7/G ரெயின்போ காலனி


செல்வராகவன் எனக்கு பிடிச்ச இயக்குனர் அவருடைய Intensive film making style ரொம்ப பிடிக்கும், காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, 7/G ரெயின்போ காலனி  போன்ற படங்கள் ஓரு வகையாகவும்.  ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், போன்ற  தமிழ் சினிமாவில் சில மாற்று முயற்சிகளும்  அவரின் திறமையை வெளிப்படுத்திய சில படைப்புகள், ஒருவேளை இயக்குனர் ஷங்கர் படங்களுக்கு மாதிரி பட்ஜெட் கிட்டச்சிருந்தா ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம்  இன்னும் நல்லா வந்து இருக்கும் பெரும் பொருட்சிலவில் எடுக்க வேண்டிய படத்தை குறைந்த முதல் கொண்டு  எடுத்தப்படியால் அப்படங்கள்   பெரிதாக பேசப்படவில்லை.  

செல்வராகவன் படங்களில் மிகைப்படுத்தபட்ட செயற்கைத்தனம் அற்று உண்மைத்தன்மை இருக்கும் கதாபாத்திரங்களின் ஊடாக நாம் எம்மை காணும் போது அதனுடன் ஒன்றிவிடுவோம் அவர் படங்களில் காதல், ஆண் - பெண் உறவு, கதாபாத்திரங்கள் எல்லாம் தனித்தன்மையானது,  பெரும்பாலும் கதாநாயகர்கள் இருண்ட உலகத்தில் இருந்து வெளிச்சம் தேடுபவர்களாக இருப்பார்கள்,  ஹீரோக்களுக்கு உண்டான இலக்கணம் இருக்காது, நிஜத்திற்கும் சினிமாவிற்கும் இடையில் பயணிக்கும் அவரின் கதைசொல்லும் முறை எனக்கு பிடிக்கும்.

7/G ரெயின்போவ் காலனி மனசுல ரொம்ப பதிச்ச படம், வெளிவந்து 14 வருசமாகுது ஆனால் இன்று பார்த்தாலும் படம் முடியும் போது கண்கள் கலங்கி சில சொட்டு கண்ணீர் வரும், ரொம்ப சாதாரண கதை, இத விட எவ்வளவோ நல்ல படங்கள் எல்லாம் இருக்கு ஆனால் இந்த படத்தை எளிதாக கடந்து போக முடியல, இழப்புகளையும், வலியையும் நாயகனின் ஊடாக என்னை உணரச்செய்வதால் கூட  இருக்கலாம், தீராகாதலுடன் தோற்று போயிருந்தால்  இந்த படம் உங்களுக்கும் பிடிக்கும். 3 மணிநேரம் ஓடும் திரைக்கதை  முழுவதும் கதிரும், அனிதாவும்  நிறைந்து  இருப்பார்கள் எந்த இடத்திலும் ஒரு துளியெனும்  சலிப்பு தட்டாது இன்னும் சில மணிநேரம் நீண்டுருந்தால் என என்ன தோன்றும் அவ்வளவு இயல்பா, அழகா அந்த கதாபாத்திரங்கள் கதையை நகர்த்தி செல்லும்.

கதிர் திட்டம்மிட்டு அனிதாவை காதலிக்க நினைக்கல, அதுவா நிகழுது அவனுக்கு தெரிஞ்ச முறையில் அன்ப புரியவைக்க பாக்குறான், தோத்து போறான், அசிங்க படுறான், அவனுக்கே புரியுது நம்ப தகுதிக்கு அனிதா மாறி பொண்ணுங்க எல்லாம் செட் ஆகாதுன்னு வேண்டாம்னு சொல்லுறவங்கள தொல்லை படுத்தகூடாதுன்ற பக்குவம் அவனுக்குள்ள இருக்கு, இனி உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு  அவகிட்ட சொல்லிட்டு போறான், அனிதாவுக்கு கதிரோட காதல் புரிய ஆரம்பிக்குது..., ஆனால் அவள் குடும்ப சூழ்நிலை தன் வாழ்கைத்துணைய தேடும் சுகந்திரம் அவளுக்கு இல்லை.  தன்னை கட்டுப்படுத்திகிட்டு விலகிப்போறா அவ அப்பிடியே தன்முடிவுல உறுதியாக இருந்திருந்தா நமக்கு இந்த படம் இவ்வளவு  தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காது....! இதுக்கு பிறகு நடக்கும் தொடர்ச்சியான நிகழ்வுகள், திருப்பங்கள் கடைசியில் ஓரு முடிவுக்கு வரும் கதையில் கதிரும் அனிதாவும் சேர்ந்து இருக்க கூடாதானு நாஸ்டால்ஜியாவை பார்வையாளனுக்கு  உருவாக்கி  படத்தின் முடிவில் சோகத்தில் ஆழ்த்திவிடுகிறார் இயக்குனர். அனிதாவின் இறப்பை  கதிர்னால ஏத்துக்க முடியல கற்பனையில அவ கூட வாழ ஆரம்பிக்கிறான், தனிமையில் அவகிட்ட  பேசுறான், அவளும் பேசுறா ரெண்டு பேரும் சேர்ந்து வாழும் அந்த உலகம் எவ்வளவு  அழகு, இனி எந்த சமூக காரணங்களும் அவங்கள பிரிக்க முடியாது  அங்கு சரி ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கட்டும். 

யுவனின் இசையும் நா.முத்துக்குமாரின் வரிகளும் சேர்ந்து இந்த படத்தில் உருவான பாடல்கள்  எப்போது கேட்டாலும் மனம் கணத்து விடும்,    "நினைத்து நினைத்து பார்த்தேன்",   "கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை",    "காணகாணும் காலங்கள்" மேல சொன்ன  எல்லா பாடல்களும்  வெறும் வார்த்தைகள் இல்லை எதோ ஓரு இடத்தில் நினைவுகளாய்  நம்மை வருடிச்செல்லும். ரவி கிருஷ்ணாவும், சோனியா அகர்வாலும் இயல்பா நடிச்சு இருகாங்க படத்தின் பெரிய பலம்  இவங்க ரெண்டு பேரோட performens. காமத்தை  காதலுடன் கலந்து விரசம் இல்லாம காட்டிருப்பாரு செல்வராகவன், கதைவசனம் சொல்லவே வேணாம், கதிருக்கும் அனிதாவிற்கு இடையிலான சம்பாஷணை எல்லாமே இயல்பா, உணர்வு பூர்வமா இருக்கும். 

உலக சினிமா, உள்ளுர் சினிமானு நூற்று கணக்குல பார்த்தாச்சு, எந்த படத்தை பார்த்தாலும் நிறை, குறைய தேடிபாக்குறது தான் வேலை, மாஸ் ஹீரோக்களின் சமீபத்திய மசாலா படங்களை  பார்க்கவே முடிவதில்லை நல்ல சினிமாக்களின் தாக்கத்தால் ரசனை திறன் மேம்பட்டது தான் காரணம், அப்பிடி இருக்கும் போது  14 வருஷத்துக்கு முதல் பார்த்த படம் அப்போ பிடிச்சு இருந்திச்சி அதே பீல் இப்ப இருக்குமான்னு சந்தேகத்துல தான் 7/G பார்த்தேன் (இந்த கட்டுரை எழுதுறதுக்காக) படம் முடியும் போது அழுதுட்டேன் ! ம்ம்ம்ம்ம்....  உணர்வுகளுடன் பேசும் படம் எந்த வரையறைக்கும்  உட்படுவதில்லை.
நரேஷ் 

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I