நம்பிக்கை, வாக்குறுதிகள், 
அலங்கார வார்த்தைகள். 
இவையெல்லாம் நீ எனக்கு தந்தவை. 
நீங்கி செல்லும் போது உன்னுடன் எடுத்துச்செல்ல மறந்துவிட்டாய். 
 
இந்த பெட்டி நிறைய அவற்றை தான் நிரப்பிவைத்திருக்கிறேன். 
வாங்கிக்கொள். வேறு யாருக்காவது கொடுக்க உனக்கு தேவைப்படலாம். 
உன் நினைவுகளை மட்டும் திருப்பி கேட்காதே! அவற்றை எனக்குள்ளேயே தொலைத்துவிட்டேன். 

கடைசியாக ஓர் உதவி....
நடைப்பிணம் என்பதை ஊரார் 
அறிந்து கொள்ளும் முன், 
என் உயிரை மட்டும் திருப்பி 
கொடுத்துவிடு!

Comments

Post a Comment

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

நரகம்

அங்கு யாரும் புலப்படவில்லை

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I