Sixபேக் வேணாம் தொந்தியில்லாம இருந்தாலே போதும்



ஜிம்க்கு போகாம, உடற்பயிற்சி பண்ணாம, கொழுப்பினை கரைக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்காம எப்பிடி உடம்பை ஸ்லிம்மா வச்சிக்கிறதுனு சொல்லபோறேன். இது ஒரு சவால், மனச கட்டுப்படுத்த முடிந்தவர்களால் மட்டுமே செய்யமுடியும். உங்களுக்கு என்ன தேவை? ஏன் இதை பண்ணுறீங்க?  என்பதில் மட்டும் தெளிவா, உறுதியா இருங்க.



வயிறு முன்தள்ளி, தொடைகள் பெருத்து, முகம் பருத்து மொத்தத்தில் உடல் வடிவத்தை இழந்து கோணலாக வாழ்ந்துட்டு இருக்கோம். இதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கவழக்கம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு உடல் உழைப்பு அதிகமா இருக்கும் வாழ்வு முறை. அப்போ தினசரி வாழ்கைக்கு நமக்கு நிறைய சக்தி தேவைபட்டது.  காபோஹைட்ரேட் சத்து உள்ள சாப்பாட்ட நிறைய எடுத்துக்கொண்டாலும் அதற்கு ஏற்றால் போல்  உடல் உழைப்பு செய்வதால் செரிமானமாகிடும். ஆனால் இப்போ வாழ்வு முறை ரொம்ப மாறிடுச்சு பெருபாலோனோர் பார்க்கும் வேலை வேர்வை சிந்தி செய்வதுமாதிரியானது இல்லை. மாறாக மூளைக்குதான் பணிச்சுமை. அதேநேரம் உணவு முறையிலும்மாற்றம் இல்லாமப்போச்சு! தேவைக்கும் மேலதிகமாவே சாப்பிடுறோம். போதாக்குறைக்கு இன்று சந்தையில் கிடைக்கும் பேரும்பாலான உணவுகள் ஆரோக்கியமானதும்மில்லை.
 
தினசரி உணவு பழக்கவழக்கத்தின் மூலமாக எப்படி தொந்திக்கு குட்பாய் காட்டுறதுனு சொல்லப்போறேன்.  இது முற்று முழுதாக என் அனுபவம் கூடவே நான் பரிசோதித்து பார்த்தமுறை. மாறாக எங்கேயோ கேள்விப்பட்ட விடயங்களை தரவுபடுத்தவில்லை. 

இப்போ விசயத்துக்குவாறேன்
உடம்பு கொளுத்துட்டே போகுது, தொந்தி போட ஆரம்பிக்குது..., எனக்கு ஜிம்க்கு போகவோ,  உடற்பயிற்சி பண்ணவோ நேரமில்லைனு சொல்லுற ஆளாயிருந்தா நீங்க முதல் பண்ணவேண்டிய காரியம்

"உண்டி சுருக்குதுல்"  இன்னாது உண்டி.....சுருக்குதலா? அப்படினா என்னானு யோசிக்கிறீங்களா? அதுதான் உணவு கட்டுப்பாடு (diet control) இதை பண்ணாம நீங்க வருசகணக்கா ஜிம்க்கு போயிட்டு எண்ணாத்தை முக்குனாலும் ஒன்னும் நடக்காது என்பதை மனசுல வச்சிக்கிருங்க. அதே நேரம் வாயகட்டுறேன்னு  சொல்லி பட்டினி கிடந்திங்கனா அதுவும்  ஆரோக்கியமான உணவுகட்டுப்பாடு இல்லை. காரணம் உணவை தவிர்க்கும் போது உங்க உடம்புல இருக்க நல்ல தசைதான் முதல்ல கரையுமே தவிர கொழுப்பு அல்ல. உடல் எடை குறையும் ஆனால் கரைய  வேண்டிய கொழுப்பின் அளவில் மாற்றம் இருக்காது. இந்த நிலையை  Lean Fat னு சொல்லுவாங்க.

அப்போ எப்படி ஆரோக்கியமான முறையில் உணவு கட்டுப்பாட
ஆரம்பிக்குறது?

