மண்டேலா

எல்லோரும் மண்டேலா படத்தை பார்த்துவிட்டு நெஞ்சுருகி பதிவிட்டிருந்தார்கள். நானும் பார்த்தேன். முதல் நாள் ஒரு மணிநேரம், பிறகு தூக்கம் வந்து விட்டது. மறுநாள் மிகுதியை பார்த்து முடித்தேன். நல்ல படம் தான் சூரை
மொக்கை கிடையாது. ஆனால் பொறுமையை சோதிக்கிறது.
அரசியல் நையாண்டி கதையை சொல்ல முயற்சித்து இருக்கிறார்கள்,
ஆனால் முழுதாக கைகூடவில்லை.
கதாபாத்திரங்கள் எல்லாம் பேசிய வசனங்களையே மீண்டும் பேசிக்கொண்டும், செய்தவற்றையே மீண்டும் செய்து கொண்டும் அயர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள். இரண்டு மணித்தியாலமும் இருபது நிமிடமும் ஓடுகிறது. அதில் இருபது நிமிடத்தை
வெட்டி அகற்றி இன்னும் கொஞ்சம் திரைக்கதையை சீர்படுத்தி இருக்கலாம்.

படத்தில் வரும் பெரிய ஐயா கதாபாத்திரம் குழப்பமாக இருக்கிறது. அவருடைய நிலைபாடு என்ன என்பது அவருக்கே தெரியவில்லை. பிறகு அவரின் குடும்பம்; அம்மாவும், மகனும், அப்பாவும் கிட்ட தட்ட சமவயது உடையவர்களாக தெரிகிறார்கள்.

ஜோக்கர் படம் மாதிரி வந்திருக்க வேண்டியது. பலவீனமான திரைக்கதை
முழு படத்தையும் மளுங்கச் செய்துவிட்டது.
படத்தில் இருக்கும் ஒரே ஆசுவாசம்
யோகி பாபு தான். அழகாக நடித்து இருக்கிறார். குணச்சித்திர கதாபாத்திரத்திலும் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்து விட்டார்.

படத்தின் இயக்குனர் இந்த நெஞ்சுருகி புகழ்ந்து தள்ளுபவர்களின் பேச்சில் மயங்கி விடாமல். விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு குறைகளை சரி செய்து கொண்டால், அடுத்த படத்தை நிறைவாக தரமுடியும்.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I