Chat with கிறுக்கி

  
என்னை பற்றியெல்லாம் எழுதமாட்டியா?

எழுதலாம். அதுக்கு நீ என்னிடம் இன்னும் நெருங்கி வரணும்

ஐயே.... தேவல்லயே 

இல்லடி..., நான் அந்த அர்த்தத்தில் சொல்லவரல. தப்பா புரிஞ்சிக்காத. நாம இப்பே தானே பேச ஆரம்பிச்சு இருக்கோம். இன்னும் நெருக்கமா பழகணும். அப்போ தான் எழுத முடியுமுன்னு சொல்லவந்தேன்.

(இந்த உரையாடலின் இடையே சில நேனோ செக்கன்கள் குறுக்கிட்ட என் மனது "டேய் நீ அவளை வேணும்னா ஏமாத்தலாம் என்கிட்ட முடியாது. உண்மையை சொல்லு, நீ இரட்டை அர்த்தத்தில் தானே சொன்ன? " ஆமா சும்மா பேச்சின்  சுவாரசியக்காக சொன்னேன். அதுக்கு ஏன்டா என்னை வில்லனாக்க பாக்குற?) 

இப்படி அரட்டையின் வழியே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நட்பு வளர்த்து கொண்டிருந்தது.

சில மாதங்களுக்கு பிறகு 

நான் 
குட் மோர்னிங் டியர் 

பதில் இல்லை

மறுநாளும் நான் 
குட் மோர்னிங் 

பதில் இல்லை  

கிறுக்கி, லூசு, நாய்..

மூன்றாம் நாள் அவளிடம் இருந்து பதில் வந்தது.

ஹாய்... 
எதுக்கு இப்படி திட்டுற...?

ஒரு மெசேஜ் இல்லை..., 
குட் மோர்னிங் சொன்னாலும் பதில் இல்லை..

ஓ.....(oh) 

மறந்துட்டத்தானே ?
இல்லைடா, வேலை 
கொஞ்சம் பிசி ஆகிட்டேன்.

என்ன வேலை? பொய் சொல்லாத டி 
புது ப்ரண்ட் யாராச்சும் கிடைச்சிருப்பாங்க....

லூசு..., பிசினா அதுதான் அர்த்தமா?

போடி..., குட் மோர்னிங் சொல்ல முடியாத அளவுக்கு அப்படி என்னத்தை பிசி?

பக்கி...! இப்பே நான் குட் மோர்னிங் சொல்லி மட்டும் உனக்கு என்ன நடந்திடப்போகுது?

சரிடி அப்போ நாமே வேற எப்படிதான்   பேசிக்கிறது ?

ம்ம்ம்...., ஓகே சொல்லு 

எதுக்கு ஓகே சொல்ல !?

இல்லை எருமை, நீ சொன்னதுக்கு ஓகேனு சொன்னேன். ஏதாச்சும் சொல்லுன்னு அர்த்தம்

ஓகே..., இப்பே புரியுது 

ஏண்டி அதுக்கு போய்ட்டு திட்டுற? 
(நீ அகர்தினையில் திட்டும் போதெல்லாம் அவள் ஞாபகம் வந்து போகிறது. 
இது எனக்குள் நானே பேசிக்கொண்டது)

ஹ.. ஹ.. அப்படி தான் 

உன்ன பார்த்து ரொம்ப நாள் ஆச்சு வீடியோ கோல் வாரியா ?

லூசு பயலே இங்க இப்போ என்ன டைம் தெரியுமா?

ஓஹோ! சாரி டீ அத மறந்துட்டேன்.

லூசுடா நீ
குட் நைட் 
மோர்னிங் மெசேஜ் பண்ணுறேன்.

சரி போட்டோ ஒன்னு சரி அனுப்பிட்டு போ.., பார்க்கணும் போல இருக்கு 

வேற...? மூஞ்சி போடா 

நாங்க கேட்டா அப்பிடித்தான் 

ம்ம்ம்ம்... 
ஓகே மோர்னிங் பார்க்கலாம். ப்ளீஸ்... !

கேட்க மாட்டேன் போ....

#சில_மாதங்களுக்கு_முன்பு 

அவளிடமிருந்து 
'வாவ்... ப்ரோ யூ ஆர் அமேசிங்! வார்த்தையால உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கிறிங்க. செம்ம ப்ரோ தொடர்ந்து எழுதுங்க'  

இதை போல மேலும் சில புகழாரங்களுடன் தொடங்கியது அவளுக்கும் எனக்குமான நட்பு. இல்லை. இருந்த நட்பின் இடைவெளி குறைந்து நெருக்கம் கூடியது. என் எழுத்துக்கான பாராட்டு முதன் முதலாக ஒரு அன்னிய பெண்ணிடம் இருந்து வந்த பொழுது என்னுள் உருவான பூரிப்பையும்  பரவசநிலையையும் விபரிக்க வார்த்தையில்லை. ஆனால் 'ப்ரோ' என்று விழித்தது தான் பிடிக்கவில்லை. ப்ரோ, அண்ணான்னு பொண்ணுங்க சொன்னாலே எனக்கு பிடிக்காது. அதுவும் அழகான பெண்கள் சொன்னால் சுத்தமா பிடிக்காது (இதை படிக்கும் தேவதைகள் கவனத்தில் கொள்ளவும்) எல்லாமே அண்ணானு சொன்ன நான் எங்கே போவேன்? நானொன்றும் புத்தன் கிடையாதே ? 

ப்ரோனு தான் அவளும் ஆரம்பிச்சா இப்பே 'டேய், டில' வந்து நிற்குது. அவள் ஒரு சுகந்திர பறவை. நான் தனியொருவன் எம்மை கட்டுப்படுத்தும் புறக்காரணிகள் எதுவும் இல்லாதபடியால் இருவரும்  காதலர்களுக்கு உண்டான நெருக்கத்தில் உரையாடி கொள்வோம். ஆனால் காதலர்களாக வாய்ப்பே இல்லை. காரணம். நான் 'ஹாய்' சொல்லி ஒரு குறும்செய்தி அனுப்பினால் ஒருவருடம் கழித்து தான் பதிலுக்கு   'ஹாய்' சொல்லுவாள். இந்த லச்சணத்தில் நான் காதலை சொன்னால் அவளிடம் இருந்து பதில் வரும் போது என் மனைவி கர்ப்பமாக இருப்பாள். கதை இன்னும் முடியவில்லை அதனால் தொடரும் போட்டு முடித்து கொள்கிறேன். இனி வரும் தொடரில் எதிர்பாராத திருப்பங்களை எதிர்பாருங்கள். 

பின்குறிப்பு: 
இந்த கதையில் வரும் அவள் நிஜமில்லை.

நரேஷ் 11-21-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I