சாருநிவேதிதா


சமகால இலக்கியத்தின் மீதும் புத்தக வாசிப்பின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமை. சாதாரண சொற்களை கொண்டு இலக்கியம் படைக்கும் திறன் கொண்டவர். கவித்துவமாக புரியாத மாதிரி எழுதினால் தான் இலக்கியம் என்ற வரையறையை தாண்டியவர். அப்படி எழுத தெரியாதவரும் 
இல்லை என்பதற்கு இவருடை "ஸிரோ டிகிரி" நாவல் சான்று. 
"புதிய எக்ஸ்ஸைல்" என்ற நாவல் என் சிந்தனைகளில் மாற்றத்தை உண்டாக்கிய படைப்பு. நான் யார் என்பதை உணர்ந்து கொண்டேன். 
அதுவரை எப்படி ஓரு புத்தகம் மனிதனை மாற்ற முடியும்? என்ற ஐயம் எனக்குள்ளும் இருந்தது. இப்பொழுது வாசிப்பில் இருக்கும் "ராச லீலா" ஒருவேளை அந்த இடத்தை எடுத்து கொள்ளக்கூடும்.

சாரு உலகின் முக்கிய Transgressive எழுத்தாளர்களின் ஒருவராக கருதப்படுகின்றார். கட்டுப்பாடுகளே கிடையாது தான் சொல்ல வந்த கருத்தில் சமரசம் இன்றி உறுதியாக நிற்பவர். கலகக்காரன் இதனால் இவர் எதிர்கொள்ளும் எதிர்ப்புகள் ஏராளம். இவருடைய ஆட்டோப்பிக்சன் நாவல்கள் 
மிக பிரபலம் அதுதான் இவரின் பலமும் கூட. லத்தீன் அமெரிக்க இலக்கியம், பிரெஞ்சு இலக்கியம், உலக இலக்கியம், தமிழ் இலக்கியம் என எல்லாவற்றிலும் நல்ல பரீட்சயம் உடையவர். தேவாரம் தொடங்கி, திருமூலம், வேதங்கள், புராணங்கள் இதிகாசங்கள், இசை, உலக சினிமா இன்னும் பிற இத்தியாதி என பட்டியல் நீண்டு செல்லும். இவரின் புத்தகங்களை வாசிக்கும் பொழுதும். பேச்சை கேட்கும் பொழுதும். 
என்னாவொரு ஞானம் இந்த மனுசனுக்கு என வியந்து போவேன்!

இதுவரை நூறு புத்தகங்கள் வரை எழுதியிருக்கின்றார். இவரின் நுலகத்தில் ஐயாயிரம் புத்தகங்கள் வரையுண்டு. (இதுவெல்லாம் உனக்கு எப்படி தெரியுமென்று நீங்கள்  கேட்கலாம், சாருவின் பேச்சை நான் தொடர்ந்து U-tube சேனல்களில் வழியே கேட்டுவருகிறேன்) கற்பனை செய்து பாருங்கள். குறைந்தது நான்காயிரம் புத்தகங்களை சரி படித்து முடித்து இருக்க மாட்டாரா!? பிறகு எப்படி இந்த மகா படைப்பாளியுடன் முரண்படமுடியும். ஆனால் எனக்கு சில முரண்பாடுகள் உண்டு. எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி விருப்ப வெறுப்புகளுடன் இருக்க முடியாதே? எனக்கு பிடித்த விஷயங்கள் 
சாருவுக்கு பிடிக்காது. உதாரணமாக இளையராஜாவின் இசை,கமலஹாசனின் நடிப்பு ஆனால் சாருவை எனக்கு ரொம்ப பிடிக்கும். குருநாதர் சுயமாக சிந்திக்க தான் கற்று கொடுத்தார். அவரின் விருப்பங்களை என்மீது திணிக்கவில்லை! 

என் முகப்புத்தக கிறுக்கல்களில் சாருவின் தாக்கம் உண்டு. ஒருவேளை அது உங்களுக்கு பிடித்து இருந்தால் சாருவையும் பிடிக்கலாம். குருநாதரின் எழுத்து உங்களையும் மாற்றலாம். 

சவூதி அரேபியாவில் ஓரு பாலைவன நகரில் இருந்து இதை எழுதி  கொண்டிருக்கின்றேன் சாரு 

அன்புடன் 
நரேஷ் 
10-26-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I