சூஃபியும் சுஜாதேயும்

மொழி: மலையாளம் 

"என் உயிரை உன்னுடன் எடுத்து 
சென்றால், நான் என்ன செய்வேன்?"

சூஃபியிசத்தை பற்றி வாசித்து உணர்த்திருக்கிறேன். ரூமியின் கவிதைகளை படிக்கும் போதும் 
அனுபவித்து இருக்கிறேன்.
அதையே படமாக இரண்டு 
மணிநேரம் திரையில் பார்த்த 
அனுபவம் மாறுப்பட்ட உவகையை அளித்தது. ஓர் இந்து பெண்ணுக்கும், 
சூஃபி துறவிக்கும் இடையிலான 
காதலே இந்த படம். ஆனால் இது 
வெறும் கதையாக இல்லாமல் அமரகாவியமாகி போனது துயரம்தான்.

இதில் சூஃபி பள்ளியில் பாங்கு ஓதும்  போது " அல்லாஹ் கூ அஃபர் 
அல்லாஹ்...! " என்ற அந்த கணீர் குரல் காதில் விழும் தருணத்தில் உணர்ந்த பேரின்பத்தை வார்த்தைகளில் விபரிக்க முடியாது. பாடல்களும் பின்னணி இசையும் தான் படமே, ஒளிப்பதிவை பற்றி சொல்லியே ஆகவேண்டும் படம் முழுவதும் ஒவ்வொரு காட்சியும் பேரழகு! ஓர் இடத்தில் சூஃபி நடனத்தை டாப் அங்கிள் ஷாட்டில் படமாக்கியது அற்புதம்!அதுமட்டுமல்ல சுஜாதேயும், 
சூஃபியும் வரும் இடங்கள் எல்லாமே ஓவியம்தான். Aditi Rao ஒரு 
வார்த்தை கூட பேசாமல் படம் 
முழுவதும் முகபாவனைகளிலே உணர்வுகளை சிறப்பாக வெளிக்காட்டியிருக்கிறார். 
இந்த படத்திற்கு கச்சிதமான 
தேர்வுதான். குறையாகபட்ட 
ஒரே விஷயம் சுஜாதேயும், சூஃபியும் இடையிலான காதல் ஆரம்பிக்க 
முன்னரே துரிதமாக முடிவுக்கு 
வருவதுதான். இருவரின் 
அன்பின் ஆழத்தை முழுமையாக 
காட்ட தவறிவிட்டார்கள். அதனால் 
அவர்கள் உயிரை கொடுத்து 
காதலித்தும் அதன் ஆழத்தை நம்மால் முழுமையாக  உள்வாங்கி கொள்ள முடியாமல் போகிறது. இந்த படத்தை பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் வருவதற்கு இதுவும் முக்கிய காரணம். நிறைய பேருக்கு பிடிக்காமல் போவதற்கு இன்னொரு வலுவான காரணமும் உண்டு. எப்படி சுஜாதே திருமணமாகி பத்து வருடம் கழித்தும் தன் காதலனை நினைத்து கொண்டிருக்கலாம் என்ற 
மனப்பான்மை. என்ன செய்ய, 
உண்மை எப்பொழுதுமே கசக்கும்.
இந்த படத்தை புனையப்பட்ட ஓர் 
அழகான காதல் கதையாக 
அணுகினால் உங்களுக்கு பிடிக்கலாம். எது எப்படியோ என்னை மிகவும் கவர்ந்து விட்டது.

குறிப்பு: உங்களுக்கு உருகி, உருகி காதலிக்கும் காதல் படங்கள்  பிடிக்காது என்றால், இந்த படத்தை தவிர்த்து விடவும். 

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I