The Great Indian Kitchen (2021) Malayalam movie

 
நல்ல படம், ஆனால் குடும்பத்துடன்
அமர்ந்து பார்ப்பதை ஆண்கள் தவிர்த்து கொள்ளவும். காரணம் மனைவியோ அல்லது அம்மாவோ சோற்றுப் பானையை தூக்கி உங்கள் தலையில் அடிக்கும் வாய்ப்புள்ளது. நல்ல வேளையாக தமிழ் படங்களில் வருவது போல இந்த படத்தில்  "சிங்க பெண்ணே" போன்ற வெறியேற்றும் உணர்ச்சி மிகு பாடல் எதுவும் இல்லை. இருந்திருந்தால் இந்நேரம் பல சமயலறைகள் பற்றி எரிந்திருக்கும்.

எனக்கு படம் பிடித்திருந்தது, பேசிய அடிப்படைக்  கரு மறுக்க முடியாத உண்மைதான். இப்பொழுது எல்லாம் வெகுவாக மாறிவிட்டது. பெண்கள் கற்கிறார்கள். உயர் வேலைகளில் இருக்கிறார்கள். ஆண்களுக்கு நிகராக சம்பாதிக்கிறார்கள். ஆனால் நம் அம்மாக்களின் தலைமுறையில் இந்த பிரச்சனை அதிகமாக இருந்தது. படத்தில் பெண்கள் சமைப்பதும், சுத்தம் செய்வதும். ஆண்கள் தின்பதும், புணருவதும் மட்டும் தொடர்ச்சியாக மீண்டும், மீண்டும் காட்டப்படுவதால் இதில் வரும் ஆண்களை பார்க்கும் பொழுது ஆண்களே கடுப்பாக கூடும். நாம் எதோ ஜாலியாக வேலைக்கு போய்வருவது போல காட்டியுள்ளார்கள். வெளியிடத்தில் நாங்கள் புடுங்குபடுவது நமக்குத்தான் தெரியும்.

பெண்களுக்கு சமையலிலும் வீட்டு வேலைகளிலும் முடிந்த மட்டும் ஆண்கள் உதவவேண்டும். சாப்பிட்ட தட்டையும், டீ குடித்த கப்பையும் அவர்களே கழுவி வைக்க வேண்டும். இதை அம்மாக்கள் சிறு வயது முதலே மகன்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அதைவிடுத்து தறுதலையாக வளர்த்து எந்த பெண் தலையிலாவது கட்டிவிட்டு பின்பு
இந்த மாதிரி படங்களை பார்த்துவிட்டு பொங்கி பெண்ணியம் பேசக்கூடாது.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I