Togo / 2019

(The untold true story)

No Spoilers

1925 ம் ஆண்டு அலெக்ஸாவில் உள்ள 
நோம் என்ற சிறிய நகரத்தில் diphtheria என்னும் தோற்று நோய் தீவிரமாக பரவி நிறைய குழந்தைகள் பாதிக்கபடுகிறார்கள். அதற்கு தடுப்பு மருந்து கிட்டத்தட்ட 700 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வேறு ஒரு இடத்தில் உள்ளது. மோசமான காலநிலை. பேரும்பனிபுயல் ஒன்று வரக்கூடும் என்றபடியால் விமானம் மூலமாகவோ, இரயில் மூலமாகவோ கொண்டு 
வரமுடியாத நிலை. ஒரு பக்கம் நோயின் தாக்கமும் தீவிரமடைந்து கொண்டு வருகிறது. காலநிலை சரியாக மட்டும் பார்த்து கொண்டிருந்தால் குழந்தைகளை மொத்தமாக பறிகொடுக்க வேண்டியது
தான். ஊரின் மேயர் தலைமையில், மருத்துவர், பிற முக்கிய பிரமுகர்கள், மக்களின் பிரதிநிகள், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் எல்லோரும் கூடி அவரச கூட்டம் நடத்துகிறார்கள்.  

Dog Sled என்னும் நாய்களினால் இழுத்து செல்லப்படும் சறுக்கு வண்டியின் மூலமாக மட்டுமே பனிபாதையை கடந்து மருந்தை கொண்டு வந்து சேர்க்க முடியும். இந்த மாதிரியான மோசமான வானிலை இருக்கும் போது பயணம் செய்வது உயிரை காவுவாங்கிவிட கூடும். இருந்தாலும் Dog Sled செலுத்துவதில் அனுபவம் மிக்க திறமையான உள்ளுர்வாசியான செப்பலாவிடம் உதவி கேட்கின்றனர்.
அந்த பயணத்தை மேற்கொண்டால், 
தானும், தன் நாய்களும் உயிருடன் மீண்டு வருவதற்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து மறுக்கிறார்.

பின்னர் அந்த நோயுற்ற குழந்தைகளை நினைத்து பார்த்து கவலைக் கொள்கிறார். தக்க சமயத்தில் தடுப்பு மருந்தை கொடுக்காவிட்டால் அவர்களை பறிகொடுக்க வேண்டியதுதான். மிகுந்த மனப்போராட்டத்திற்கு பிறகு மனைவியின் எச்சரிக்கையையும் மீறி தன் உயிர் தோழனான டுகோவினதும், தனதும் உயிரை பணையம் வைத்து  மரணபயணத்தை மேற்கொள்ள முடிவு செய்கிறார்.

வருடம் முழுவதும் பனியினால் உறைந்து கிடக்கும் துருவ பகுதிகளில் வாழும் Working Dogs வகையை சார்ந்த சிபெரியன் ஹஸ்கி (Siberian Husky)
இன நாய்களை தொழில் முறையாக வளர்ப்பவர். அதில் ஒரு குட்டி இளமையில் நோயுற்று சாகும் நிலையில் இருக்கும். அவரின் மனைவி மிகுந்த இரக்ககுணம் உடையவர். அதனை இரவில் படுக்கை அறையில் வைத்து வருடி கொண்டிருப்பதை கண்டு
 " நாய்களை படுக்கை அறைக்கு கொண்டு வரவேண்டாம் என்றால்
கேட்க மாட்டியா " என்று சத்தம் போடுகிறார். அதற்கு அவள் 
"இல்லை இவன் ரொம்ப சோர்வா இருக்கான், கொஞ்சம் கவனிச்சா சரி ஆகிடுவான். எதுக்கு நம்ம கொஞ்சம் 
முயற்சி செய்து பார்க்க கூடாது" என்று சொல்கிறாள். "நாம் செய்வது வியாபாரம். அவைகளின் மீது மிகுந்த பாசத்துடன் இருக்க கூடாது. நாய் நமக்கு செல்ல பிராணியே, நண்பனோ, வேறு சொந்தமோ இல்லை எம்மை பொறுத்த வரை இது ஒரு மிருகம் என்பதை மனதில் நிறுத்தி கொள் இல்லாவிட்டால் நமக்கு இந்த தொழிலில் தொடர்ந்து ஈடுபட முடியாது என்கிறார். இப்படி கூறும் செப்பலா இரக்கம் இல்லாத மனிதர் அல்ல, அவரின் இடத்திலிருந்து பார்க்கும் போது அது சரியே.

