கிறுக்கனின் கையேடு

மனம் உடைந்து சோர்வாக இருக்கும் 
ஒரு தருணத்தில் உங்களுக்கு வாழ்வின் மீதான பிடிப்பும் நம்பிக்கையும் அற்று போகும் இல்லையா? பசிக்காது, 
ஓர் சிறந்த நகைச்சுவை காட்சியை 
பார்த்து சிரிக்க இயலாது போகும் தருணத்தை கட்டாயம் வாழ்வின் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் 
கடந்து வந்திருப்பீர்கள். 
இதே போல அடிக்குமேல் 
அடிவிழும் ஒரு மோசமான 
நாளில் இதயம் பாரமாகி, மண்டை வெடித்துவிடும் நிலையிலிருக்கும் நேரத்தில் அதிகமாக பசிக்கும். சாதாரண நகைச்சுவைக்கும் கிளர்ந்தெழுந்து சிரிப்பீர்கள். எதையோ கடந்து வரவும், மறந்து விடவும் தீவிரமாக முயற்சிப்பீர்கள். பாவம்! அதை உங்களிடம் 
இருந்தே மறைத்து கொள்வீர்கள்.
அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்தும், முடியும் என்பதாக நம்புவீர்கள்.    

ஜோக்கர் படத்தின் நாயகன் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகும் 
போது வெடித்து கதறி அழுவதற்கு 
பதிலாக உரக்ககத்தி சிரிக்க ஆரம்பித்து விடுவான். அது அவனை மீறி நிகழும் ஒன்று. ஒரு வேளை கண்ணீராக வெளிப்பட்டிருந்தால் அவன் மனப்பாரம் குறைந்து சரி போயிருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் புறக்கணிப்புக்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாகும் 
போதும் விழுந்து புரண்டு சிரிக்க ஆரம்பித்து விடுவான். கவனிக்க; அது மகிழ்ச்சியின் வெளிப்பாடு அல்ல!

சிலர் அதிகமாக கோபப்பட்டு 
அல்லது வேதனையடைந்து அதற்கு காரணமானவர் மீது காட்டமுடியாது 
போகும் போது, கையில் கிடைப்பதை 
போட்டு அடித்து உடைப்பார்கள், சுவற்றில் முரட்டுத்தனமாக குத்தி கொள்வார்கள், இல்லையேன்றால் தங்களை தாங்களே காயப்படுத்தி இரத்தத்தை கண்டு அமைதி அடைவார்கள். சிலர் ஒருபடி மேல சென்று வாழ்வை முடித்து கொள்வார்கள். நான் உடலை வருத்தி உடற்பயிற்சி 
செய்ய ஆரம்பித்து விடுவேன். இன்னும் சில இத்யாதிகளும் 
உண்டு. அந்த அழுத்தத்தை எதோ ஒரு வகையில் வெளியேற்றி ஆகவேண்டும் இல்லையா? 
யோசித்து பாருங்கள் இவற்றில் எதோ ஒன்றை நீங்களும் செய்யக்கூடும். 

இந்த உலகத்தில் உள்ள எந்த ஒரு மிருகத்தைவிடவும் மனிதன் மோசமான விலங்கு! ஆதியில் நம்முடன் வாழ்ந்த சக மனித இனமான நியாண்டதால் மனிதர்களை ஈவிரக்கமின்றி கூண்டோடு கருவறுத்தவர்களின் ரத்த சொந்தம் தானே நாங்கள். அவ்வளவு எளிதாக பிறவி குணம் மாறிப்போய்விடுமா என்ன? 
பிஞ்சு குழந்தை கற்பழித்து கொல்லப்படுகிறது, நித்தமும் கடவுளின் பெயரால் நிகழும் யுத்தத்தில் நூற்று 
கணக்கானவர்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். 
ஜாதியின் பெயரால் பக்கத்து வீட்டுக்காரனையே வெட்டி 
கொன்று கொண்டிருக்கிறோம். 
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். நீண்ட பட்டியலே இருக்கிறது. வன்முறை 
நம் இரத்தத்தில் ஊறிய ஒன்று. மோசமான வெறிபிடித்த மிருகம் நமக்குள் உறங்கி கொண்டிருக்கிறது. அது வெளிவர தக்கசமயம் பார்த்து கொண்டிருக்கும். சுயஅறநெறிகளும், அரசாங்க நிறுவனமும், சட்ட இயந்திரமும் இல்லையென்றால் இந்நேரம் எல்லோரும் ஒருவரை ஒருவர் கழுத்தை கடித்து ரத்தத்தை சுவைத்து கொண்டிருப்போம்.  

இந்த உலகில் உங்களுக்கு முன்பு இரண்டு தேர்வுகள் ஓன்று போராடி பார்த்துவிடுவது மற்றையது புலம்பிக்கொண்டுதிரிவது. 
இதைவிட இலகுவானதும் 
கடினமானதுமான மூன்றாவதாக தேர்வும் உண்டு. மரணித்துவிடுவது. அதிலும் ஓர் குறை, எல்லாவற்றிக்கும் அது தீர்வாக அமைந்துவிடும் என்று சொல்வதற்கு எம்மிடம் எந்த உத்தரவாதமும் இல்லை. மரணத்திற்கு பின்பு நமக்கு காத்துக்கொண்டிருப்பது இதைவிட மோசமானதாகவும் இருக்கலாம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I