மலரும் நினைவுகள்

ஒரு நாள் சொக்கன் முனியாண்டியுடன்  முன்னால் காதலியின் குழந்தையை 
பார்க்க அவள் வீட்டுக்கு போயிருந்தான். வரவேற்பரையில் அமர்ந்தபடி மூவரும்  பேசிக்கொண்டிருந்தார்கள். டிவியும் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் டீ போட்டு கொடுத்தால். சுவைத்து குடித்தவண்ணம் பேச்சுகளுக்கு இடையே நிலவிய நிசப்தத்தில் மூவரினதும் பார்வையும் டிவியின் பக்கம் திரும்பியது அப்பொழுது பொண்ணுகளை நம்பாதீங்க, ஏமாத்திடுவாளுக, ஆண்கள் பாவம் போன்ற முத்தான கருத்துக்களை கொண்ட ஓரு கும்மாங்குத்து தத்துவ பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. இவனை  சந்தர்ப்ப சூழ்நிலையால் கழட்டிவிட்டு போய்விட்ட காதலியுடன் இந்த பாடலை பார்க்க நேர்ந்த தர்மசங்கடமான சூழ்நிலை சொக்கனுக்கு. என்னடா இப்போவா இந்த கருமாந்திரம் போகணும். அவளை குத்தி காட்டுறமாதிரி இருக்குமேன்னு எண்ணி. பாட்டின் அர்த்தம் புரியாத மாதிரி பாசாங்கு செய்து நிலைமை சரி செய்ய முயற்சித்து  கொண்டிந்தான். அப்பொழுது தான் அந்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்தது. திடீரெனெ அவளும் அதே பாடலை ஹீரோவுடன் சேர்ந்து உரத்த குரலில் கத்திபாட ஆரம்பித்துவிட்டால். அதை கேட்ட சொக்கனுக்கு சினம் தலைக்கேறி "அடிங் கொத்தானு"  டீ கப்பை  தூங்கி மண்டையில் ஒன்னு போடலாம்னு தோன்றியது பிறகு நோ, அது தப்பு நான் தான் நல்லவனாச்சே எந்த காரணம் கொண்டும் வன்முறையில் ஈடுபடக்கூடாதுனு தானும் அவளுடன் சேர்ந்து உச்சஸ்தாயில் கத்தி பாடஆரம்பித்தான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த முனியாண்டி என்ன கருமண்டா இதேல்லாமுன்னு!? மூஞ்சுல காரித்துப்ப ஒரே அமர்க்களம்தான். 

நரேஷ் 10-01-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I