தேனீ

பூச்சி வகைகளில் தேனீ மட்டுமே மனிதனுக்கு பகுதியளவில் கட்டுப்பட்டது. ஆடு, மாடு போல அதனையும் நாம் தோட்டத்தில் வளர்க்க ஆரம்பித்து விட்டோம். கொத்து வாங்கிக் கொண்டும் வளர்க்க காரணம் தேனின் சுவைதான். தேன் என்றால் யாருக்கு தான் பிடிக்காது, இயற்கையான, சுவையான, ஆரோக்கியமான உணவு. தேனை சாப்பிடவும், உடலில் பூசிக் கொள்ளவும் முடியும். இரண்டு வழிகளிலும் உடலுக்கு நன்மை செய்யக் கூடியது. அதிலும் கருப்பு தேன் என்றால் மேலும் சிறப்பு.

சுவையான தேனை நமக்கு தரும். இல்லை…., நாம் அவற்றிடம் இருந்து திருடிக் கொள்ளும், தேனீயின் வாழ்க்கை தேனை விட தித்திப்பானது. தனிப் புத்தகமாக எழுதும் அளவுக்கு விஷயம் இருக்கிறது. சில சுவாரஸ்யமான தகவல்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். அதற்கு முன்பு தேனீயிடம் வெறுப்பைக் காட்டாதீர்கள். பாவம், அவை விரும்பி தாக்குவதில்லை. நம்மை கொத்திய உடன் அதுவும் இறந்து விடும்

மனிதர்களின் மூளையுடன் ஒப்பிட்டால் தேனீக்களுக்கு அளவில் மிகச் சிறிய மூளை தான் உள்ளது. அதன் அளவு 0.4 - 0.6  மில்லி மீட்டர் மட்டுமே, ஆனால் சூப்பர் கம்ப்யூட்டர் அளவுக்குத் திறன் வேகம் கொண்டது. தேனீக்கு பத்து லட்சம் நியூரான்கள் கொண்ட எளிய மூளை. நமக்கு பத்தாயிரம் கோடி நியூரான்கள் கொண்ட மூளை. இதை நாம் எல்லோரும் கொஞ்சம் சரி உருப்படியாக பயன்படுத்துகிறோமா என்பது சந்தேகம் தான்.

நியூரான்கள் (Neurons) என்றால் என்னவென்று சுருக்கமாகப் பார்த்து விடலாம். நியூரான்கள், நரம்பு கலங்கள் (nerve cells) என்றும் அழைக்கப்படும். இவை மூளையினதும், நரம்பு தொகுதியினதும் அடிப்படை பகுதியாகும். வெளி உலகத்தில் இருந்து வரும் உணர்வுத் தூண்டுதல்களை பெற்று, இயக்கும் செய்திகளை தசைகளுக்கு அனுப்பும் வேலைக்குப் பொறுப்பானது. (இப்போதைக்கு இது போதும்.)

பத்து மைக்ரோவாட் சக்தி தேனீயின் மூளையை இயக்கப் போதுமானது. (மைக்ரோ வாட் என்பது ஒரு வாட் சக்தியின் பத்து லட்சத்தில் ஒரு பாகம்) அதன் கணக்கிடும் வேகம் 10 டெர்ராஃப்ளாப் (Terraflop) இன்றைய சூப்பர் கம்ப்யூட்டரை விட ஆயிரம் மடங்கு செயல் திறன் மிக்கது. தேனீயின் மூளையில் பதியப்பட்டுள்ள பிரதானச் செய்தி. தேனை இலகுவாகவும், அதிகமாகவும் தேடிச் சேமிக்க வேண்டும் என்பதே. அதற்கு எங்கு அதிக தேன் கிடைக்கும்? எந்த இடங்களில் உள்ள மலர்களில் எல்லாம் தேனை ஏற்கனவே சேகரித்து விட்டோம். என்பதை நினைவில் வைத்துக் கொள்கிறது.

தேனீக்களால் பார்க்க, நுகர, பறக்க, நடக்க, சமநிலைப் படுத்திக் கொள்ள (balance) முடியும். சூரியனின் உதவியுடன் திசையை அறிந்து  வழித் தவறாமல் நெடும் தொலைவுக்குப் பறந்து களைப்பின்றி மீண்டும் தேன் கூட்டை வந்தடைந்து விடமுடியும்.தேன் அதிகமாகக் கிடைக்கும் இடங்களை கணிக்க முடியும். இளம் வேலைக்கார தேனீக்களுக்கு காற்றில் நடனமாடிக்கொண்டே ஒலியெழுப்பி அந்த தகவலை சங்கேதம் மூலம் பரிமாறிக் கொள்ள முடியும். அபாயம் என்று உணர்ந்தால் எதிரிகளை தாக்க முடியும்.

