Joji / 2021 மலையாளம்

 Spoiler Alert 

நேற்று ஜோஜி பார்த்தேன். எல்லோரும் அதிகம் புகழ்ந்து எதிர்பார்ப்பை எகிற விட்டபடியால், நானும் "என்னால் அதன் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை" என்று அடித்து விட விருப்பம் இல்லை. ஆனால் தரமான படம் அதில் எந்த சந்தேகமும் இல்லை.
என் ஏமாற்றத்திற்கு காரணம்
 "ஒரு சாமானியன் குடும்ப சமூக, புறக்கணிப்பு காரணமாக இரண்டு கொலைகள் செய்கிறான்" என்று கதையின் அடிநாதத்தையே சொல்லி ஸ்பாய்லர் செய்து விட்டார்கள். இது தெரியாமல் படம் பார்க்கும் ஒருவனுக்கு ஜோஜி அற்புத திரை அனுபவத்தை தந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது.

வளமை போலவே பகத் பாசில் தன் பங்கை நிறைவாக செய்து விட்டார். சேட்டன்கள் ஒரே வீட்டையே சுற்றி சுற்றி ஒளிப்பதிவு செய்து நிறைவான கதையை சொல்லி அசத்தி விட்டார்கள். தமிழ் சினிமா இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அதே பழைய புராணத்தை பாட மாட்டேன். எல்லோரும் இப்படியே எடுக்க தொடங்கிவிட்டால் நிச்சயம்
வெறுத்து விடும். ஆனால் இது போன்று சில படங்களும் வருடத்திற்கு மூன்று, நான்கு சரி வரவேண்டும். நம்மவர்கள் இதை விட சிறப்பாக செய்ய கூடியவர்கள் தான்.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I