பண்டைய எகிப்து

பண்டைய எகிப்தில் ஆண்கள் வழுக்கை தலையுடன் இருப்பதை கவனித்து உள்ளீர்களா? "த மம்மி" என்ற பிரபலமான ஹாலிவுட் படத்தை பார்க்கும் பொழுது 
நான் யோசித்தது உண்டு. ஏன்? அரசன் தொடக்கம் பூசாரி, குடியானவர்கள் என எல்லோரும் நன்றாக மழித்த வழுக்கை தலையுடன் இருக்கிறார்கள் என? ஒருவேளை அவர்களின் மத நம்பிக்கை இல்லாவிட்டால் கலாசாரமாக இருக்க கூடும் 
என்று எண்ணிக்கொண்டேன்.
இன்னொரு விடயம் ஆண்கள் 
மட்டும் அல்ல பெண்களும் கூட மொட்டையடித்து கொள்வார்கள். அவர்கள் கைவசம் இருக்கும் செயற்கையான கூந்தலை 
அணிந்து கொள்வதால் நமக்கு 
அது வெளித்தெரிவதில்லை. 
சீஸரையே தன் அழகில் 
கிறங்கடித்த பேரழகி கிளியோபேட்ரா கூட இதற்கு விதிவிலக்கில்லை. 

சரி இப்பொழுது அதற்கு என்னவென்று? 
நீங்கள் கேட்பது புரிகிறது. 
இந்த பழக்கத்தின் பின்னணியில் சுவாரசியமான காரணமுண்டு. பண்டைய எகிப்தில் 
பேன் தொல்லை அதிகமாம். அதிலிருந்து தப்பித்து கொள்ளதான் கேசத்தை மழிக்கும் பழக்கம் வந்தது. உலகமே வியந்து அதிசயிக்கும் பிரமிட்டை கட்டிய மக்களுக்கு பேனுக்கு ஏதேனும் மருந்து கண்டு பிடிப்பது ஒன்றும் கடினமான காரியமாக இருந்திருக்காது. 
மயிரை மயிராகவே எண்ணி கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள் போல !?

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I