சாமிக்கண்ணும் நானும் !

பள்ளிகாலத்தில் ஒரு நண்பன் இருந்தான். சிறந்த பக்திமான், ஒழுக்க சீலன், அநியாயத்திற்கு நல்லவன். இப்படி பல சிறப்புகளை உடையவன். 
உதாரணத்திற்கு ஓர் சம்பவத்தை குறிப்பிடுகிறேன். அப்பொழுது நான் சொல்வது உங்களுக்கு புரியும்.

ஒரு நாள் ரஜனிகாந்தின் "சிவாஜி"
படம் வெளியான புதிதில் பார்ப்பதற்கு நானும், அந்த  நல்லவனும், இன்னொரு நண்பனும் தியேட்டர் போயிருந்தோம்.
 " பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புன்னகையோ மவ்வல் மவ்வல்"
பாட்டிற்கு ஸ்ரேயா சிக்கனமாய் மறைக்கபட்ட மேலாடையில் கொங்கைகள் குலுங்க, குலுங்க ஆடிக்கொண்டிருந்ததை, 
இந்திரியம் வெளியேறாத குறையாக 
வாயை ஆ..! வேன பிளந்து ரசித்து கொண்டிருந்தோன். பிரமாண்ட திரையில் அந்த அழகியின் வளைவு நெளிவுகள், ஏற்ற இறக்கங்கள் பிஷ்டத்தின் மென் அசைவுகள் எல்லாம் சேர்ந்து என்னை கிறங்கடித்து கொண்டிருந்தது. நான் பாடல் காட்சியின் ஒரு பிரேமை கூட தவறவிடுவதாக இல்லை. இடைக்கிடையில் ரஜனி தனியே ஆடும் போதுமட்டும் கண்களை சிமிட்டி கொண்டோன். தற்செயலாக நான் திரும்பி என்பக்கத்தில் அமர்ந்திருந்த நல்லவனை பார்த்தேன். தலையை காணவில்லை. எங்கே என தேடிய பொழுது அவன் முகத்தை தன் கால்களிற்கு இடையில் புதைத்தபடி இருந்தான். அவனின் செய்கையை பார்த்து குழப்பி போனேன்.  

"குழப்பத்தில் டேய் மச்சா என்னடா  பண்ணுற?, அங்க பாரு ஸ்ரேயாவ செம்மயா இருக்காடானு" சொல்ல, அவன் இல்லை இதெல்லாம் பார்க்ககூடாது. பாவம். நீங்க பாருங்கனு சொன்னான் (ஆமாம். வாங்க, போங்கனு மரியாதையாதான் பேசுவான். பன்மையில் விழிக்க மாட்டான்) நான் அவனை பற்றி அறிந்திருந்தபடியால் கட்டாயப்படுத்தவில்லை. 

நானும், மற்ற நண்பனும் ஷங்கரின் பாய்ஸ் பட நாயகர்கள் மாதிரி, கலவியை பற்றி தீவிரமா பேசி கொண்டும்.
டீன்ஏஜில் எப்படி உய்வது தென்று  
மிக தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கும் பொழுதுகளில்  அவன் மட்டும் "அந்நியன்" பட அம்பி மாதிரி தனி பாதையில் போய்க்கொண்டிருந்தான். 

ஒரு நாள் "ஏன்டா இப்பிடி இருக்க, உனக்கு இதெல்லாம் ஏன் பிடிக்காதுனு" வினாவிய பொழுது, தான் துறவியாக போவதாக சொன்னான். உங்களை போன்று நான் லெளகீக வாழ்க்கையில் உழல முடியாது. அது பாவம், கடவுளுக்கு விரோதமான செயல். அவருக்கு ஊழியம் செய்து மாய்ந்து போவதே தன்பிறப்பின் நோக்கம் என்றான். அப்பொழுது அவன் தலைக்கு பின்னே ஒளிவட்டம் ஒன்று மின்னி மறைந்தது. நான் மிக பயபக்தியுடன் அவனை பார்த்தேன். 

பாடசாலை நாட்கள் முடிந்து. பல வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் ஓர் நாள் எதிர்பாராத விதமாக சந்தித்த பொழுது. அவன் ஒரு ஆம்பலுடன் காதலுற்று, திருமணமும் முடித்திருந்த செய்தியை தெரிந்து கொண்டேன். கூடிய சீக்கிரத்தில் குவா, குவா சத்தம் கேட்பதற்கான அறிகுறியும் புலப்பட்டது. ஒரு கணம் நான் 
"டேய் சாமிக்கண்ணு நீயா இது" 
என்று ஆடிப்போய்விட்டேன். 

நானும், என்னை போலவே தன் கையே தனக்கு உதவி என்று வாழ்ந்து கொண்டிருக்கும் என் நண்பனும் இன்றும் சாமிகண்ணை நினைவு கூறும் பொழுதுகளில். ஸ்ரேயா தோன்றி ஒரு குலுக்கு குலுக்கி விட்டு  மறைந்து போகிறாள்!

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I