காதலடி நீ எனக்கு



இப்பொழுதெல்லாம் நாம் சென்ற பேருந்து பயணம் நினைவுகளில் அடிக்கடி வருகிறது. ஜன்னல் ஓரமாக இருவரும் அமர்ந்திருந்தோம். இளம்காலை பொழுது இதமான காலநிலை, சில்லேன காற்று முகம் தீண்டி சென்று கொண்டிருந்தது. என் தோளில் சாய்ந்தப்படி கண்ணயர்ந்து விட்டிருந்தாய். காற்றில் கலைந்த உன் நெற்றிமுடி என்முகத்தை வருடி கொண்டிருந்த சமயத்தில் ஒருபுறம் மனதில் ஆயிரம் குழப்பங்களும் கேள்விகளும் அலைபாய்ந்து கொண்டிருந்தன நம் இருவருக்குமான உறவு என்ன? நான் எதை நோக்கி உன்னை இழுத்து செல்கிறேன்? என குற்றஉணர்ச்சியில் தடுமாறி கொண்டிருந்தேன். இதற்கு நடுவில் உன் கலைந்த கூந்தலும் நானும் பேசிக்கொண்டிருந்தொம். அது காற்றின் மேல் பழியை போட்டு மென்வருடல்களால் என்னை சீண்டி கொண்டிருந்து. அதனை சரி செய்யும்
போது எங்கள் சண்டையை நீ கவனித்து விட்டாய். அத்தருணத்தில் என்னை
நீ பார்த்த பார்வை நினைவு இருக்கின்றதா? ம்ம்ம்ம்ம்...., அந்நொடிதான் நான் விழுந்தேன்! ஆடைக்கலைந்த தருணத்தைவிட அக்கணம் தந்த இன்பவலி இப்பொழுது வலியாய் மட்டும் எஞ்சி நிற்கிறது. 

நம்பிய இடத்தில் தொலைந்து போனோம் இருவரும். சில நேரம் ஓரு அழைப்பு, ஓரு குறும்செய்தி, ஓரு சந்திப்பு நம்மை ஒன்று சேர்க்கலாம். யார் ஆரம்பிப்பது? நான் முன்பை விடக்குழப்பத்தில் இருக்கிறேன். முயன்று தோற்று போனதால் கூட இருக்கலாம். காலம் மாறலாம், மாறாமல் கூட
போகலாம் ஆனால் உன்னை முன்பைவிட அதிகமா நேசிக்க ஆரம்பித்து விட்டேன். நான் இப்பொழுது எல்லாம் கடவுளிடம் வேண்டுவது ஒன்றை மட்டும்தான், கடைசியில் நீயும் ஓரு நாள் பாதையில் கைகுழந்தையுடன் என்னை கடந்து போய்விடக்கூடாதென....!

நரேஷ் 26-09-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I