எங்கே உன் கடவுள் ?

நான் இந்து மதத்தை நேசிப்பவன், 
தமிழ் மொழியின் மீதும், கலாசாரத்தின் மீதும் மிகுந்த 
பற்றும் மரியாதையும் உடையவன். கவனிக்க, ஆனால் இவை எதன் மீதும் வெறித்தனமான ஈடுபாடு கொண்டவன் அல்ல., 
என் நம்பிக்கையும், மரபையும், பண்பாட்டையும் சுயவிமர்சனம் செய்து கொள்வதற்கான சுகந்திரத்தை இந்து மதம் எனக்கு அளித்தது. அதனால் அறிவையும் புரிதலையும் வளர்த்து கொள்ள முடிந்தது. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் என் கடவுளுக்கு மதமில்லை. மொழி பற்றுண்டு இனவெறியில்லை.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
எல்லா  ஊரும் என் ஊர், எல்லா 
மொழியும் என் மொழி. 
எல்லோரும் ஹோமோசெபியன் 
என்ற கொள்கையில் வாழ்பவன். 

விடலை பருவத்தில் திடீர் என உதிக்கும் ஞானத்தில் இந்து மதத்தில் உள்ள புராணங்களையும், நம்பிக்கைகளையும் கேலிக்கு உள்ளாக்கி விமர்சிப்பவர்களை பார்க்கும் போது பாவமாக இருக்கும். 
நானும் " பிக் பேங்க் தியரியை " , 
"டார்வினின் கூர்ப்பு கொள்கையையும்" , அறிந்து கொண்ட புதிதில் திமிறியபடி பாட்டியுடன் "எங்கே உன் கடவுள்? காட்டுனு" விதண்டாவாதம் செய்தவன் தான். அவள் என்னை பார்த்து புன்னகைத்தபடி "போடா கிறுக்கு பயலேனு" தலையை தட்டிவிட்டுட்டு போய்விட்டாள்.
காலம் கடந்த போது அவள் 
சிரிப்பின் மர்மம் புரிந்தது. 
சிலர்க்கு கடைசி மட்டும் இது 
புரிவதே இல்லை.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I