மாஸ்டர்


மூன்று மணிநேரப் படத்தை ஒருவாறு
நான்கு மணிநேரத்தில் பார்த்து முடித்தேன். இடைக்கிடையில் கண்ணயர்ந்து விட்டேன். படம் மொக்கை இல்லை. ஆனால் லோகேஷ் கனகராஜ் என்பதால் அதிகமாக எதிர்பார்த்து விட்டதுதான் ஏமாற்றத்திற்கு  காரணம். எதையோ எடுக்க வந்து வேறு எதோ எடுத்து தொலைத்து வைத்திருக்கிறார். இதற்கு இன்னும் இரண்டு டூயட் பாடல், கொஞ்சம் நகைச்சுவை எல்லாம் சேர்ந்து முழுமையான மசாலா படமாக சரி எடுத்து தொலைத்து இருக்கலாம். இது எதிலும் சேராமல் எதோ அரை அவியலாக வந்து சேர்ந்து இருக்கிறது.

பாவம் அந்த ஹீரோயின்! நல்ல அழகி  ஆனால் எதற்கு படத்தில் இருக்கிறார் என்றே தெரியவில்லை! இதில் அன்ரியா வேறு ஒரு பக்கம். விஜய்யும், விஜய் சேதுபதியும் அடிக்கடி காணாமல் போய்விடுகிறார்கள். இருவரும் படத்தில் இருப்பதே மறந்து போய் விடுகிறது. ஆனால் படம் மூன்று மணிநேரம். அரை மணிநேரம் ஓடும் அளவை சரி குறைத்து இருக்கலாம்.

கவலையாக இருக்கிறது. போகும்
போக்கை பார்த்தால் இனி ஆசையாக ஒரு விஜய் படம் கூட பார்க்க கிடைக்காது போல!!

மாஸ் ஹீரோக்களின் மசாலா படங்களில் லாஜிக் பார்க்க கூடாது தான் அதற்கு என்று இப்படி அநியாயம் செய்யக் கூடாது! விஜய் உடன் சுற்றும் அந்த வாண்டு பையன் ஹீரோவை விட அதிக சக்தி வாய்ந்தவனாக உள்ளான். படத்தின் பெரும் குறையே அதுதான். ஆ... ஊ... என்றால் அந்த கோப்பையை தட்டிக் கொண்டு ஆடுவது எல்லாம் சலிப்பை ஏற்படுத்துகிறது.

இட்லீ படம் என்றால் இப்பிடித்தான்
இருக்கும் என்று தெரியும். லோகேஷ் படத்தில் இதனை எதிர் பார்க்கவில்லை. இந்த புலம்பல் பதிவிற்கு இதுவே காரணம்.

Comments

  1. The film is not bad...... we can watch this movie for Vijay bro��

    ReplyDelete
  2. Agreed bro! not bad, its just my point of view....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I