தேன் கூட்டை புனரமைக்க, இறந்த அங்கத்தவர்களையும், குப்பைகளையும் அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்துக் கொள்ள, கூட்டை பாதுகாக்க, புதிய அறைகளை உருவாக்க, குழந்தை தேனீயை பாதுகாத்து வளர்க்கவும், நித்தமும் தேடிக் கொண்டு வரும் அமிர்தத்தை (Nector) தேனாக மாற்றி சேமிக்கவும் செய்கிறது. கூட்டில் அங்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டால், பிரிந்து சென்று புதிய கூட்டினை உருவாக்கிக் கொள்ளும். இவற்றை எல்லாம் சூழலின் தூண்டுதலுக்கு ஏற்ப சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கிறது.

இத்தனை காரியங்களையும் அந்த சிறிய மூளையின் உதவியுடன் தான் செய்கிறது.

தேனீக்களை பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்.

ன்ராட்டிக்காவை தவிர்த்து உலகம் பூராகவும் 20,000 வகையான தேனீக்கள் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

ராசரியாக ஒரு சிறிய தேன் கூட்டில் இருபது ஆயிரம் தேனீக்களும். பெரிய கூடு என்றால் ஒரு லட்சம் தேனீக்கள் வரைக்கும் வசிக்கும். அவற்றில் ஒரு ராணி, நூற்றுக் கணக்கான ஆண் தேனீக்கள் (Drones), ஆயிரக் கணக்கான வேலைக்கார தேனீக்கள் அடக்கம். ராணி தேனீயினால் ஒரு நாளைக்கு 2000 முட்டைகள் வரைக்கும் இடமுடியும். அவற்றில் கருவுற்ற முட்டைகள் பெண் தேனீயாகவும், கருவுறாதவை பெரமோன் (pheromone) என்னும் உடல் மணத்தின் உதவியுடன் ஆண் தேனீயாகவும் பிறக்கின்றன.

னைத்து வேலைக்காரத் தேனீக்களும் பெண்கள். வேலைக்காரத் தேனீக்களுக்கு முட்டை இட அனுமதிக் கிடையாது. ராணித் தேனீயின் பெரமோன் எல்லாத் தேனீக்களையும் ஒரே குழுவாக சேர்ந்து இயங்கவும், வேலைக்கார தேனீக்கள் முட்டை இடாமலும் தடுக்கிறது. 

ண் தேனீயை ட்ரோன்ஸ் (drones) என்று அழைப்பார்கள். சரியான சோம்பேறிகள், அவர்களுக்கு இருக்கும் ஒரே வேலை ராணி தேனீயுடன் புணர்வது மட்டுமே, அதுவும் எல்லோருக்கும் அந்த அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை. வலிமையான ஆணை மட்டும் தான் ராணி தேனீ தேர்ந்தெடுக்கும். மற்றவை புதிய ராணி வரும் மட்டும் காத்திருக்க வேண்டியது தான்.

ண் தேனீக்களுக்கு இருக்கும் பெரிய கண்கள், ராணி தேனீயை இலகுவாக அடையாளம் கண்டுக் கொள்ள உதவுகிறது. ஆண் தேனீக்கு கொடுக்குகள் கிடையாது. கோடை காலத்தில் வேலைக்கார தேனீக்களின் கவனிப்பில் ராஜ வாழ்க்கை. ஆனால் குளிர்காலத்தில் வெளியேத் தள்ளி கதவை அடைத்து விடும். பாவம் லேஷி பாய்ஸின் கதை அத்தோடு முடிந்தது.

ப்பொழுது நான் சொல்லப்போகும் விஷயத்திற்கு ஒரு ஆணாக மகிழ்வதா, இல்லை துக்கப்படுவதா என்று தெரியவில்லை!? தேனீ உச்சி வானில் தான் புணரும், புணர்ச்சியின் பின்பு ஆண் தேனீ தன் இனப்பெருக்கும் தொகுதியை இழந்து மடிந்து விடும்.

ரு தேனீ தன் வாழ்நாள் முழுவதும் சராசரியா ஒரு தேக்கரண்டி தேனை (5 grams) உற்பத்தி செய்கிறது. இதற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட பூக்களுக்கு விஜயம் செய்ய வேண்டும். ஒரு கிலோ கிராம் தேனை உற்பத்திச் செய்ய, கிட்டத்தட்ட மூன்று தடவை உலகத்தை சுற்றி வரக்கூடிய தூரத்தை தேனீக்கள் பறந்து கடக்கின்றன. அதிலும் தேனீன் சுவை மறுபடாமல் இருக்க, குறிப்பிட்ட பூக்களில் இருந்து மட்டும் அமிர்தத்தை (Nector) சளைக்காமல் தேடிச் சேர்க்கும்.

ங்கள் தோட்டத்திற்கு அதிக தேனீக்களை வரவழைக்க, பல வகையான நிற தாவரங்களை வளருங்கள். பொதுவாக அவைகளுக்கு நீல நிறம் தான் பிடிக்குமாம். கொத்து கொத்தாக பூக்கும் நீல நிற மலர்கள் என்றால் கொள்ளை பிரியம்.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I