பிரயாணக் கட்டுரைகள்

தமிழ் நாட்டை சேர்ந்த 
ஏ. கே. செட்டியார் 1947 இல் எழுதிய "பிரயாணக் கட்டுரைகள்" என்ற நூலில் இலங்கை பயணம் சார்ந்த கட்டுரைகளில் கண்டியை பற்றி எழுதியிருந்த சுவாரசியமான குறிப்பை கீழே பகிர்ந்துள்ளேன், வாசித்து பாருங்கள். 
***
இலங்கையில் சாமான்களின் 
விலை மிகக் கிராக்கி. 
சில சாமான்கள் சில பகுதிகளிலே என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காது. கண்டிப் பகுதிகளில் சிலர் ஒரு வேளை தான் சோறு சாப்பிடுகின்றனர். மற்றொரு 
வேளை ரொட்டி, பழம் முதலியவை தான். வெண்மையான சோறு பார்ப்பது அபூர்வம். பொதுவாகச் சோறுநவரத்தினங்களைப் போல 
பல நிறங்கள் உள்ளதாக இருக்கும். இந்த சோற்றை பார்த்த பின்னர் தான், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு பலர் ஏன் அடிக்கடி வருகின்றனர் என்ற விஷயம் விளங்கிற்று.

ஒரு வாழைப் பழத்தின் விலை 
கால் ரூபாய் முதல் அரை ரூபாய் வரை, காலத்துக்குக்கும் இடத்துக்கும் தக்கபடி இருக்கும். சில சமயங்களில் முட்டை ஒன்று அரை ரூபாய் வரை விற்பனையாகும். உளுந்து கிடைப்பது கஷ்டம். கஷ்டப்பட்டுக் கிடைத்தாலும் கொத்து ஒன்று, நான்கு அல்லது ஐந்து ரூபாய் இருக்கும். கொத்து என்பது அரைப்படிக்குச் சிறிது அதிகமானது.
வெங்காயம், மிளகாய், கடுகு, சீனி முதலியவைகள் சில சமயங்களில் 
இருட்டுச் சந்தையிலும் கிடைக்காமல் போய்விடும்.

எதுவுமே பொதுவாக குறித்த விலைக்கு கிடைப்பதில்லை, ஐந்து சதம் விலையுள்ள பத்திரிகை எட்டுச் சதம். இந்தியாவில் ஐந்து ரூபாய் விலையுள்ள புத்தகம் இலங்கையில் சில சமயங்களில் பதின்மூன்று ரூபாய்க்கு விற்கும். 
சில சமயங்களில் தினசரிப் பத்திரிகைகளை வாங்கிப் படிப்பதைவிட, அவைகளை படிக்காமலே எடைபோட்டு விற்று விடுவதிலே அதிகமான லாபமுண்டு.

துணி விலை, யானை விலை 
குதிரை விலையாக இருக்கும். அப்படியானால் யானை விலை, குதிரை விலை இப்பொழுது எப்படி என்று கேட்காதீர்கள். துணி வாங்க கூப்பன் உண்டு. ஆனால் இந்த கூப்பனுக்கு வாங்குகிற துணி யாருக்குமே போதாது. 
சாதாரணமாக நான்கு முழ வேஷ்டி இருபது அல்லது இருபத்தைந்து ரூபாய்க்கும், லுங்கி முப்பது 
அல்லது நாற்பது ரூபாய்க்கும் விற்பனையாகும். சில சமயங்களில் குடைகளின் விலை நாற்பது முதல் அறுபது வரை உயரும்.

காபிக் கிளப்புகளிலே பலகாரங்கள் இல்லாவிட்டாலும், ரேடியோ கண்டிப்பாக இருக்கும். உளுந்து இல்லாத தோசை, காபி என்று பேர் படைத்த வெந் நீர் முதலியவை தான் கிடைக்கும். எவ்வளவு தான் பணம் செலவு செய்தாலும் வயிறார உண்ண முடியாது. கிடைக்கும் உணவு வகைகளும் மிக மட்டமாயிருக்கும்.

பொதுவாக இலங்கையில் எல்லா சாமான்களும் கிராக்கி, மலிவானது பணம் ஒன்று தான் !

Comments

Post a Comment

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I