The invisible man (2020)

மிஸ்டரி, திரில்லர் வகையரா படம்.
படத்தின் தலைப்பை பார்த்தவுடனே கதையை அனுமானித்து விடலாம்.
கண்ணுக்கு புலப்படாத ஒரு மனிதன் 
தான் வில்லன் அல்லது ஹீரோவாக இருக்கப் போகிறான் என்பது நிரூபணமாகிவிடும். இவ்வகை   சினிமாக்கள் திரைக்கு புதிதும் அல்ல Hollow Man படங்களில் எல்லாம் முன்பே நமக்கு காட்டி விட்டார்கள். இதையெல்லாம் தாண்டி நம்மை இருத்தி பார்க்கவைக்க 
இயக்குனர் எதாவது மாயம்தான் செய்தாக வேண்டும். அதை தான் 'Leigh Whannell' இதில் நிகழ்த்தி காட்டிக்கிருக்கிறார்.
படம் தொடங்கிய முதல் நிமிடம் தொற்றிக் கொள்ளும் பரபரப்பு படம் முடியும் மட்டும் இருக்கும். அதுவும் இரண்டு மணிநேரதிற்கு ஒரு சொட்டும் குறையாது.

ஆரம்பத்திலேயே முழுக் கதையையும் யூகிக்க முடிந்தாலும் அதிலும் சுவாரஸ்யத்திற்கு குறைவிருக்காது. 
முடிவில் நம் யூகிப்பையும் பொய்யாக்கி அடுத்தடுத்து அதிர்ச்சிகளை இயக்குனர் தந்து கொண்டிருப்பார். பொதுவாக திரைக்கதையில் கதை ஆரம்பிக்கும் பொழுது Protagonist பாத்திரம் அறிமுகம் செய்யப்படும். பிறகு அவர் எதிர் நோக்கும் பிரச்சனை அல்லது சவால் எதுவென்று காட்டுவார்கள். பிறகு அவர் எதிர்கொள்ளும் பிரச்சனையின் தீவிரம் பார்வையாளர்களுக்கு உணரத்தப்படும். அதிலிருந்து  மீண்டு வர போராடுவதும். 
கடைசியில் மீண்டு வந்தாரா, இல்லையா? என்பது முடிவாகயிருக்கும். இதுதான் கதையின் மிக முக்கிய பகுதி, இங்குதான் பிரச்சனையின் தீவிரம் அதிஉச்சத்தில் இருக்கும். எந்த கொம்பனாலும் இந்த இக்கட்டில் இருந்து தப்பி வர முடியாது 
என்று பார்வையாளர்கள் முழுதாக நம்பவைக்கபடுவார்கள். வேறு வழியே இல்லை இனி அவ்வளவுதான் என்று நினைக்கும் பொழுது ஹீரோ மீண்டு 
வந்தால் அந்த மாஸ் என்ட்ரி எப்படி 
இருக்கும். கற்பனை செய்து பாருங்கள். அந்த உணர்வு எல்லாப் படத்திலும் கிடைத்து விடாது. இருக்கை நுனி வரைக்கும் நகர்த்தி செல்லும் திரில்லர் என்பார்களே அதற்கு சிறப்பான உதாரணம் 
இந்த படம். 

அதே போல பின்னனி ஒலிக்கோர்வையின் துல்லியம் உங்களை மிரட்டி விடும்.
ஹோம் தியேட்டர் அல்லது நல்ல 
ஹெட் போன் பயன்படுத்தி பாருங்கள். அசந்து போவீர்கள்!, படம் தொடங்கும் போது அலையடிக்கும் அந்த காட்சி நான் சொல்லுவதற்கு சான்று.

சமீபத்தில் நான் மிகவும் ரசித்து பார்த்த திரில்லர், மிஸ்டரி படம்.
நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்,
தவறவிட வேண்டாம்.

நரேஷ் - 48

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I