இரண்டு மாம்பழங்கள்

நேற்று வார இறுதி நாள்னாள சந்தைக்கு போயிருந்தேன். பொன்னிறமான இரண்டு மாங்கனிகள் கண்ணில்பட்டுச்சு கிலோ இருபது சவூதி ரியாலுனு விலை இருந்தது பழத்தை கையில எடுத்து சில நிமிடங்கள் அடிக்கிடிபட்டிருக்கான்னு தீவிரமா பரிசோதனை பண்ணி ஒருவாறு ரெண்டு பழத்தை தெரிவு செஞ்சு பில் பண்ணுனா பதினச்சு ரியால் வந்துச்சு.
நம்ப ஊரு காசு 700.00 ரூபாய். ஐயோ முதலாளிகிட்ட புடுங்கல்பட்டு சம்பாதிக்கிற காசு எல்லாம் இப்படி கனி வாங்கியே கரியா போகுதுனு மனசுல புலம்பிகிட்டேன்.  இதுனால் தான் சந்தைக்கு போனால் மாம்பழங்கள் இருக்க பக்கம் திரும்பி கூட பார்க்கமாட்டேன். சில சமயங்களில் தெரியாம கண்ணுல
பட்டுட்டா மதி மயங்கி X லவ்வரை ஏக்கத்துடன் பார்ப்பது போல் பார்த்து திடீருன்னு சுதாகரிச்சுகிட்டு "சீ இந்த பழம் புளிக்குமுன்னு அந்த பக்கமா ஓடிடுவேன்" 

முதல் ஒருவருடம் அப்படித்தான் ஓடியது. இப்போ ஐந்து வருடங்கள் முடிய போகுது. எப்போ ஊருக்கு போறதுன்னு என்ற கேள்விக்கு உண்மையாவே விடை தெரியல. போறபோக்க பார்த்தா முதலாளி கழுத்த பிடுச்சு ஊருக்கு பறக்கும் பிலைட் உள்ளுக்கு தள்ளும் மட்டும் போக மாட்டேன். "இன்னைக்கு செத்தால் நாளைக்கு பாலு" ரொம்ப பிளேன் பண்ணி வாழ்ந்து பொட்டுன்னு போயிட்டா!? அதுனாலேயே அப்பப்பொழுது கஞ்சத்தனபடாமல் ஆசைபட்டத்தை வாங்கி சிலவு செய்வேன்.

இதுல கொடுமை என்னன்னா? புற அழகில் என்னை மயக்கிய பழம். வீட்டுக்கு கொண்டு வந்து வெட்டி  ஓரு துண்டை வாயில வைத்தால் சுவை அமிர்தம் போலும் இருக்கலாம். சில நேரம் வாயிலேயே வைக்க முடியாதப்படி கண்றாவியாவும் இருக்கலாம். என்னதான் தேடி தேடி நல்லதா வாங்குனாலும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை. இப்போ புரியுதா X லவர் கூட என் மாங்கனியை ஒப்பிட்டேன்னு?


Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I