புதுவகை எழுத்தின் முன் உள்ள சவால்கள்

சிங்கப்பூரை சேர்ந்த 
"மாயா இலக்கிய வட்டம்" இம்மாத ஆரம்பத்தில் ஏற்பாடு செய்திருந்த  "புதுவகை எழுத்தின் முன் உள்ள சவால்கள்" என்ற தலைப்பில் 
கீழான சாருநிவேதிதாவின் கலந்துரையாடல் Zoom செயலியின் ஊடாக நடைபெற்றது. 
முதல் ஒரு மணிநேரம் சாரு பேசினார். பிறகு ஒரு மணிநேரம் கேள்வி பதில். குறிப்பிட்ட 
தினத்தில் விடுமுறை
என்பதால் நானும் கலந்து கொண்டேன். சாருவின் "நே நோ" சிறுகதை தொகுப்பிலிருந்து  சில கதைகளையும், 
The Beach என்ற  Alain Robbe-Grillet இன் பிரெஞ்சு சிறுகதையும் படித்துவிட்டு,
Bela Tarr இன் The Turin Horse என்ற ஹாங்கரிய படத்தையும், முடிந்தால் பார்த்துவிட்டும் வரும்படி கூறினார். 
காரணம் புதுவகையான எழுத்துக்கு மேற்குறிப்பிட்ட படைப்புகள் சிறந்த உதாரணங்கள்.

நான் சாருவின் சிறுகதைகள் ஆன 
" நே நோ "

 " The Joker was here " 

"நட்சத்திரங்களிடமிருந்து செய்தி  கொண்டு வந்தவர்களும், பிணந்தின்னிகளும்"  

ஆகிய கதைகளை மீள்வாசிப்பு செய்துவிட்டும், The Beach என்ற  சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை ஒன்றுக்கு இரண்டு தடவை படித்து புரிந்து கொண்டும், The Turin Horse படத்தையும்  பார்த்துவிட்டு, சாருவிடம் கேட்பதற்கு 
மூன்று கேள்விகளையும் தயார் 
செய்து கொண்டேன். குருவிடம் முதல் முறையாக பேச போகிறேன். 
பேசவேண்டும் என்பதற்காக மொக்கையா கேள்வி கேட்டு குட்டு வாங்கிவிட கூடாதென்று முன்னெச்சரிக்கையும், சிறுபதற்றமும் கலந்த சந்தோஷத்தில் முதல் ஒரு மணிநேரம் மனம் அலையடித்து  கொண்டிருந்தது. முக்கியமான கேள்வியை மீண்டும் மீண்டும் மனதிற்குள் கேட்டு தயாராகி கொண்டேன். ஒரு மணிநேரம் 
சாரு மிக அருமையாக பேசினார். 
அதிலேயே என் மூன்றில் இரண்டு கேள்விக்கு விடை கிடைத்து விட்டது.
பேச்சு முடிந்த உடன் தைரியத்தை வரவழைத்து கொண்டு முதல் 
ஆளாக என்னிடமிருந்த 
கேள்வியை கேட்டேன். 

கேள்வி;
பொதுவாக தமிழ் சூழலில் எழுதப்படும்  மரபுவகை யதார்த்தவாத கதைகளை தாண்டி புதிய பாணியில் எழுதிய ஓர் கதையை இணைய இலக்கிய இதழுக்கு அனுப்பினால் அதை ஏற்று கொள்ளமாட்டார்கள். இந்த சிக்கலை எப்படி எதிர் கொள்வதென்று? 

அதற்கு சாரு சுருக்கமாகவும், தெளிவாகவும் பதிலளித்தார். அவர் கூறிய பதில் இந்த காணொளி இணைப்பில் உள்ளது. விரும்பினால் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

மேலே நான் குறிப்பிட்ட  சாருவின் மூன்று சிறுகதைகளும்,
 "த டூரிங் ஹார்ஸ்" படமும்  
புதிய வகை எழுத்துக்கு / பின் நவீனத்துவ எழுத்துக்கு சிறப்பான உதாரணங்கள். அடுத்து தலைமுறை வாசித்தாலும் புதிதாக இருக்கும். இந்த படைப்புகள் வேறும் பொழுது போக்குக்காக அணுகும் சாதாரண வாசகனை நிச்சயம் திருப்திபடுத்தாது.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I