திசைகாட்டி

மனிதன் திசைகாட்டியை கண்டு பிடிக்கும் வரைக்கும் நெடும் பயணங்கள் சென்று
அதே இடத்துக்கு மீண்டும் திரும்பி வருவது சாத்தியமில்லாமல் இருந்தது. இருந்தாலும் மனிதன் புதிய உலகை தேடி பயணம் செய்து கொண்டே இருந்தான். அக்காலகட்டத்தில் நட்சத்திரங்களை அடையாளமாக வைத்து குறிப்பிட்ட திசையை நோக்கி பயணம் செய்தார்கள், ஆனால் வருடம் முழுவதும் அவை ஒரே இடத்தில் இருப்பதில்லை.
புவி சுழற்சிக்கு ஏற்ப அவைகளின்
நிலையும் மாறுபடும். மாற்று வழி தேவைப்பட்டது. பறவைகளை திசையை அறிந்து கொள்ளுவதற்கு பயன்படுத்த தொடங்கினார்கள். கடல் பயணம் செய்பவர்கள் தங்களுடன் காகங்களை கூண்டில் அடைத்து கொண்டுச் செல்வார்கள். நடு கடலில் தொலைந்து விட்டால், அவற்றை திறந்து பறக்க விட்டு அது சென்ற திசையை பின் தொடர்ந்து செல்வார்கள். அதன் மூலம் நிலத்தை கண்டடைய முடிந்தது.
பறவைகளில் காகத்தை தேர்ந்தெடுக்க காரணம், அவற்றின் உயிர்காத்து வாழும் திறன் தான். எந்த உணவை கொடுத்தாலும்  உண்ணும், குளிர் சூடு என எவ்வித தட்பவெப்ப சூழலிலும் வாழும்,
இலகுவாக பிடிக்கவும் முடியும்,
மற்றும் மனிதனைக் கண்டு மிரண்டும் போகாது. தீவுகளில் வாழ்ந்த மக்கள் காகத்தை கண்டால், யாரோ விருந்தினர்
வர போகிறார்கள் என்று சொல்லும் வழக்கம் அப்படித்தான் வந்தது என்பது சுவையான தகவல். 

11 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சீனர்களால் திசைகாட்டி கண்டு பிடிக்கபட்டிருக்க கூடும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.
12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் மேற்கு ஐரோப்பாவில் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. திசைகாட்டி மட்டும் கண்டு பிடிக்காமல் போயிருந்தால், மனிதன் புதிய நிலங்களை கண்டடைய நீண்ட காலம் சென்றிருக்க கூடும். இன்று நட்சத்திரதில் ஆரம்பித்த கூகுள் மெப்பில் வந்து நிற்கிறோம்.

 (படத்தில் இருப்பது சீனர்களால்
 11ஆம் நுற்றாண்டில் கண்டுப்பிடிக்கபட்ட திசைகாட்டி)

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I