சுவடு

நித்தமும் உன் நினைவுகளை
கடந்து தான் அவளுடன்
காதலுறுகிறேன்.

போகத்தின் உச்சத்தில் திளைத்திருக்கும் சமயத்தில் 
உன் பெயரைச் சொல்லி அவளை 
விளித்திடுவேனோவென்று அஞ்சுகிறேன்! 

நீ இடித்து நிர்மூலமாக்கிய
குடிசையை அவள் கட்டிக்கொண்டிருக்கிறாள். 

விரைவில் அங்கு
குடியேறிவிடுவோம்.

பிறகு உன் முகவரியை நான் நிரந்தரமாகத் தொலைத்து
விடக்கூடும்.

07-28-2021

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I