பூமணியின் வெக்கை

ஒருவாறு வெற்றிமாறனின் புண்ணியத்தினால் வெக்கை நாவலை படிச்சு முடிச்சாச்சு. அசுரன் படத்தை பார்க்கும் வாய்ப்புதான் இன்னும்கிட்டல..., அதையும் பார்த்த பிறகு இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கணும். நாவலை திரைக்கதையாக்கிய நுட்பத்தை பற்றிய சிறுஅறிவு கிடைக்கும். (என்றே ஒரே காரணத்திற்காக மட்டுமே) சேர்த்து வெச்சிக்கிருவோம். எதிர்காலத்துல நான் படம் பண்ணும் போது உதவலாம். 

என்னை நானே வற்புறுத்தி நாவலை எனக்குள்ள திணிக்கல, வாசிக்க ஆரம்பிச்சேன் அதுவா கடைசிவரைக்கும் கூட்டிட்டு போயிடுச்சி. எனக்கு பிடிச்ச சர்வைவல் வகையறா வேறயா, இரட்டிப்பு சந்தோசம். அண்ணனை வஞ்சகமாக கொன்ற மேட்டூரானை பழிதீர்க்கும் சிதம்பரம் (தம்பி) போலீஸ்கிட்டயும், எதிரிங்ககிட்டயும் மாட்டாமல் சில நாட்களுக்கு அப்பாவுடன் சேர்ந்து காடு, மேடுனு சுத்தி திரியுறதுதான் கதை. உரையாடல் வழியே கதை சொல்லப்படும். சுவாரசியமாக போகும். மேற்கொண்டு எதுவும் சொல்லி ஸ்பாய்லர் பண்ணேமாட்டேன். நீங்களே படிச்சு பாருங்க. 

பூமணியின் இதர நாவல்களையும் இப்பே வாசிப்பில் இருக்கும் சாருவின் "ராஸலீலா" முடிச்சதும் வாசிக்கனும். பூமணி எழுதிய மற்றைய நாவல்களுடன் ஒப்பிடும் போது வெக்கை சுமாரான நாவலுன்னு கேள்விப்பட்டேன். இதுவே எனக்கு சூப்பரா இருக்கு. செம்மையுடன் கூடிய எளிமையான மொழிநடை. நான் வெற்றிமாறனுக்கு தான் நன்றி சொல்லனும் பூமணியை எனக்கு அடையாளம் காட்டியமைக்கு. இல்லாவிட்டால் அவர் யாருனு தெரியாமலே மடித்து போயிருப்பேன். காரணம் தமிழில் மட்டும் நூற்று கணக்கான எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள். தினமும் உருவாகிக்கொண்டும் இருக்கின்றார்கள். இதையெல்லாம் பற்றி துளிகூட அறிந்திராத ஒரு கூட்டத்தை பார்க்கும் போதும் பாவமாயிருக்கு.
படித்தார்கள், வேலைக்கு போனார்கள், திருமணத்தை முடித்தார்கள், குழந்தைகளை பெற்றார்கள். அவர்களையும் படிக்க வைப்பார்கள். அவர்களும் திருப்ப அதே சுழற்சியினுள் அகப்பட்டு கொள்வார்கள். இதை தாண்டி வேறு ஒரு உலகம் இருப்பது தெரியாமலே மடித்துப்போவார்கள். பாவம் சபிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பது அவர்களுக்கே தெரியாது. 

மன்னிக்கணும் எதையோ சொல்லவந்து எங்கயோ போய்விட்டேன். 
என் கவலையெல்லாம் தமிழில் மட்டும் இதுவரை வெளிவந்திருக்கும் புத்தகங்களை வாசித்து முடிக்க ஒரு ஆயுள் போதாது. இந்த லட்சணத்தில் எப்போ சாரு அறிமுகப்படுத்திய அரபு, பிரெஞ்சு, லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை தொட்டுப்பார்ப்பது!?

நரேஷ்©
01-11-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I