்தத்தில் உள்ள 
நுண்கிருமிகளை அழிக்கும் செல்கள் 
தடுப்பு மருந்தில் உள்ள வைரஸின்
வடிவத்தை படியெடுத்து கொண்டு 
அதை அழித்து ஒழிப்பதற்காக 
நம் நிணநீர் பீடத்தை தயார் செய்யும். அதாவது அந்த குறிப்பிட்ட வைரஸுக்கு எதிராக நம் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். பிறகு அந்த வைரஸ் 
நம்மை தோற்றும் போது, நம் உடல் 
அதை இலகுவாக சமாளித்து, 
தாக்கி அழித்து விடும்.

இப்பொழுது ஆராச்சியாளர்கள் 
புதிய வகையில் இந்த தடுப்பு 
மருந்தை கண்டுபிடித்து உள்ளார்கள். 
கோவிட் 19 வைரஸின் RNA மரபியல் குறியீட்டு கூறுகளை பிரதியெடுத்து அவற்றை செயற்கையான முறையில் உருவாக்கி உள்ளார்கள். 
அதனை ரத்தத்தில் செலுத்தும் போது முதலில் பல்கிப்பெருகும். பிறகு 
வைரஸின் வெளிப்புறம் உள்ள 
கூர்மையான புரத அமைப்பை 
படியெடுத்து கொள்ளுவதற்கு 
நம் உயிரணுக்களுக்கு பயிற்சி 
அளிக்கும். அதனால் கோவிட் 19 
வைரஸை எதிர்த்து போராட 
நம் நோயெதிர்ப்பு அமைப்பு 
தயாராகிவிடும். 
அதனை முன்கூட்டியே செலுத்தி 
கொள்ளும் போது நமக்கு கோவிட் 19 வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு 
சக்தி கிடைத்துவிடும். பிறகு 
கொரோனா தொற்று ஏற்படாது.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I