காலம் மாறிப்போச்சு


முன்குறிப்பு: இது சினிமா விமர்சனம் அல்ல 

சவூதி அரேபியாவில் நான் வசிக்கும் ஊரின் பெயர் தமாம். இந்த வருடத்தின் நடுவில்தான் சினிமா தியேட்டர் வந்தது. பொதுவாக ஹாலிவுட், பாலிவுட் சினிமாக்கள் மட்டும்தான் வெளியிடப்படும். அரபு தேசத்தில் தமிழ் படமொன்றை திரையில் பார்த்தால் எப்படியிருக்கும் என்று அங்கலாய்த்த நாட்களும் உண்டு. எதிர்பார்த்த நாளும் வந்தது.  முதல் முதலாக திரையிடப்பட்ட தமிழ் படம் பிகில், நிறைய எதிர்மறையான விமர்சனம் வந்ததினால் பார்க்கும் விருப்பமில்லை. 

ஒரு முறை பார்க்கலாம் அவ்வளவு மொக்கையெல்லாம் இல்லன்னு கேள்விப்பட்டதும். என்னதான் இருந்தாலும் தமிழ்படத்தை திரையில் காண்பது தனி சந்தோசம் என்பதாலும் பார்க்கலாமுன்னு முடிவு செய்தோம்.

ஒரு வாரத்திற்கு முன்பே திட்டங்களை வகுத்து. ஒரு வியாழன் இரவு பார்க்க போவதாக முடிவாயிற்று. நம்ம நாட்டுல  ஞாயிறு விடுமுறை நாள் மாதிரி இங்கு வெள்ளி விடுமுறை. ஆறுநாள் தொடர்ந்து வேலை பளுவில் மண்டை காய்ச்சு போய்ட்டு இருப்போம். வியாழன் வரும் பொழுது கொண்டாட்ட மனநிலை தொற்றி கொள்ளும். வியாழன் இரவு முதல்  வெள்ளிக்கிழமை இரவு வரை தொடரும். இதுவே வியாழக்கிழமை இரவை தெரிவுசெய்ததின் காரணம். 

மாலை 6:45 படத்துக்கு 6:30 எல்லாம் தியேட்டர்க்கு போய்சேர்ந்தாயிற்று. அதுவொரு மல்டிபிளக்ஸ் சினிமா தியேட்டர் ஒரே நேரத்தில் 7, 8 படங்கள் ஒடிட்டு இருக்கும். டிக்கெட் கவுண்டர் போய்ட்டு பிகிலுக்கு மூணு டிக்கெட் கேட்டால் எல்லாம் விற்று தீர்ந்து போயிருந்தது. பெருத்த ஏமாற்றம். எல்லாத்துக்கும் மலையாளிகள் தான் காரணம். விஜய்க்கு கேரளாவுள்ள நல்ல மவுசு இருக்குனு கேள்விப்பட்டிருந்தேன். அன்று அதை அனுபவப்பூர்வமாக 
உணர்ந்த நாள். (மற்றைய வளைகுடா நாடுகளில் போல இங்கும் தமிழர்களை பார்க்கிலும் மலையாளிகளின் எண்ணிக்கை அதிகம்) இப்பே என்ன பண்ணுறதுனு யோசிச்சிட்டு இருக்கும் பொழுது ரெண்டு டிக்கெட் இருக்கு வேணுமான்னு ஒரு சேட்டன் கேட்டாரு, நாங்க மூணு பேரு இருப்பதோ ரெண்டு டிக்கெட், விட்டால் இதுவும் போயிடும். அப்போதான் நான் படிச்ச ஒரு புத்தகத்தில் இருந்த எமோஷனல் இண்டலிஜெண்ட் தியரியை அப்ளை பண்ணுனேன். (அப்பிடின்னா துரிதகதியில் சரியான முடிவு எடுக்குறதுனு அர்த்தம்) 8.20 க்கு டெர்மினேட்டர் சும்மா ரூமுக்கு திருப்பி போறதவிட எதோ ஒரு படத்துக்கு போறது சரியான யோசனையாகபட்டது. ஆற அமர இருந்து யோசிக்கவும் நேரமில்லை. மற்ற ரெண்டு பேருக்கும் ஹாலிவுட் படங்களில் விருப்பமில்ல. நீங்க பிகில் பார்க்க போங்க, நான் டெர்மினேட்டர் பார்க்க போறேன்னு சொன்னேன். அடுத்த நொடி இருவரும் மாயமா மறைஞ்சுட்டாங்க. இப்பே தான் 6:30  மேலும் ரெண்டு மணிநேரம்  காத்திருக்கணும். ஆனால் பிகில் மூன்று மணிநேரம் ஓடும் பொழுது டெர்மினேட்டர் வேறும் ஒன்றரை மணிநேரம் என்பதால் இரண்டு படங்களும் முடியும் நேரம் ஒன்றாக இருக்கும். சரின்னு டிக்கெட் வாங்க போனால் ரெண்டு சீட்டு மட்டும் தான் காலியாக இருந்தது. உடனே வாங்குனேன். ஒரு கணம் தாமதித்தாலும் இதுவும் போய்விடும்.  ஒருவேளை டெர்மினேட்டருக்கும் டிக்கெட் கிடைக்காமல் போயிருந்தால் என் நிலைமை பரிதாபம் தான். 