சொல்லுறேன். நம்ம பண்ணுற முதல் தவறு ஒரு நாளைக்கு தேவையான கலோரியை (உணவில் உள்ள சக்தியின் அளவு) ஒரே நேரத்துல சாப்பிடுறது. ரெண்டு கோப்பை சோறும், கறியும் சாப்பிட்டு திரும்ப இரவுக்கும் நல்லா வயிறு முட்ட சாப்பிட்டு படுத்தால் மேலதிகமான போசணை எல்லாம் கொழுப்பா உடம்புல சேமிக்கபடும். அதே சமயம்  நம்ம பாக்குற வேலையும் உடல் உழைப்பு அல்லாத இருந்தா வெகு விரைவில் கொழுத்து உடலின் அழகான வடிவத்தை இழந்து விடுவோம். பிறகு ரத்தத்தில் குளுக்கோசின் வீதம் அதிகரிச்சு நீரிழிவு நோய், மேலதிகமான காபோஹைட்ரேட் கொழுப்பா சேமிக்கபட்டு கொலஸ்டரோல், பிறகு உயர் ரத்தம் அழுத்தம், அதிக உடல்பருமன் காரணமாக மூட்டுவாதம், என்பு சார்ந்த பிரச்சனைகள் இப்படி ஒன்னு, ஒன்னா வர ஆரம்பிச்சிடும். 

இதை எல்லாம் தவிர்க்க நாம் பசிக்கு சாப்பிடும் பழக்கத்தை முதலில் விடணும். அப்படினா பசி அடங்கும் மட்டும் சாப்பிடுவது. உணவானது அளவில் குறைவாகவும்  உடம்புக்கு தேவையான போசணையை பூர்த்தி செய்யும் அளவில் இருந்தால் போதும். கடின உடல் உழைப்பு செய்பவர்கள் அதிகமா சாப்பிடலாம். அதுக்குனு கண்டதையும் கொட்டிக்க கூடாது பேலன்ஸ் டையட்டா இருக்கனும் அதிகபடியான எண்ணெயும், கொழுப்பும் உங்களையும் நோயாளியாக்கிவிடும். உடல் உழைப்பு குறைவான தொழில் செய்வோர் அதிகபடியாக கார்போஹய்ட்ரேட், கொழுப்பு, எண்ணெய் சார்ந்த உணவுகளை தவிர்த்து அனைத்து போசணைகளும் சமஅளவில் உள்ள வகையில் உணவு பழக்கவழக்கத்தை மாற்றி அமைந்து கொள்ளவேண்டும்.

மாற்றினா எப்படி?

உங்களுக்கு தொந்தியிருக்கு அதை குறைக்கணும். இப்போ அதுதான் உங்க இலக்குனு வைத்துக்கொள்ளவோம். அதே சமயம் உடற்பயிற்சி செய்யவும் நேரமில்லை. முதல் கட்டமாக நீங்கள் உட்கொள்ளும்  கலோரியின் அளவை கணக்கு பண்ண ஆரம்பிக்கணும். உதாரணத்துக்கு தினசரி உங்களுக்கு சுமாரா  2000 - 2500 கலோரிதான் தேவைனு வைத்துக்கொள்வோம் ஆனால் நீங்கள் 
3000 - 3500 கலோரிய தினமும் ஆகாரதின் மூலமாக எடுத்துகிறிங்க அப்போ மேலதிகமான போசணையெல்லாம்  கொழுப்பா உடம்புல சேமிக்கபடும். உடல் மேலும் பருக்கும். இதை தவிர்க்க உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு சத்துக்களின் அளவை குறைத்து நல்ல மாச்சத்து அடங்கிய
நிறைதானிய உணவுகள், விட்டமின்களும், கனியுப்புக்களும் அடங்கிய காய்கறி, கீரை, பழவகைகள், புரதம் சத்து நிறைந்த முட்டை, மீன், தானிய
உணவுகளை அளவாக சேர்த்து கொள்ளும் போது. உடம்பில் உள்ள கொழுப்பு கொஞ்சம், கொஞ்சமாக சக்தியாக மற்றபட்டு உடல்லியக்கத்துக்கு பயன்படஆரம்பிக்கும். 



