தீராக்காதலி


ஹாய்... எப்படி இருக்கீங்க? 
நல்லா இருக்கீங்களா? சாப்பிட்டாச்சா?
என் மேல கோவமா? பரவால்ல கோவிச்சிக்கிறுக்குங்க ஆனா சந்தோசமா இருங்க.

ஹாய்... நா நல்லா இருக்கேன். 
நீ எப்படி இருக்க?

ஓஹோ... தேங்க்யு சார் ! 
நா எதோ இருக்கேன்.
என் மேல நீங்க கோவமில்லையா?
எந்த காரணமும் சொல்லாம 
உங்களை விட்டு போனதுக்கு?
பரவால்ல. பேசுனத்துக்கு தேங்க்ஸ் நீங்க நல்லாயிருந்தா எனக்கு அது போதும்.

போறது தான் போனே, ஒரேடியா விட்டு போக வேண்டியது தானேடி? 
பிறந்த நாளைக்கு கேக்குக்கு பதிலா  என்னை வெட்டிட்டு போகலாமுன்னு வந்தியா? அது எப்படி டீ? நீயே கொன்னு போட்டுட்டு சாக துடிச்சிகிட்டுயிருக்கவன் கிட்ட வந்து நீ இன்னும் உயிரோடதான் இருக்கிறியான்னு கேக்குற மாதிரி கேசுவலா சார் போட்டு பேசுற? கொஞ்சம் கூடவா உனக்கு வலிக்கல? கல்நெஞ்சுகாரிடி நீ!

நீ பண்ணுனது எப்படி இருக்கு தெரியுமா? ஒரு பாவமும் அறியாத அப்பாவியை தூக்கு மேடையில் ஏற்றிய உடன் கேட்டானாம். எதற்கு ஐயா எனக்கு இந்த 
தண்டனை? என்ன தவறு செய்தேனு சரி சொல்லுங்க. காரணம் தெரியாமல் எனக்கு உயிரை விட ஆசையில்லை என்றதுக்கு அந்த அதிகாரி சொல்லமாட்டேன். இதை நினைத்துக்கொண்டே குழப்பத்தில் மடிந்து போ என்றானாம்.

இப்படி எல்லாம் சொல்லி அவளை திட்ட தோணுச்சு ஆனால் நா அப்படி  பண்ணல.

என்னுடைய பதில் 
"நிறைய கோவம், வெறுப்பு எல்லாம் இருந்துச்சு. திடீர்னு உன் மெசேஜ் பார்த்ததும். பேசாம இருக்க முடியல. இனி கோவப்பட்டு என்ன பண்ண? 
அந்த கட்டத்தை தாண்டி வந்துட்டேன். நீ நல்லாயிருக்க தானே? "

இதுதான். 

அவளை சபிக்கவோ, திட்டவோ மாட்டேன். இல்லை, இல்லை என்னால் முடியாது. என் தீராக்காதலி அவள். நினைவுகளின் சூனியவெளியில் இன்னும் நானும் அவளும் பிரியவில்லை.

அவள் பதில் 

நா நல்லா இருக்கேன். எனக்கு இன்னைக்கு பிறந்தநாள் உங்ககிட்ட பேசணும் போல இருந்துச்சு. அவ்வளவுதா பத்தரமா இருங்க. பேசுனத்துக்கு தேங்க்ஸ்!  

பாய்..., நா போறேன்.

இப்பே சரி சொல்ல முடியுமா, ஏன் விட்டு பிரிச்சு போனனு ?

நெடும் யோசனைக்கு பிறகு மீண்டும் அதே கேள்வியை கேட்டேன் அதற்கு  
அவள் வழமை போலவே பதில் சொல்லவில்லை. 

*****
ஒருவரை நீங்கள் கத்தியின்றி ரத்தமின்றி எந்த வன்முறையையும் கையாளாமல் கடுமையாக தண்டிக்க வேண்டுமென்றால் அவர் மீது வரையை அற்று அன்பு செலுத்துங்கள். அவர்களின் நம்பிக்கையை பெறுங்கள். பிறகு நீங்கி சென்று விடுங்கள். காரணத்தை கூட சொல்லாதீர்கள். அவர்கள் உங்கள் நினைவில் வெந்து, மடிந்து போவார்கள். ஒருவேளை காலத்தின் சுழற்சியில் நீங்கள் மனம் மாறிவந்து அவனுடனோ அல்லது அவளுடனோ பேசும்போது அவர்கள் உங்களை மன்னித்துவிட்டால் அதை விட பெரிய தண்டனையை இந்த உலகத்தில் யாராலும் உங்களுக்கு கொடுக்கமுடியாது. அந்த மன்னிப்பை தான் நான் அவளுக்கு பிறந்தநாள் பரிசாக அளித்தேன். 

பின்குறிப்பு: இதில் வரும் நான் நிஜத்தில் நான் இல்லை. கதையின் நாயகன்.

நரேஷ் 
11-28-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I