பிகில் பார்க்காமல் நான் விட்டுக்கொடுத்ததும் நண்பர்கள் இருவரும் என்னை தியாகியாக பார்த்தார்கள். ஒருவகையில் பிகிலுக்கு டிக்கெட் கிடைக்காது எனக்கு உள்ளூர சந்தோசம். வெளியே தியாகியாக நடிச்சிட்டு இருந்தேன். பிரமாண்ட திரையில் ஹாலிவுட் ஆக்சன் படம் பார்ப்பது அலாதியான அனுபவம். பழம் நழுவி பாலில் விழுந்த கதை. ஒருவாறு ரெண்டு மணிநேரத்தை கடத்திட்டு உள்ளே போய்ட்டு என்னோட சீட்டு நம்பர தேடிப்பிடிச்சு அமர்தேன். இனி சொல்ல போறது தான் மிக முக்கியமான வரலாற்று சம்பவம். 

பொதுவாக சவூதி அரேபியாவில் கட்டுப்பாடுகளும் சட்டங்களும் மிகக்கடுமை மீறினால் உங்கள் தலை நிலத்தில் உருளும். நான் சவூதியை செல்லமாக தலைவாங்கும் தேசமுன்னு சொல்லுவேன். கணவன் மனைவி தவிர்த்து வேறு எவரும் ஜோடியாக உலாவ முடியாது. எங்கும் ஆண்கள் மட்டும், குடும்பம் மட்டும் என்று இரு பிரிவுகள் இருக்கும். தியேட்டரிலும் ஆண்கள் மட்டும், குடும்பங்கள் மட்டும், சிறுவர்கள் மட்டும், என்று பிரித்து தான் படங்களை  திரையிடுவார்கள். ஒரு மாதத்திற்க்கு முன்பு வரை அதுவே நிலைமை. இப்பே எல்லாம் மாறிடுச்சு ஆண், பெண் ஒன்றாகயிருந்து பார்க்கலாம். நீண்டகாலமாக இங்கு இருப்பதால் இதையெல்லாம் பார்க்கும் பொழுது  அதிசயமாகதான் இருக்கு. ஒரு காலத்தில் இவையெல்லாம் கனவிலும் சாத்தியமில்லாத நிகழ்வு. இத்தனைக்கும் நடுவில் எனக்கு இன்ப அதிர்ச்சிவேறு என் இருக்கைக்கு ஓர் இருக்கை தள்ளி அழகு அரபு தேவதை தனியாக அமர்ந்து படம் பார்த்து கொண்டிருந்தாள். என் கண்ணையே நம்ப முடியவில்லை! கனவா, நனவாவென்று கிள்ளி பார்த்துக்கொண்டேன். பாருங்கள் நான் எவ்வளவு அதிஷ்டக்காரன் என்று.., எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வுக்கு தான் நன்றி சொல்லணும். நான் இருக்கும் நாட்களில் இங்கு கலாச்சார புரட்சிகள் எல்லாம் நடப்பது சந்தோசம்தான். இதில் கொடுமை என்னவென்றால் அரேபியர்கள் தடைகளை உடைத்து வெளிவரும் போது நம்ப நாட்டில் இருக்கும் சமூகத்தினர் பழமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நரேஷ் 
11-08-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I