இக்காலகட்டத்தில் உடல்நிறையில் மாற்றங்கள் நிகழ்வதை உணரமுடியும். ஸ்லிம்மாகுறது ஒரே மாதத்தில் நடந்து விடாது. உங்கள் உடம்பில் உள்ள கொழுப்பின் அளவையும் நீங்கள் மிக சிறப்பாக நடைமுறை படுத்தும் முறையையும்  பொறுத்து குறைந்தது நான்கு, ஐந்து மாதங்கள் தொடக்கம் ஒரு வருடம் கூட ஆகலாம். நினைவில் வைத்து கொள்ளுங்கள்உட்கொள்ளும்
உணவின் அளவை பாதியாக குறைத்து ஆரோக்கியமான உணவுகளின் மூலம் பிரதியீடு செய்யனும். காலையில் குடிக்கும் பால் டீ யில் இருந்து, சாப்பிடும் நொறுக்கு தீனி, இனிப்பு வகை, மென்பானங்கள், பியர், முதல் கொண்டு அனைத்தையும் நிறுத்தவேண்டும். காரணம் ஒரு கோப்பை சோறு, கறியில் உள்ள கலோரி பெறுமானம் ஒரு சாக்லெட்டிலும் இருக்க கூடும், அதனால் வாய் வழியாக உள்ளே போகும் எல்லாத்தையும் கணக்கு வச்சிக்கிறணும். வாரத்திற்கு ஒரு முறை மட்டும் Open Day யாக வைத்து கொள்ளுங்கள் அந்த நாள் ஆசைப்பட்ட எல்லாத்தையும் சாப்பிடுங்க, குடிங்க. தவிர்க்க முடியாத விஷடதினங்களில் விடுப்பு எடுத்த கொள்ளலாம். மற்றைய நாட்களில்
மிக தீவிரமாகயிருக்கனும். 

ஆரம்ப நாட்களில் கஷ்டமாதான் இருக்கும் மாதங்கள் போக, போக  உடம்பு ஸ்லிம்மா மாறிட்டு வரும் பொழுது நீங்க பட்டகஷ்டம் எல்லாம் மறந்து போயிடும். இதற்கு பிறகு நீங்கள் குறைவாக சாப்பிட்டாலும் பசியை உணரமாட்டீங்க அதே நேரம் சமவிகிதத்தில் சத்தான உணவை உண்பதால் உடலுக்கு தேவையான போசனையும் கிடைச்சிடும். உடல்பலவீனமாகாது. நாம் தான் ருசிக்கு சாப்பிட்டு இரைப்பையின் அளவை பெருசாக்கி கெடுத்து வச்சிருக்கோம். தொடர்ந்து ஆறு மாதங்கள் சரியான உணவு பழக்கவழக்கத்தை கடைபிடிக்கும் பொழுது உடலும் அதற்கு ஏற்றால் போல் பழகிவிடும். இன்னோரு மேஜிக்கும் நடக்கும் இப்பெல்லாம் உடற்பயிற்சி
செய்ய உங்களுக்கு நேரம் கிடைக்கும். 

எப்பிடி நான் தான் பிசியான ஆள் ஆச்சே !?

நம்ம விரும்பி ஒரு விஷயத்தை பண்ணும் போது அதற்கு நேரத்தைஒதுக்கி கொள்வோம். 

என்னைக்கோ சாகதானே போறோம் அது வரைக்கும் நிம்மதியா சாப்பிட்டு, குடிச்சு இருக்காம? ஏன் உடம்பை வருத்தி கொள்ளணும்? என்ற கேள்வி உங்கமனசுல வரலாம். இதையேல்லாம் பண்ணி நூறுவயசு வரைவாழுறோமோ, இல்லயோ! இருக்கும் வரை ஆரோக்கியமா வாழ்த்துவிட்டு போகலாம்!

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

நரகம்

அங்கு யாரும் புலப்படவில்லை

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I