வைல்ட் வேஸ்ட் தோட்டம்

சவூதிக்கு வந்த பிறகு இரண்டு விடயத்தை இழந்தேன். ஒன்று மண்வாசம் மற்றையது
பெண்வாசம். இதற்கு தவறாக
அர்த்தம் கற்பித்து கொள்ளவேண்டாம். நம் நாட்டில் போல பெண்களையே இங்கு பார்க்க முடியாது. நம் ஊர்
பஸ்சில் மூன்று கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தாலே அந்த குறை தீர்ந்து விடும். குமரி, முதல் கிழவி வரை சுற்றி இருக்கும். இங்கு ஒரே தாடியும் மீசையும் தான். சரி விடுங்கள். இதுவல்ல நான் சொல்லவந்த விடயம்.

மரம், செடி, கொடி, புல், பறவை இப்படி எதுவும் இலகுவில் கண்ணில்படாத பாலைவன தேசம் இது. பூங்காக்களுக்கு சென்றால் பார்க்கலாம். தினசரி வாழ்வில் அதுவும் சாத்தியப்படாது.  

என் அறையிருக்கும் ஆறு மாடி கட்டிடத்தின் உச்சியில்  சப்பாத்தி
கள்ளிச் செடியும், கற்றாழையும் வளர்க்கிறேன். அனல் அடிக்கும் வெயிலுக்கு இதுமட்டும்தான்
தாக்குப் பிடிக்கும். தண்ணிரை ஒரு 
கிளாசில் எடுத்து காட்டினால் போதும். 
ஊற்றக் கூட தேவையில்லை. ரொம்ப 
நல்ல தாவரம்! 

இன்று என்னுடைய இந்த வைல்ட் வேஸ்ட் தோட்டத்தில் சில ஒழுங்கு படுத்தல்கள் செய்தேன். இனி வருடம் முழுவதும் இதுதான் என் அமேசன் காடு!

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I