சந்திப்போமா

இப்பொழுதெல்லாம் நீ எப்படி இருப்பாய். எங்கு இருக்கின்றாய். இந்த நொடி என்ன செய்து கொண்டிருப்பாய்? என்று நான் கனாக்காண ஆரம்பித்து விட்டேன்.

ஓரு வேலை நீ தலையனை அனைத்து உறங்கி கொண்டிருக்கலாம்.

முகப்புத்தகத்தில் உலாவிக்கொண்டிருக்கலாம். 

உன் அம்மாவுக்கு சமையலில் உதவி கொண்டிருக்கலாம்.

பட்டாம் பூச்சியின் வர்ணங்களை எண்ணிக்கொண்டிருக்கலாம்.

அழுது முடிந்து புன்னகைத்து கொண்டிருக்கலாம்.

சூடான தேனீரை பருகியப்படி ஜன்னல் ஓரமாய் நின்று மழையை ரசித்து கொண்டிருக்கலாம்.

பிறக்காத குழந்தைக்கு என்ன பெயர்  வைப்பதென்று காதலனுடன் கலந்தாலோசித்து கொண்டிருக்கலாம்.

பிடித்த பாட்டின் வரிகளை முணுமுணுத்தப்படி ரீங்காரம்மீட்டு  கொண்டிருக்கலாம்.

பசலை கொண்ட தேகத்தை கண்ணாடியில் வெறித்து பார்த்து விசும்பி கொண்டிருக்கலாம்.

கவிதை எழுதி கொண்டிருக்கலாம்.

உன் அண்ணனுடன் சண்டையிட்டு கொண்டிருக்கலாம்.

மழலைக்கு முத்தமிட்டு கொண்டிருக்கலாம்.

தோழியுடன் பகிடி பேசிக்கொண்டிருக்கலாம்.

நாய்க்குட்டியுடன் விளையாடி கொண்டிருக்கலாம்.

பரபரப்பான அலுவலக நேரத்தில் எதிர்காலம் பற்றிய குழப்பத்தில் சிந்தித்து கொண்டிருக்கலாம்.  
புத்தகம் வாசித்து கொண்டிருக்கலாம்.

உன் காதலனுடன் புணர்ச்சியில் முயங்கி, கிறங்கி சொர்க்கத்தின் வாயிலை நெருங்கி கொண்டிருக்கலாம்.

ஒருவேளை நீயும் என்னை  தேடிக்கொண்டிருக்கலாம். 

இந்த கணம் இதை வாசித்து கொண்டிருக்கலாம்.

கிறுக்கு பயல் எதேதோ பிதற்றி வச்சிருக்கான். என்று திட்டிக்கொண்டிருக்கலாம்.

ஓருகாலும் நாம் சந்திக்கபோவதேயில்லை என்று தெரியாமல். இன்னும் நீ என்னை பற்றிய கனவுகளில் மூழ்கியிருக்கலாம்.

நரேஷ் 10-11-2019

Comments

Post a Comment

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I