தேவதையில்லா உலகு !

எனக்கு இந்த தமிழ் படங்களில் காட்டுவாங்களே ஐடி ஆபீஸ் அதுல மாதிரி சுற்றி வர அழகான பொண்ணுங்களுக்கு மத்தியில வேர்க் பண்ணனும்முனு தான் ஆசை! என்ன பாவம் பண்ணுனேனு தெரியல கடவுள் சவூதி
அரேபியாவில் கொண்டு வந்து விட்டுட்டான். இப்போ வேலை பண்ற இடத்துல என்னை சுற்றி எப்பவும் தாடியும் மீசையுமாவே இருக்கும்.  காலையிலேயே இந்த மூச்சிகளை பார்க்க கடுப்பா இருக்கும். ஒவ்வொரு நாளும் வேலைக்கு போறது ஒன்னாம் கிளாஸ் படிக்கும் போது ஸ்கூல் போக
எப்படி கஷ்டமா இருக்குமோ அதே பீலிங்!  இதுல இருக்க ஓரு நல்ல விஷயம்
என்னனா டிரஸ் வாங்குற காசு, சோப்பு, கிரீம், முடி வெட்டுற காசு என எல்லாம் மிச்சம். பொதுவா  அழகுபடுத்திக்கவே தோணாது. கிழிஞ்ச சட்டையை போட்டுக்கிட்டு ஆபீஸ்ல போய்ட்டு உக்காந்து இருப்பேன்.
அழகா உடுத்திட்டு வந்து யாரு பாக்கபோறாணு தோணும்.
பெண்கள் இல்லாத இடம் நரகம்!

சவூதியில ஹாஸ்பிடல், ஸ்கூல் தவிர வேறு எங்கும் வெளிநாட்டு பெண்கள்   வேலைப்பார்க்க அனுமதியில்லை. இப்போ அங்கங்கே சில நிறுவனங்களின் அக்கௌன்ட் சேக்சன்ல சிலர பார்க்க முடியுது. ஆனால் இந்நாட்டு பெண்களுக்கு அந்த கட்டுப்பாடுயில்லை வேறு துறைகளிலும் நிறுவனங்களிலும் வேலை பார்க்கலாம். ஆபீஸ்லயே ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக பிரித்து அவர்களின் இடம் தனியாக இருக்கும். என் பணியில் நான் வெளியே செல்லுவது குறைவு. வேலை நிமித்தமாக தேவதைகளின் குரலை போனில் மட்டுமே கேட்க முடியும். கொஞ்சம் கறாராக கடும் தொனியில் பேசவேண்டிய இடத்தில் எல்லாம் தேவதைகளின் குரலை கேட்டு லயித்து பேச்சற்றவனாகி  முதலாளியிடம் வாங்கி கட்டிக்கொள்ளுவதும் உண்டு. 

பெண்கள் வாசமே இல்லாது வாழ்வது மிகக்கொடுமை. இந்நாட்டின் கடுமையான சட்டதிட்டங்களுக்கு பயந்து எதிரில் ஐந்து அடிக்கு முன்பு ஓரு பெண்ணை பார்த்தால்  ஒதுங்கி வழிவிட்டு விடுவோம். பேசவோ நட்பு கொள்ளவோ வழியில்லை.பிரிட்ச்ல முட்டையும், பாலும், மீனும், கோழியும், மரக்கறியும், பழங்களும் இருக்கும் போது சாப்பிட தோணாது. அதேநேரம் ஒன்றும் இல்லை என்றால் ஏக்கமே வந்துடும். நான் சாப்பாட்டை
தான் சொன்னேன். வைரமுத்து சொன்னது உண்மைதான் "பெண் இல்லாத ஊரிலே ஆண் பூ கேட்பதில்லை" பிறகு பெண்வாசம் என்பதை கட்டிலுடன் மட்டும் தொடர்புபடுத்தி கொள்ளவேண்டாம்.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I