அந்த நாய் குட்டி நோயிலிருந்த வெகு சீக்கிரமாக மீண்டு, சரியான துடிப்பு மிக்கவனாக வளர்த்து வருகிறது. நாள் முழுவதும் ஒரே ஆட்டம்தான். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு துடுக்குதனம். அதனை சமாளிக்க முடியாமல் மனைவியையும் மீறி ஊரில் ஒருவருக்கு கொடுக்கிறார்.
அந்த மனிதர் மறுநாளே "இது நாயில்ல 
பேயி நீயே வச்சிக்கோன்னு" அவர்கிட்டயே திருப்பி கொடுக்க, வேறு வழியில்லாமல் கூண்டில் அடைத்து வைக்கிறார். அந்த முயற்சியும் தோல்விதான். செப்பலாவிற்கு வெறுத்து போகிறது. ஊரிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு வீட்டிற்கு கொடுக்கிறார். ஆனால் எப்படியோ தப்பி மீண்டும் வீட்டுக்கே ஓடி வந்து விடுகிறது. 

ஒரு விபத்தாக, இது சாதாரண நாயில்லை Dog Sled டை இழுத்து செல்லும் நாய் கூட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தும் Lead Dog என்பதை தற்செயலாக கண்டுபிடிக்கிறார். பல மாதங்கள் இருவருக்கும் இடையில் நடந்த பிணக்கிற்கு பிறகு இந்த சம்பவம் மூலம் இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். படத்தில் முக்கியமான தருணமிது. படமாக பார்க்கும் போது உங்களுக்கு கிடைக்கும் சுவாரசியம் குறைந்து விடகூடாது என்ற காரணத்திற்காக மேற்குறிப்பிட்ட காட்சிகளை நான் முழுமையா விபரிக்கவில்லை. துடுக்கான அந்த
நாய் குட்டிக்கு டுகோ (Togo) என்று பெயர் வைக்கிறார். தொடர்ந்து பனிரெண்டு வருடங்கள் அந்த குடும்பத்தில் ஒருவனாக டுகோ வளர்கிறான்.

இந்த படத்தின் அழகே டுகோவிற்கும் செப்பிலாவிற்கும் இடையிலான உறவுதான். இருவருக்கும் இடையிலான அன்பில் நம் கண்கள் நிறைத்துவிடும். அதுவும் நீங்கள் Dog Lover ராக இருக்கு பட்சத்தில் நிச்சயமாக நிகழும்.

அடுத்து பனிமலையில் போகும் பயணத்தில் டுகோவின் சாகசத்தை கண்டு மிரண்டு போவீர்கள். மயிர் கூச்செரியும் கிராபிக்ஸ் காட்சிகள்
மிக நேர்தியாக படமாக்கபட்டுள்ளன.
ஒரு கட்டத்தில் படம் சீட்டின் நுனிக்கே உங்களை கொண்டு வந்து நிறுத்திவிடும்.

கடைசியில் வெற்றிகரமாக மருந்தை கொண்டுவந்து சேர்க்க முடிந்ததா இல்லையா என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Spoiler Alert 

அந்த மருந்தை கொண்டு வந்து சேர்க்கும் ரிலேவில் (Relay) மேலும்
சில Dog Sled குழுக்களும் பங்குகொள்கின்றன. ரிலேவை முடித்து வைக்கும் Balto என்ற நாய்க்கு அதிக புகழ் கிடைக்கிறது. கிட்டத்தட்ட மொத்த 700 கிலோமீட்டர் ஓட்ட தூரத்தில் 250 கிலோமீட்டருக்கு அதிகமான ஆபத்தான தூரத்தை டுகோ கடந்து வந்ததை ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் போவது துரதிஷ்டமான நிகழ்வுதான். 
நாட்கள் கடந்து டுகோவின் சாகசம், 
தியாகம், நன்றியுணர்வு, துணிச்சல் வரலாற்றில் இடம் பெறுகிறது. 
டுகோ இந்த சாகசம் பயணத்தை அதன் பனிரெண்டாவது வயதில் அதாவது வாழ்வின் அந்திம காலத்தில் செய்ததுதான் சாதனையே!  (டுகோ Siberian Husky இனத்தை சேர்ந்த நாய். இவற்றின் சாராரி ஆயுட்காலம் 12 - 15 வருடங்களே)

அதிரடியான காட்சிகளுடன், ஒரு உணர்வு பூர்வமான ஒரு படத்தை பார்த்த திருப்தி நிச்சயமாக கிடைக்கும். இது ஒரு உண்மைக் கதை என்னும் போது
அவ்உணர்வு இரட்டிப்பாகிறது. 
மனம் அமைதியிழந்து கிடக்கும் இந்த 
கொரோனா காலத்தில் பிள்ளைகளுடன் பார்த்து ரசிக்க கூடிய அருமையான படம். கட்டாயம் பாருங்கள். 


Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I