ராஸலீலா


மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ராஸலீலா நாவலை ஒருவாறு படித்து முடித்தாயிற்று. இப்பொழுது நூலை பற்றி சிறுகுறிப்பு எழுதியாகவேண்டும். எதை பற்றி எழுதுவதென்று தான் தெரியவில்லை. ஏனென்றால் சாருவின் நாவல்களில் கதையிருக்காது. கதைகள் தான் இருக்கும். எதை தொட? எதை விட? எனச்சிறுகுழப்பம். இதுவரை 'புதிய எக்ஸ்ஸைல்' , 'ஸிரோ டிகிரி' , 'ராஸலீலா' போன்ற பிரதான நாவல்கள் உட்பட சாருவின் பத்து புத்தகங்களை படித்து முடித்து விட்டதில் அவரின் எழுத்தை எப்படி அணுகவேண்டும் எனப்புரிதல் வந்துள்ளது. 

தீவிர இலக்கிய நூல்களை மட்டும் படிப்பவர்களாக இருந்தால் அதன் பாங்கையே சாருவின் படைப்புகளில் தேடி ஏமாந்து போவீர்கள். இது வேறு ஒரு உலகம். அற்புதமான உன்னத அனுபவம். உங்களை புதிய தேடலுக்கு  உற்படுத்தி கொள்ளத்தயார் என்றால் பேரின்பம் காத்திருக்கின்றது. எழுத்துக்கு ஒரு சுவையுண்டு ஒவ்வொரு எழுத்தாளரும் அவர்கள் பாணியில் படைத்து தருவார்கள். சுவைத்து பார்த்து பிடித்ததை நுகர்வது தான் நம்வேலை. அந்த வகையில் சாருவின் எழுத்து தனிப்பட்ட வகையறா எல்லோருக்கும் லாவகமாக வந்து விடாது. ஆனால் வாசிப்பில் தீவிரமாக இலக்கியத்தை தேடுபவர்களுக்கு பிடிக்காமல் போகலாம். இப்படி ஓர் எழுத்துலகம் உலக இலக்கியங்களில் இருப்பதை  அவர்கள் அறிந்திராததும் ஒரு காரணம். 
ரெப் இசையில் பக்தி பாடலை முதல் முதலாக கேட்கும் போது நாரகாசமாக 
தான் இருக்கும். நமக்கு பழக்கம்மில்லை என்பதால். சில நேரம் தெய்வ நிந்தனை செய்து விட்டதாக திட்டவும் செய்வோம். ஆனால் அந்த சொல்லிசை கலைஞ்சனுக்கு அவன் கலை தான் மூச்சு, அவன் உணர்வு பூர்வமாக பயபக்தியுடன் தான் பாடியிருப்பான். நமக்கு அந்த கலை வடிவம் பற்றிய ஞானம் இல்லாத படியால் அந்த படைப்பே குப்பை. அது போல தான் சாருவின் எழுத்தும் சிலருக்கு.

எனக்கு நாவலின் நாயகன் கண்ணாயிரம் பெருமாளை மிக பிடித்து போயிற்று. 
நம்மில் பாதிபேர் அவன் மாதிரிதான் தினசரி வாழ்க்கையில் துன்புறுகிறோம். 
பல நேரங்களில் பணியிடங்கள் மனநலகாப்பகத்திற்கு சமம். கூட வேலை செய்யும் நபர்கள் பைத்தியங்களாவும். மேலாளர் சைக்கோவாகவும் அமைந்து விட்டால். எப்படிபட்ட நரக வாழ்க்கையை  வாழவேண்டும் என்பதை நான் விளக்க வேண்டிய அவசியமில்லையேன்று  நினைக்கிறேன். பெரும்பாலும் எல்லா இடங்களுமே அப்படித்தான். எனக்கு தனிப்பட்ட அனுபவம் உண்டு. 
கண்ணாயிரம் பெருமாளும் அப்படிபட்ட ஒரு இடத்தில் தான் சில காலம் வேலை செய்கிறான். அவன் கதைகள் மிக சுவாரசியமாகயிருக்கும். சில இடங்களில் பெரிதாக சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். சாருவின் எழுதில் நக்கல், நையாண்டி, குறும்புக்கும் பஞ்சமிருப்பதில்லை.

வழக்கம் போலவே கெட்ட வார்த்தைக்கும், காமத்திற்கும் குறைவில்லை. பெருமாளின் காதலிகளுடனா அரட்டை பக்கங்களை கடந்து வரும் பொழுது காம சூத்திராவின் முக்கியமான குறிப்புக்களை மட்டும் படித்த உணர்வு. நேரம் வரும் போது செயல்படுத்தி பார்க்கவேண்டும். இன்னும் நாவலை பற்றி நிறைய பேசலாம். வேண்டாம் போதும். சிறுகுறிப்பு பெருத்துக்கொண்டே போகிறது.  மாறுப்பட்ட புதினம் கட்டாயம் படித்து பாருங்கள்.

நரேஷ் 
12-03-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I